"விவிலியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி: 204 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
உலகத்திலேயே திருவிவிலியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயர்க்கப்பட்ட நூல். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான விவிலியப் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 
விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யினர், [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|சீர்த்திருத்தர்கள்]] ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக [[யெருசலம்|யெருசலேமின்]] இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் ''இணைத் திருமுறை'' நூல்களை (''The Deuterocanonical books'') கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவை என்று ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் இந்நூல்கள் யூதமத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளை தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இல்லை. மேலும் இணைத் திருமுறை நூல்கள் சேர்க்கப்படுவதாலோ அல்லது அவை நீக்கப்படுவதாலோ கிறிஸ்தவத்தின் அடிப்படைகள் மாற்றமடைவதில்லை.
 
== கிறித்தவ விவிலியம் ==
[[படிமம்:Tamil bible Printed 1715.jpg|thumb|100px|தமிழில் பெயர்க்கப்பட்டு 1715 இல் [[தரங்கம்பாடி|தரங்கம்பாடியில்]] அச்சிடப்பட்ட விவிலியத்தின் முதல் நூலாகிய [[தொடக்க நூல் (நூல்)|தொடக்க நூலின்]] முதல் பக்கம் [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]] [[1968]] விழா மலரில்]]
[[படிமம்:Genesis in a Tamil bible from 1723.jpg|thumbnail|100px|right|<center>1723 இல் [[தரங்கம்பாடி]]யில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் விவிலியம்</CENTER>]]
இது உலகம் படைக்கப்பட்டது வரலாறு தொடங்கி, இயேசு இவ்வுலகிற்கு வரும் வரையானா காலப்பகுதியில் கடவுள் மக்களுடன் தொடர்பு கொண்ட முறைகளையும், இஸ்ரயேலரின் வரலாற்றையும் கூறுகிறது. இதில் காணப்படும் ''இணைத்திருமுறை'' நூல்களைச் சில கிறித்தவப் பிரிவினர் அதிகாரப்பூர்வமாக ஏற்பதில்லை.
 
* '''பொதுவான நூல்கள்''': இவை எல்லா கிறிஸ்தவ பிரிவினரின் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலும் காணப்படும் நூல்களாகும். மொத்தம் 39 நூல்கள் இதில் அடங்கும். சீர்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை மட்டுமே தமது பழைய ஏற்பாட்டில் அதிகாரப்பூர்வமானவையாக ஏற்கின்றன.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1453778" இருந்து மீள்விக்கப்பட்டது