"குருத்து ஞாயிறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

114 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (திருத்தம்)
என்று கூறி ஆர்ப்பரித்தனர்.<ref name=Boring256 /><ref name=CEvans381 /><ref name=M133 /> இப்பாடல் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] [[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] என்னும் நூலில் காணப்படுவது (காண்க: திபா 118:25-26).
 
[[யோவான்|யோவான் நற்செய்திப்படி]] மக்கள் "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவுக்கு எதிர்கொண்டுபோனார்கள்" (காண்க: [[யோவான்|யோவான் 12:13)]]. இவ்வாறு, குருத்தோலைகளை அசைத்து, வழியில் துணிகளை விரித்து, இலைதழைகளைப் பரப்புவது ஓர் ஆழ்ந்த பொருள் படைத்த செயலாக மாறியது. [[இயேசு|இயேசுவை]] மக்கள் கடவுள்பெயரால் வந்த மெசியா என்றும் தங்கள் அரசர் என்றும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்றாலும் விரைவிலேயே அவர் இறக்கவேண்டும் என்று குரல் எழுப்பவும் தயங்கவில்லை. இயேசுவை இன்று தம் மெசியாவாக ஏற்பவர்களும் அவரை மாட்சியுடைய மன்னராக மட்டுமே பார்க்காமல், துன்பங்கள் மற்றும் சாவு வழியாக உலகிற்குப் புத்துயிர் வழங்கியவராகக் காணவேண்டும் என்பது இந்நிகழ்ச்சியின் பொருள்.
 
== கிறித்தவ வழிபாட்டில் குருத்து ஞாயிறு ==
|}
 
மேற்குத் திருச்சபையில் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபை]], [[ஆங்கிலிக்கன்|ஆங்கிலிக்கன் சபை]], [[லூத்தரன்|லூத்தரன் சபை]] ஆகிய கிறித்தவ சமூகங்கள் குருத்து ஞாயிறு கொண்டாட்டத்தைக் கடைப்பிடிக்கின்றன.
 
கத்தோலிக்க சபை வழக்கப்படி, குருத்தோலை கோவிலுக்கு வெளியே அல்லது (குளிர்நாடுகளில்) கோவிலின் தலைவாயிலைத் தாண்டி அமையும் பகுதியில் மந்திரிக்கப்படும். வழிபாட்டை நிகழ்த்தும் குரு சிவப்பு வழிபாட்டு ஆடைகளை அணிந்திருப்பார். எல்லாரும் குருத்தோலைகளைக் கைகளில் தாங்கியிருப்பார்கள். [[இயேசுவின் சிலுவைச் சாவு|இயேசு தாம் துன்புற்று இறந்ததற்கு]] முன்னால் [[எருசலேம்]] நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சி [[நற்செய்தி நூல்கள்|நற்செய்தி நூலிலிருந்து]] பறைசாற்றப்படும். குருத்து ஞாயிறு ஏன் கொண்டாடப்படுகிறது என்பதைக் குரு விளக்குவார். இறைவேண்டலுக்குப் பின் பவனி தொடங்கும். சிலுவை, எரியும் மெழுகுவத்தி கொண்ட விளக்குத்தண்டுகள், தூபக்கலசம் ஆகியவற்றைத் தாங்கி துணையாளர் முன்செல்வர். பின் குரு செல்வார். அவரைத் தொடர்ந்து சிறுவர், பெண்கள், ஆண்கள் என்று எல்லா மக்களும் சென்று தத்தம் இடத்தை அடைவர். பவனியின்போது பாடல்கள் பாடப்படும். குறிப்பாக, "ஓசன்னா" என்னும் குரல் கேட்கும். அச்சொல்லுக்கு [[எபிரேயம்|எபிரேய மொழியில்]] "இறைவா, விடுவித்தருளும்" என்பது பொருள். மேலும் "வாழ்க!" என்பதும் அதன் பொருளாகும். கோவிலுக்கு வெளியே அல்லது முற்றத்திலிருந்து தொடங்கும் பவனி திருப்பீடத்தை அடைந்ததும் திருப்பலி தொடங்கும்.
 
குருத்து ஞாயிறன்று மக்கள் பிடித்திருக்கின்ற குருத்துகள் அடுத்த ஆண்டில் வருகின்ற [[திருநீற்றுப் புதன்]] என்னும் நாளின்போது எரித்து சாம்பலாக்கப்படும். அச்சாம்பல் மந்திரிக்கப்பட்டு மக்களின் தலைமேல் பூசப்படும். [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபை]] வழக்கப்படி இச்சடங்கு இறைவனின் அருளை இறைஞ்சுகின்ற ஒரு வழிபாட்டு நிகழ்வு ஆகும்.
 
கிழக்குத் திருச்சபையில் குருத்து ஞாயிறு "ஆண்டவர் எருசலேமில் நுழைந்த திருநாள்" என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. இது வழிபாட்டு ஆண்டின் முக்கிய பன்னிரு திருநாள்களுள் ஒன்றாகும். புனித வாரத்தின் முதல் நாளாக இது கருதப்படுகிறது. அதற்கு முந்திய நாளாகிய ஞாயிறன்று இயேசு இலாசருக்கு உயிரளித்த நிகழ்ச்சி கொண்டாடப்படும்.
 
;யோர்தான், இசுரயேல் நாடுகள்
யோர்தானிலும் இசுரயேலிலும் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபை]], மரபுவழித் திருச்சபை, கீழைச் சபை, [[ஆங்கிலிக்கம்|ஆங்கிலிக்கன் சபை]] போன்ற கிறித்தவக் குழுக்களைச் சார்ந்த மக்கள் இந்நாள் வழிபாட்டில் பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள். சிறுவர்கள் தம் கைகளில் ஒலிவ மரக்கிளை, ஒலைக் குருத்து போன்றவற்றைத் தாங்கிச் செல்வர். அக்கிளைகளைச் [[சிலுவை]] வடிவில் மடிப்பது வழக்கம். ரோசாப் பூக்களால் சிலுவை செய்வதும் உண்டு. ஒலிவக் கிளையைத் திருநீரில் அமுக்கி அந்நீரைக் குரு மக்கள்மீது தெளிப்பார்.
 
;லாத்வியா நாடு
 
;பிலிப்பீன்சு
இந்நாட்டின் சில பகுதிகளில் குருத்து ஞாயிறு நாடகமாக நடிக்கப்படுகிறது. பவனியின்போது குரு ஒரு குதிரையின்மீது ஏறிகொள்வார். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் குருத்தோலைகளைத் தாங்கிச் செல்லும். சில இடங்களில் பெண்கள் நீண்ட ஆடைகளை வழியில் பரப்புவர். குருத்தோலைகளை மக்கள் வீடடுக்குக் கொண்டு சென்று, வீட்டு வாயிலில் அல்லது சாளரங்களின் வெளியே தொங்க விடுவார்கள்.
 
==திருத்தந்தை பிரான்சிசு குருத்து ஞாயிறன்று வழங்கிய செய்தி==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1453935" இருந்து மீள்விக்கப்பட்டது