மீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
[[பிரெஞ்சுப் புரட்சி]]யின்போது பிரெஞ்சு அறிவியல் அகாதமியால் அனைத்து அலகுகளுக்கும் ஒரே ஒப்பளவை தீர்மானிக்க ஒருங்கிணைக்கப்பட்ட குழு, பதின்ம அமைப்பில் அமைய வேண்டும் என்ற பரந்துரையை அக்டோபர் 27, 1790இலும் நீளத்திற்கான அடிப்படை அலகாக [[வட துருவம்|வட துருவத்திற்கும்]] [[நிலநடுக் கோடு|நிலநடுக் கோட்டிற்கும் இடையேயான]] தொலைவில் கோடியில் ஒரு பங்காகவும்<ref>('decimalization is not of the essence of the metric system; the real significance of this is that it was the first great attempt to define terrestrial units of measure in terms of an unvarying astronomical or geodetic constant.) The metre was in fact defined as one ten millionth of one quarter of the earth's circumference at sea-level.' [[Joseph Needham]], ''[[Science and Civilisation in China]],'' Cambridge University Press, 1962 vol.4, pt.1, p.42.</ref> அது 'அலகு' ([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு மொழியில்]] ''mètre'')என் பெயரிட்டு மார்ச் 19, 1791இலும் பரிந்துரைத்தது.<ref>Paolo Agnoli,''Il senso della misura: la codifica della realtà tra filosofia, scienza ed esistenza umana,'' Armando Editore, 2004 pp.93-94,101.</ref><ref>{{cite web|url=http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k571270/f1.image |title=Rapport sur le choix d'une unité de mesure, lu à l'Académie des sciences, le 19 mars 1791 |language=French |publisher=Gallica.bnf.fr |date=2007-10-15 |accessdate=2013-03-25}}</ref><ref>Paolo Agnoli and Giulio D’Agostini,[http://arxiv.org/pdf/physics/0412078.pdf 'Why does the meter beat the second?,'] December, 2004 pp.1-29.</ref> இதனை 1793இல் கூடிய தேசிய மாநாடு ஏற்றுக் கொண்டது.
=== மீட்டர் துண்டு முன்மாதிரி===
[[படிமம்:Platinum-Iridium meter bar.jpg|thumb|right|250px|1889 ஆம் ஆண்டுமுதல் 1960 ஆம் ஆண்டு வரை, அனைத்துலக மீட்டர் அலகுக்கு அடிப்படையான ''முதல்'' ஒப்பீட்டுத் தர அலகாக பாதுகாத்து வைத்து இருந்த [[பிளாட்டினம்]], [[இரிடியம்]] ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்ட மீட்டர்க் கோல்.]]
1870களில் ஏற்பட்ட துல்லிய தொழில்நுட்பங்களின் பின்னணியில் புதிய மீட்டர் சீர்தரத்தை நிலைநிறுத்த பல பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. 1875இல் நடந்த மீட்டர் மாநாட்டில் (''Convention du Mètre'') [[பாரிசு|பாரிசின்]] தென்மேற்குப் புறநகர்ப் பகுதியான செவ்ரெயில் நிரந்தரமாக [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்]] (BIPM: ''Bureau International des Poids et Mesures'') அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீட்டர் மற்றும் [[கிலோகிராம்|கிலோகிராமிற்கான]] சீர்தரங்களின் முன்மாதிரிகள் கட்டமைக்கப்படும்போது அவற்றை பாதுகாப்பதுடன் தேசிய அளவிலான சீர்தர முன்மாதிரிகளை வழங்கவும் அவற்றிற்கும் மெட்ரிக் அல்லாத அளவை சீர்தரங்களுக்கிடையான ஒப்பளவுகளை பராமரிக்கவும் இந்த புதிய அமைப்பு நிறுவப்பட்டது. இதன்படி 1889இல் எடைகள் மற்றும் அளவைகளுக்கான முதல் பொது மாநாட்டில் இந்த அமைப்பு புதிய முன்மாதிரி மீட்டர் துண்டை வெளிப்படுத்தியது. தொன்னூறு விழுக்காடு [[பிளாட்டினம்|பிளாட்டினமும்]] பத்து விழுக்காடு [[இரிடியம்|இரிடியமும்]] கொண்ட கலப்புலோக சீர்தர துண்டின் இரு கோடுகளுக்கு இடையே பனிக்கட்டியின் உருகுநிலையில் அளக்கப்பட்ட தொலைவு ''பன்னாட்டு முன்மாதிரி மீட்டர்'' எனப்பட்டது.<ref>[[#nistmetre|National Institute of Standards and Technology 2003; Historical context of the SI: Unit of length (meter)]]
</ref>
"https://ta.wikipedia.org/wiki/மீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது