மீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
=== கிருப்டான்-86 உமிழ்வின் சீர்தர அலைநீளம் ===
1893இல், முதன்முதலாக ஓர் சீர்தர மீட்டர் அளவை [[ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்|ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன்]] ஓர் [[குறுக்கீட்டுமானி]] மூலம் அளந்தார். இந்தக் கருவியை உருவாக்கிய மைக்கல்சன் [[ஒளி]]யின் ஒரு குறிப்பிட்ட [[அலைநீளம்|அலைநீளத்தை]] நீளத்தின் சீர்தரமாகக் கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தவராவார். 1925 வாக்கில் [[பிஐபிஎம்]]மில் [[குறுக்கீட்டுமானம்]] மூலம் அளப்பது வழமையாயிற்று. இருப்பினும் பன்னாட்டு முன்மாதிரி மீட்டர் 1960 வரை சீர்தரமாக இருந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற பதினோராவது மாநாடு புதிய [[அனைத்துலக முறை அலகுகள்]] (SI) முறையில் [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] [[கிருப்டான்|கிருப்டான்-86]] [[அணு]]வின் [[மின்காந்த நிழற்பட்டை]]யில் [[ஆரஞ்சு (வண்ணம்)|ஆரஞ்சு]]-[[சிவப்பு]] [[உமிழ்கோடு|உமிழ்கோட்டின்]] 1,650,763.73 [[அலைநீளம்|அலைநீளங்களை]] ஒரு மீட்டராக வரையறுத்தது.<ref name="Marion">{{cite book |last=Marion |first=Jerry B. |title=Physics For Science and Engineering |year=1982 |publisher=CBS College Publishing |isbn=4-8337-0098-0 |page=3}}</ref>
 
=== ஒளியின் வேகம் ===
உறுதியின்மையை குறைக்கும் நோக்குடன் 1983இல் கூடிய அளவைகள் மாநாடு மீட்டரின் வரையறையை மாற்றி [[ஒளியின் வேகம்|ஒளியின் வேகத்தையும்]] [[நொடி (கால அளவு)|நொடியையும்]] கொண்டு தற்போதுள்ள வரையறை அறிமுகப்படுத்தியது :
 
::மீட்டர் என்பது வெற்றிடத்தில் ஒளியால் {{nowrap|{{frac|1|299,792,458}}}} நொடி இடைவெளியில் செல்லும் பாதையின் நீளமாகும்.<ref name="Res1" />
 
இந்த வரையறை வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தை சரியாக நொடிக்கு 299,792,458 மீட்டர்களாக நிலைநிறுத்தி உள்ளது. இந்த வரையறுப்பின் மற்றொரு துணைப்பகுதியாக அறிவியல் அறிஞர்கள் தங்கள் [[சீரொளி]]களை துல்லியமாக அலையதிர்வுகள் மூலம், அலைநீளங்களின் நேரடி ஒப்பிடுதல்களை விட ஐந்தில் ஒருபங்கு குறைவான உறுதியின்மையுடன், ஒப்பிட முடிகிறது. ஆய்வகங்களிடையே ஒரே முடிவுகளைப் பெறுவதை உறுதி செய்யும் வண்ணம் இந்த மாநாட்டில் ஐயோடினால்-நிலைநிறுத்தப்பட்ட [[ஈலியம்–நியான் சீரோளி]] மீட்டரை உருவாக்க "பரிந்துரைக்கப்பட்ட கதிர்வீச்சாக" அறிவிக்கப்பட்டது.<ref name="recommendations" /> மீட்டரை வரையறுக்க பிஐபிஎம் தற்போது ஈலிநியான் சீரொளி அலைநீளத்தை பின்வருமாறு கணக்கிடுகிறது: மதிப்பிடப்பட்ட சார்பு சீர்தர உறுதியின்மை (''U'') of {{val|2.1|e=-11}} உடன் {{nowrap|λ{{sub|ஈநி}} <nowiki>=</nowiki> 632,991,212.58 [[பெர்மி (அலகு)|பெமீ]]}}.<ref name="recommendations" /><ref name="uncertainty">கலைச்சொல் 'சார்பு சீர்தர உறுதியின்மை' அவர்கள் வலைத்தளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது: {{cite web |title=Standard Uncertainty and Relative Standard Uncertainty |work=The NIST Reference on constants, units, and uncertainties: Fundamental physical constants |url=http://physics.nist.gov/cgi-bin/cuu/Info/Constants/definitions.html |publisher=NIST |accessdate=19 December 2011}}</ref><ref>[[#NRC2010|National Research Council 2010]]</ref> இந்த உறுதியின்மை ஆய்வகங்களில் மீட்டரை நிலைநிறுத்துவதில் ஓர் தடையாக உள்ளது. [[அணுக் கடிகாரம்|அணுக் கடிகாரத்திலிருந்து]] பெறப்படும் நொடி அளவில் இருக்கும் உறுதியின்மையை விட பலமடங்கு கூடுதலான உறுதியின்மையுடன் உள்ளது.<ref>[[#NIST2011|National Institute of Standards and Technology 2011.]]</ref> இதனால், ஆய்வகங்களில் மீட்டர் ஈலிநியான் சீரொளியின் {{val|1579800.762042|(33)}} அலைநீளங்களாக ஏற்றுக் கொள்ளபடுகிறது (வரையறுக்கப்படுவதில்லை). இதில் அலை அதிர்வைக் கண்டறிவதில் உள்ள பிழையே உள்ளது.<ref name="recommendations">{{cite web |title=Iodine ({{lambda}}≈633 nm) |publisher=BIPM |url=http://www.bipm.org/utils/common/pdf/mep/M-e-P_I2_633.pdf |work=MEP (''Mise en Pratique'') |year=2003 |format=PDF |accessdate=16 December 2011}}</ref>
 
== SI அளவுகளில் மீட்டரின் கீழ்வாய், மேல்வாய் அலகுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது