பிரான்சிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 65:
 
[[File:Knowledge French EU map.svg|right|thumb|ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரெஞ்சு மொழியறிவு<ref>Source: [http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_en.pdf EUROPA], data for EU25, published before 2007 enlargement.</ref> (பெல்ஜியத்தின் சனத்தொகையில் 40%மானோர் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டோர்.<ref>Native speakers of Dutch living in Wallonia and of French in Flanders are relatively small minorities that furthermore largely balance one another, hence counting all inhabitants of each unilingual area to the area's language can cause only insignificant inaccuracies (99% can speak the language). Dutch: Flanders' 6.079&nbsp;million inhabitants and about 15% of Brussels' 1.019&nbsp;million are 6.23&nbsp;million or 59.3% of the 10.511&nbsp;million inhabitants of Belgium (2006); German: 70,400 in the German-speaking Community (which has [[Municipalities with language facilities|language facilities]] for its less than 5% French-speakers) and an estimated 20,000–25,000 speakers of German in the Walloon Region outside the geographical boundaries of their official Community, or 0.9%; French: in the latter area as well as mainly in the rest of Wallonia (3.414 − 0.093 = 3.321&nbsp;million) and 85% of the Brussels inhabitants (0.866&nbsp;million) thus 4.187&nbsp;million or 39.8%; together indeed 100%.</ref> மேலும் 88%<ref>40%+48%=88%</ref> மக்கள் பிரெஞ்சு மொழியறிவுடையோர்.)]]
 
====லக்சம்பேர்க்====
 
லக்சம்பேர்க்கின் தாய்மொழியான லக்சம்பேர்கிய மொழி மற்றும் ஜெர்மன் மொழி ஆகியவற்றுடன் பிரெஞ்சு மொழியும் அந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாகும். அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் பிரெஞ்சு மொழி முதன்மையாகப் பயன்படுத்தப்படுவதோடு, வெளிநாட்டவர்களுடன் தொடர்பாடுவதற்கான முதன்மை மொழியாகவும் இது உள்ளது. லக்சம்பேர்க்கின் கல்வி முறைமை மும்மொழிகளிலானது. அடிப்படைக்கல்வி லக்சம்பேர்கிய மொழியிலும் பின் ஜெர்மன் மொழியிலும், இரண்டாம் நிலைக் கல்வி பிரெஞ்சு மொழியிலும் நடத்தப்படும். இரண்டாம் நிலைக் கல்வியில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் போன்ற பாடங்களின் மொழியாக பிரெஞ்சு உள்ளது.<ref>{{cite web|url=http://www.men.public.lu/sys_edu/langues_ecole/index.html |title=Ministère de l’Éducation nationale et de la Formation professionnelle / Luxembourg - Quelles langues apprend-on à l'école luxembourgeoise ? |publisher=Men.public.lu |date=2012-10-25 |accessdate=2013-05-25}}</ref> லக்சம்பேர்க் பல்கலைக்கழகம் பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் பாடநெறிகளை வழங்குகிறது.<ref>{{cite web|url=http://wwwen.uni.lu/international/multilinguisme |title=University of Luxembourg - Multilingualism |publisher=N.uni.lu |date=2003-08-12 |accessdate=2013-05-25}}</ref>
 
====இத்தாலி====
 
இத்தாலியின் சிறு பிரதேசமான ஓசுடாப் பள்ளத்தாக்கின் உத்தியோகபூர்வ மொழி பிரெஞ்சு ஆகும்.<ref>{{cite web|url=http://www.regione.vda.it/turismo/la_tradizione/lingue_f.asp |title=Vda.it |publisher=Regione.vda.it |date= |accessdate=21 April 2010}} {{Dead link|date=September 2010|bot=H3llBot}}</ref> இப்பகுதியிலுள்ள இத்தாலிய மொழி பேசா மக்களில் பலர் பிரெஞ்சு மொழியின் ஒரு வழக்கினைப் பேசுகின்றனர்.<ref>http://www.fondchanoux.org/risultatisondage_1_0_555.aspx</ref> எனினும் இம்மொழிப் பிரிவுக்கான சர்வதேச முக்கியத்துவம் குறைவாக உள்ளதால் இவர்கள் பிரெஞ்சு மொழியையே எழுத்துத் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
 
====ஐக்கிய இராச்சியம் மற்றும் கால்வாய்த் தீவுகள்====
 
 
ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய சிறுபான்மை மொழியாகவும் குடிப்பெயர்வு மொழியாகவும் பிரெஞ்சு மொழி உள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் பிரெஞ்சு மக்கள் 300,000 பேர் உள்ளனர். மேலும், ஆபிரிக்காவிலிருந்து ஐக்கிய இராச்சியத்துக்குக் குடிபெயர்ந்தோர் பலராலும் இம்மொழி பேசப்படுகிறது. மேலும், பிரெஞ்சு மொழி ஒரு பிரபலமான வெளிநாட்டு மொழியாகவும் கருதப்படுகிறது. 2006ம் ஆண்டின் ஐரோப்பிய ஆணையக அறிக்கையின்படி, ஐக்கிய இராச்சியத்தின் சனன்த்தொகையில் 23%மானோர், பிரெஞ்சு மொழியில் உரையாட வல்லவராய் உள்ளனர்.<ref>{{cite web|url=http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_en.pdf |title=EUROPA |format=PDF |accessdate=21 April 2010}}</ref>
 
1066ல் ஏற்பட்ட நோர்மன் படையெடுப்பைத் தொடர்ந்து, நவீன மற்றும் நடு ஆங்கிலத்தில் பண்டைய ஆங்கிலம் மற்றும் ஒயில் மொழிகளின் பிரதிபலிப்பைக் காணமுடியும். நோர்மன் மொழி பேசிய இவர்களது தாய்மொழி ஜெர்மானிக் ஆகும். ஐரோப்பாக் கண்டத்துடனான இங்கிலாந்தின் தொடர்புகள் காரணமாக நவீன ஆங்கிலத்திலுள்ள பல சொற்கள் பிரெஞ்சு மூலத்தைக் கொண்டுள்ளன.
 
ஜெர்சி மற்றும் கேர்ன்சியின் உத்தியோகபூர்வ மொழியாக பிரெஞ்சு மொழி உள்ளது. இவ்விரு இடங்களிலும் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் விழாக்களில் பிரெஞ்சு மொழி ஓரளவு பயன்படுத்தப்படுகிறது.
 
===வட மற்றும் தென்னமெரிக்கா===
 
==== கனடா ====
 
[[File:Arret.jpg|right|thumb|கியூபெக் பிரதேசத்தில் காணப்படும் நிறுத்தற் குறியீடு.]]
 
கனடாவில், ஆங்கில மொழிக்கு அடுத்த முதன்மை மொழியாக பிரெஞ்சு உள்ளது. மேலும், இவ்விரு மொழிகளும் அரசாங்க மட்டத்தில் உத்தியோகபூர்வ மொழிகளாய் உள்ளன. கியூபெக் மாகாணத்தின் ஒரே உத்தியோகபூர்வ மொழி பிரெஞ்சு ஆகும். இம் மாகாணத்தில் 7 மில்லியன் மக்கள், அதாவது சனத்தொகையின் 80.1% (2006 கணக்கெடுப்பு) மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். கியூபெக்கின் 95.0%மான மக்கள் பிரெஞ்சைத் தாய்மொழியாகவோ அல்லது இரண்டாம் மொழியாகவோ பேசுகின்றனர். பிரெஞ்சைத் தாய்மொழியாகப் பேசுவோர் உள்ள நகரங்களில் இரண்டாமிடத்திலுள்ள மொன்றியல் நகரம் இங்கேயே அமைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக, இருமொழி மாகாணங்களாக நியூபிரென்சுவிக்கும், மானிட்டோபாவும் காணப்படுகின்றன. நியூபிரென்சுவிக்கின் சனத்தொகையில் மூன்றிலொரு பங்கினர் பிரெஞ்சு மொழி பேசுவோராய் உள்ளனர். ஆட்சிப் பகுதிகளின் (வடமேல் ஆட்சிப் பகுதிகள், நுனாவுட் மற்றும் யூகோன்) உத்தியோகபூர்வ மொழிகளில் பிரெஞ்சு மொழியும் ஒன்றாகும். இவற்றுள், யூகோனில் அதிகளவில் பிரெஞ்சு மொழி பேசுவோர் உள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 4%மாக உள்ளனர். கிழக்கு ஒன்ராரியோ, வடகிழக்கு ஒன்ராரியோ, நோவா ஸ்கோட்டியா, நியூபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், அல்பேர்ட்டா மற்றும் மானிட்டோபா ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்களவு பிரெஞ்சு சமூகத்தினர் உள்ளனர். ஒன்ராரியோ போன்ற பல மாகாணங்கள் இங்குள்ள சிறுபான்மையோருக்கு பிரெஞ்சு மொழியில் சேவைகளை வழங்குகின்றனர். போர்ட் ஔ போர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் இரு மொழி மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது (இவ்விடங்களில் நியூபவுன்லாந்து பிரெஞ்சு என்ற வழக்கு பரவலாகப் பேசப்பட்டுள்ளது).ஏனைய எல்லா மாகாணங்களிலும் சிறியளவான பிரெஞ்சு சமூகத்தினர் உள்ளனர்.
 
கிட்டத்தட்ட 9,487,500 கனேடியர்கள் அல்லது சனத்தொகையில் 30%மானோர் பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.<ref name="tlfq.ulaval">{{cite web|url=http://www.tlfq.ulaval.ca/axl/francophonie/OIF-francophones-est2005.htm |title=Qu'est-ce Que La Francophonie |publisher=Tlfq.ulaval.ca |date= |accessdate=2013-05-25}}</ref> 2,065,300 பேர் பிரெஞ்சை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர்.<ref name="tlfq.ulaval" /> இருமொழிப் பாடசாலைத் திட்டம் மற்றும் பிரெஞ்சு வகுப்புகள் போன்றவற்றால் கடந்த இரு தசாப்த காலங்களில் பிரெஞ்சு மொழி தெரிந்த கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.{{Citation needed|date=May 2012}}
 
கியூபெக்கில் பேசப்படும் பிரெஞ்சு மொழிக்கும், பிரான்சில் பேசப்படும் பிரெஞ்சு மொழிக்குமான வித்தியாசம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆங்கிலங்களுக்கிடையிலான வேறுபாட்டை ஒத்தது. பெரும்பான்மை பிரெஞ்சு மொழி பேசுவோர் வசிக்கும் பகுதியான கியூபெக்கில் அமைந்துள்ள பிரெஞ்சு மொழிக்கான கியூபெக் சபை, கியூபெக் பிரெஞ்சுக்கான நெறிமுறைகளைச் செயற்படுத்தி வருவதுடன், பிரெஞ்சு மொழிக்கான பட்டயம் (சட்டமூலம் 101 & 104) மதிக்கப்படுவதையும் உறுதிப் படுத்துகிறது.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது