"குவாண்டம் இயங்கியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,282 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி)
 
[[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] துவக்க காலத்தில் தோன்றிய ஓர் [[இயற்பியல்]] துறையாகும். துகள் சித்தாந்ததின் தோற்றத்திற்கு முன்னர், பெருவாரியான திட, திரவ மற்றும் வாயுப் பொருட்களின் இயக்கங்கள் நியூட்டன், லாக்ராஞ்சி, [[லுட்விக் போல்ட்ஸ்மான்|போல்ட்ஸ்மான்]], மாக்சுவல் மற்றும் பலரது கோட்பாடுகளினடிப்படையில் புரிந்து கொள்ளப்பட்டது. ஆனால், அறிவியல் அறிவுப் பெருகியபோது, பெரும்பொருட்களிலிருந்து சிறிய துகள்கள் மற்றும் மூலக்கூறுகளை நோக்கி மெல்ல இயற்பியல் நகர ஆரம்பித்தது. ஏற்கனவே பெரும்பொருட்களின் இயக்கங்களுக்கான [[நியூட்டனின் இயக்க விதிகள்|நியூட்டன் விதிகள்]] போன்றவற்றைக் கொண்டு இச்சிறு துகள்களின் இயக்கத்தையோ அல்லது ஆற்றலையோ விளக்க முடியாமல் போனது. இப்படி அணுக்கள் மற்றும் அதனுள் அடிப்படைத் துகள்கள் போன்றவற்றின் இயக்கங்களையும், ஆற்றலையும் விளக்கிய ஒரு துறையே குவாண்டம் இயற்பியல் இச்சித்தாந்தத்தின் அடிப்படையில், புறவழுத்தத்திற்குட்படும் ஒரு துகளின் ஆற்றல் தொடர் எண்மதிப்பைக் கொண்டிராமல், ஆற்றல் பிந்துக்களாகக் இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இத்துறையை குவாண்டம் இயற்பியல் என்றும் வழங்குவர்.
 
== குவாண்டம் கோட்பாடும் சார்புக் கோட்பாடும் ==
 
சார்புக் கோட்பாட்டில் துளைத்தல் என்பதற்கு விளக்கம் கிடையாது. ஆனால் குவாண்டம் கோட்பாடு இதை துளைத்தல் என்று தனித்து அழைக்கிறது. நுண்ணலைகளை ஒரு அலை கடத்தி மூலம் செலுத்தினால் அக்கடத்தியின் விட்டம் நுண்ணலையின் அலைநீளத்திலும் குறைவாக இருக்கும் எனில் அந்த அலைகள் கடத்தியை தாண்டி வரக்கூடாது. ஆனால் அதே அலை குவாண்டம் கோட்பாட்டின் படி கசிவுகளாக வெளிவரும். ஆனால் இந்த துளைத்தல் முறையை நிறுவிய ஆய்வு முறை தவறானது என்றும் கூறுகின்றனர்.
 
{{Link FA|ar}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1454667" இருந்து மீள்விக்கப்பட்டது