தந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 5:
இதில் சங்கேத முறையில் அனுப்பப்படும் செய்தியைப் பெற அனுப்புநரும் பெறுநரும் இந்த குறிமுறையை அறிந்திருக்க வேண்டும். இந்தக் குறிமுறை அமைப்பு அனுப்பப்படும் [[ஊடகம்|ஊடகத்தைப்]] பொறுத்து அமையும். புகை குறிப்பலைகள், எதிரொளிக்கப்பட்ட ஒளிகள், தீப்பந்தங்கள்/கொடிகள் மூலம் துவக்க காலத்தில் செய்திகள் அனுப்பப் பட்டு வந்தன. 19வது நூற்றாண்டில் [[மின்சாரம்]] கண்டறியப்பட்ட பின்னர் இந்தக் குறிப்பலைகளை [[மின்சாரத் தந்தி]] மூலம் அனுப்ப முடிந்தது. 1900களின் துவக்கத்தில் [[வானொலி]] கண்டுபிடிப்பு [[வானொலித் தந்தி]]யையும் பிற கம்பியில்லாத் தந்தி முறைகளையும் கொணர்ந்தது. [[இணையம்]] வந்த பிறகு குறியீடுகள் மறைந்திருக்க இயற்கை மொழியிலேயே இடைமுகம் கொண்ட [[மின்னஞ்சல்]]கள் , [[குறுஞ் செய்திகள்]], [[உடனடி செய்தி]]கள் வந்த பிறகு வழமையான தந்திப் பயன்பாடு குறைந்துள்ளது.
 
இக்கருவிமின்சாரத் தந்தியில் கருவிகள் மின்காந்த சக்தியின் துணைகொண்டு இயக்கப்படுகிறதுஇயக்கப்படுகின்றன. இக்கருவியை 1837 ஆம் ஆண்டு [[ஐக்கிய அமெரிக்கா]]வைச் சேர்ந்த [[சாமுவெல் மோர்சு]] என்பவர் கண்டுபிடித்தார். அதனாலேயே இக்கருவியும் அவர் பெயராலேயே 'மோர்சு தந்தி' என அழைக்கப்படுகிறது. தந்திச் செய்தியை அனுப்புவதற்கும் மறு முனையில் பெறுவதற்கும் தனித்தனியே இரு முனைகளில் கருவிகள் உண்டு. தந்திச் செய்தி 'மோர்சு சாவி' எனப்படும் கருவி மூலம் ஒரு முனையிலிருந்து அனுப்பப்படுகிறது. மறுமுனையில் அச்செய்தி 'மோர்சு ஒலிப்பான்' எனும் கருவி மூலம் பெறப்படுகிறது.
 
== வரலாறு ==
வரிசை 27:
</ref>
1850இல் இந்தியாவில் சோதனைமுறையில் மின்சாரத் தந்தி கொல்கத்தாவிற்கும் டயமண்டு துறைமுகத்திற்கும் இடையே நிறுவப்பட்டது. இது 1851இல் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்]] பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.pwd.delhigovt.nic.in |title=Public Works Department|publisher=Pwd.delhigovt.nic.in |accessdate=1 September 2010}}</ref>
==மின்சாரத் தந்தி==
 
{{முதன்மை|மின்சாரத் தந்தி}}
===தந்திக் கருவியின் அமைப்பு===
[[File:L-Telegraph1.png|thumb|left|200px|Aமோர்சு Morse keyசாவி]]
மோர்சு தந்திக் கருவியில், செய்தி அனுப்பும் 'மோர்சு சாவி'க் கருவியில் குத்து வசமாக இயங்கக்கூடிய ஒரு [[நெம்புகோல்]] அமைப்பு இருக்கும். இதன் மேற்புறமுள்ள எபனைட் என்னும் குமிழை விரலால் அழுத்தி கீழேயுள்ள பித்தளைக் குமிழைத் தொடுமாறு செய்ய வேண்டும். இக்குமிழ் மின்கலத்தில் உள்ள நேர்முனையுடன் இணைக்கப்பட்டிருக்கும். மின்கலத்தின் எதிர் முனையானது பூமியுடன் இணைக்கப்பட்டிருக்கும். செய்தி பெறும் இடத்திலுள்ள 'மோர்சு ஒலிப்பான்' கருவியில் இருக்கும் மின்காந்தத்தின் மேற்புறத்தில் ஓர் இரும்புச்சட்டம் இருக்கும். இதன் ஒரு முனை மேற்பகுதியில் அமைந்துள்ள இரு பித்தளைத் திருகுகளுக்கு இடையே மேற்புறத் திருகைத் தொட்ட வண்ணம் இருக்கும். மின் காந்தத்துடன் சுற்றப்பட்டுள்ள கம்பிச்சுருளின் மற்றொரு முனை பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள கம்பியோடு இணைந்திருக்கும். இதுவே தந்திக் கருவியின் அமைப்பு ஆகும்.
 
===செயல்படும் முறை===
[[File:Morse tegraph.jpg|thumb|right|சாமுவேல் மோர்சுவின் தந்திக் கருவி]]
தந்திக்கருவியில் அமைக்கப்பட்டுள்ள குமிழ் அழுத்தப்படும் போது மின்சாரம் பாய்கிறது. அதனால் செய்தி பெறும் இடத்தில் உள்ள ஒலிப்பான் காந்த சக்தி பெறுகிறது. அக்காந்த சக்தி இரும்புச் சட்டத்தைக் கீழாக இழுக்கிறது. அதன் விளைவாகச் சட்டத்தின் ஒருமுனைக் கீழாகத் தாழ்ந்து திருகின் மீது மோதி ஒலி எழுப்புகிறது. அப்போது செய்தி அனுப்புபவர் குமிழை அழுத்துவதை விட்டுவிட்டால் மின்சாரம் பாய்வதும் நின்றுவிடும். இதன் மூலம் மின்காந்தம் தன் சக்தியை இழப்பதால் ஓசை எழுப்புவதையும் நிறுத்திவிடும். இதனால் இரும்புச் சட்டம் மீண்டும் மேலெழுந்து திருகின் மேல் மோதி அடுத்தடுத்து ஒலி எழுப்பும். இந்த ஒலிகளின் தன்மைக்கேற்ற ஒலிக்குறியீடுகளை மோர்சு வகுத்தளித்துள்ளார். அவ்வொலிக் குறியீடுகளை எழுத்துகளாக மாற்றுவதன் மூலம் செய்தியை பெறலாம்.
"https://ta.wikipedia.org/wiki/தந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது