"தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
→‎தோற்றம்: +3 நெறிமுறைகள்
சி (+)
சி (→‎தோற்றம்: +3 நெறிமுறைகள்)
 
==தோற்றம்==
'''தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை''' (ஆங்கிலம்:'''ICBN'''-International Code of Botanical Nomenclature) என்பது [[தாவரம்|தாவரங்களுக்கான]] பெயரிடலைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது.[[1930]] ஆம் ஆண்டு, ஐந்தாவது அகிலஉலக தாவரவியல் கூட்டம், [[இங்கிலாந்து]] நாட்டில் கேம்ப்ரிட்சு என்னுமிடத்தில், தாவரங்களின் பெயரிடுமுறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 12 – வது அகில உலக தாவரவியல் கூட்டம், சூலை [[1975]] இல், சோவியத் [[ரசியா]]விலுள்ள [[லெனின்கிராட்]] என்னுமிடத்தில் கூடியது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தற்போதைய அகிலஉலக தாவரவியல் பெயர் சூட்டுச்சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை(ICBN), தற்போது [[1978]] முதல் நடைமுறைக்கு வந்தது.
 
==நெறிமுறைகள்(ICBN)==
தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையின் சில முக்கிய கூறுகள் வருமாறு;-
#[[பேரினம் (உயிரியல்)|பேரின]]ப்பெயர் ஒற்றை [[பெயர்ச்சொல்]]லாகும். ஆங்கிலத்தில் எழுதும்போது, பேரினப்பெயரின் முதல் எழுத்து பெரிய/மேல் எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும். [[இனம் (உயிரியல்)|சிற்றினப்]]பெயர் ஒரு [[பண்புச்சொல்]]லாகும். இதனை ஆங்கிலத்தில் எழுதும்போது, முதல் எழுத்தை சிறிய/கீழ் [[எழுத்து]]க்களில் எழுதப்பட வேண்டும். இது பல மூலங்களிலிருந்து பெறப்பட்டதாகவும் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளைக் கொண்டதாகவும் இருக்கும். (எ.கா) ஒரைசா சட்டைவா(Oryza sativa), ஒல்டன்லேண்டியா சைபீரி-கன்செசுடா (Oldenlandia sieberi var. congesta)
#பெயர் சிறியனவாகவும், துல்லியமாகவும் எளிதில் வாசிக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
#இருசொற்பெயர்களை அச்சிடும் போது சாய்வாகவோ, அடிக்கோட்டிட்டோ காட்ட வேண்டும். (எ.கா) ''ஒரைசா சட்டைவா'' (''Oryza sativa'');<u>ஒரைசா சட்டைவா</u>
 
==அடிக்குறிப்புகள்==
23,123

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1455413" இருந்து மீள்விக்கப்பட்டது