தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நெறிமுறைகள்(ICBN): நெறிமுறை4-6
வரிசை 12:
#ஒரு தாவரத்திற்கு புதிய பெயர் சூட்டும்போது, அத்தாவரத்தின் உலர்தாவரகம் (Herbarium) தயார் செய்யப்பட்டு, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட உலர்தாவரக நிறுவனத்தில், அதன் விளக்கத்துடன் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு சேமித்து வைக்கப்படும் தாவரப்பகுதி, மூல உலர்தாவர மாதிரி (Type specimen) எனப்படும். இது உலர்தாவரத்தாளில் பேணப்படவேண்டும்
#எந்த ஒரு நபர் தாவரத்திற்கு முதன்முறையாக பெயர் சூட்டி, அத்தாவரத்தின் விளக்கத்தை அளிக்கிறாரோ, அந்நபர், அத்தாவரத்தின் ஆசிரியர் எனக் கருதப்படுகிறார். ஒரு தாவரத்தின் இருசொற் பெயரில், சிற்றினப்பெயரின் இறுதியில், அத்தாவரத்திற்கு முதன்முதலில் விளக்கமளித்த ஆசிரியரின் பெயர் சுருக்கம் எழுதப்படும். இதற்கு '''ஆசிரியர் பெயர் குறித்தல்''' என்று பெயர். (எ.கா) '''லி''' = '''L''' என்றால் லின்னேயஸ் என்ற பொருளாகும். ராபர்ட் பிரௌன் என்றால், '''ரா.பி.''' எனவும், சர் ஜோசப் டால்டன் ஹக்கர் என்றால், '''ஹக்.''' எனவும் பெயர் சுருக்கம் செய்யப்படும்.
# பெயர் சூட்டபட்டத் தாவரத்தின் முதன்மையான விளக்கம், [[இலத்தின்]] மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
#தவறான மூலத்திலிருத்து, ஒரு தாவரம் பெயர் சூட்டப்பட்டிருந்தால், அப்பெயர், தவறானப் பெயர் (Ambiguous name) எனக் கருதப்படும். இது ''நாமென் ஆம்பிகுவம்'' (Nomen ambiguum) என்றும் அழைக்கப்படும். இத்தகைய பெயர், உபயோகத்திலிருந்து முழுமையாக நிராகரிக்கப்படும்.
#
# ஒரு தாவரத்தின் பேரினச்சொல்லும், சிற்றினச் சொல்லும் ஒரே மாதிரியாக இருக்குமேயானால், அத்தகைய பெயர் டாட்டோனியம் (Tautonym) எனப்படும். (எ.கா) சாசாஃப்ரஸ் சாசாஃப்ரஸ் (''Sassafras sassafras''). சில சூட்டுமுறையில் (பேயர்) இது போன்று, ஒரே எழுத்துக்களுள்ள இருபெயரீட்டு முறை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
 
==அடிக்குறிப்புகள்==