பெட்ரோ பரேட்டோ டி ரெசென்டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பெட்ரோ பரேட்டோ டி ரெசென..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
==வரலாறு==
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள, "கிழக்கிந்திய அரசு குறித்த நூல்" என்னும் அவரது இன்னொரு கையெழுத்துப்படியில் தன்னைப் பற்றிய மேலும் விபரங்களைக் கொடுத்துள்ளார். ரெசென்டே 1614 ஆம் ஆண்டில், டி.டொம் மனுவேல் குட்டின்கோ என்பவரின் தலைமையிலான கப்பல் அணியைச் சேர்ந்த "கொன்செப்சன்கான்செப்சன்" என்னும் கப்பலில் இந்தியா நோக்கிப் பயணமானார். வழியில் தாகுஸ் ஆற்றுப் பகுதியில் சேதம் அடைந்ததால் கப்பல் [[பிரேசில்|பிரேசிலை]] நோக்கிச் செல்லவேண்டியதாயிற்று. அங்கிருந்து ரெசென்டே மீண்டு போர்த்துக்கலுக்கே[[போர்த்துகல்|போர்த்துகலுக்கே]] திரும்பினார்.
 
அடுத்த ஆண்டில் அவர் வட ஆப்பிரிக்காவுக்குச் சென்றார் அங்கே 1628 வரை பணியாற்றினார். 1629 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கான புதிய வைசுராய் டி.[[டொம் மிகுவேல் டி நோரன்காவின்நோரன்கா]]வின் செயலராக அவரது கப்பல் அணியில் இணைந்து இந்தியாவுக்குப் பயணமானார். அந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி அக்கப்பல் அணி கோவாவை அடைந்தது. கோவாவில், வைசுராயின் தனிச் செயலராக மட்டுமன்றி, மேலும் பல பதவிகளையும் ரெசென்டே வகித்தார். இதனால், போர்த்துக்கேயக் கிழக்கிந்திய அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பல கோட்டைகளில் இருந்து கிடைக்கும் ஆவணங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரெசென்டேக்குக் கிட்டியது. தனிப்பட்ட ஆர்வம் காரணமாக ஒரு நூலை எழுதும் நோக்கத்துடன் அவற்றிலிருந்து தகவல்களையும் இவர் சேகரித்து வந்தார். இந்த நூலுடன் இணைக்கும் நோக்குடன் போர்த்துக்கேயரின் கோட்டைகள், குடியேற்றங்கள் குறித்த படங்களையும் அவர் வரைந்து வைத்திருந்தார்.
 
இந்த வேளையில், போர்த்துக்கேய அரசர் மூன்றாம் பிலிப்பு, கிழக்கிந்தியாவைச் சேர்ந்த கோட்டைகள், குடியேற்றங்கள் குறித்த தகவல்களை அனுப்புமாறு வைசுராய்க்குக் கட்டளை இட்டிருந்தார். வைசுராய் இந்தப் பணியை அந்தோனியோ பொக்காரோவிடம் ஒப்படைத்தார். பொக்காரோ உரைப்பகுதியை மட்டும் எழுதுவதற்குச் சம்மதித்து ரெசேன்டேயின் படங்களை அத்துடன் இணைத்து அனுப்பலாம் என்று ஆலோசனை கூறினார். ரெசென்டே, பொக்காரோவிடம் இருந்து உரைப் பகுதியைப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாகத் தனது படங்களைக் கொடுக்கச் சம்மதித்தார்.
 
[[பகுப்பு:இந்தியாவில் பணியாற்றிய போர்த்துக்கேயர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெட்ரோ_பரேட்டோ_டி_ரெசென்டே" இலிருந்து மீள்விக்கப்பட்டது