அமர் கோ. போசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு |
|||
வரிசை 19:
}}
'''அமர் கோபால் போசு''' (Amar Gopal Bose) (நவம்பர் 2, 1929 {{spaced ndash}} சூலை 12, 2013)அமெரிக்காவில் பேராசிரியராகவும் தொழில்முனைவோருமாக இருந்தவர். போசு
2007 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஃசு 400 (Forbes 400) என்னும் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இவர் 271 ஆம் இடத்தில் மொத்த சொத்து மதிப்பாக அமெரிக்க $1.8 பில்லியன் கொண்டவராக வரிசைப்படுத்தப்பட்டார்<ref>{{cite web|url=http://www.expressindia.com/latest-news/Four-Indian-Americans-make-it-to-Forbes-list/219923/|title=Four Indian Americans make it to Forbes list|publisher=www.expressindia|accessdate=February 18, 2008| archiveurl= http://web.archive.org/web/20080216203023/http://www.expressindia.com/latest-news/Four-Indian-Americans-make-it-to-Forbes-list/219923/| archivedate= February 16, 2008 <!--DASHBot-->| deadurl= no}}</ref> 2009 ஆம் ஆண் இவர் இந்தப் பில்லியனர் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால் மீண்டும் 2011 ஆம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்கத் தாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் சேர்க்கப்பட்டார்<ref> {{cite web|url=http://www.forbes.com/profile/amar-bose|title=Amar Bose's profile|publisher=www.forbes.com|accessdate=April 2, 2011}}</ref>
வரிசை 26:
பென்சில்வேனியாவில் ஆபிங்டன் மேனில உயர்நிலைப்பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்ற பின்னர், [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்|மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில்]] சேர்ந்து இளநிலை அறிவியல் (மின்பொறியியல்) (BS) பட்டத்தை 1950 களில் பெற்றார். அதன் பின் நெதர்லாந்தில் உள்ள ஐண்டோவன் (Eindhoven)இல் உள்ள பிலிப்ஃசு நிறுவனத்தின் ஆய்வுச்சாலையில் ஓராண்டு பணியாற்றினார். பின்னர் ஃபுல்பிரைட்டு (Fulbright) ஆய்வு மாணவராக இந்தியாவில் புதுதில்லியில் ஒராண்டு இருந்தார். அப்பொழுதுதான் தன் பிற்கால மனைவியாகிய பிரேமா அவர்களைச் சந்தித்தார். இவர்கள் பின்னாளில் மணவிலக்கு பெற்றனர். இவர் மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் நோர்பர்ட்டு வீனர் (Norbert Wiener), இயூக்கு-இங்கு இலீ (Yuk-Wing Lee) ஆகியோரின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார். இவரின் முனைவர்ப் பட்ட ஆய்வு நேர்சார்பிலா ஒருங்கியங்களப் (non-linear systems) பற்றியது.
==பணிவாழ்க்கை==
மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து பட்டம் பெற்ற பின்னர் அங்கேயே அவர் துணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். 1956 இல் இவர் உயர்மதிப்புடைய இருசெவிக் கேளொலி கொண்ட ஒலிபெருக்கிக் கருவிகள் வாங்கிப் பயன்படுத்தியபொழுது அவற்றின் தரம் இவருக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. நேரடியாக நிகழும் நிகழ்ச்சிகளின் இயல்புத்தன்மையைச் சரியான துல்லியத்துடன் மீளுருவாக்கவில்லை என்று உணர்ந்தார். இதுவே இவரை ஒலிபெருக்கிப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளத் தூண்டியதாகும். அப்பொழுது ஒலிபெருக்கி நுட்பத்தில் இருந்த குறைபாடுகளை முறையாக ஆய்ந்தார். இவர் செய்த ஒலிசார் ஆய்வுகளின் பயனாய் ஒரு பெரிய அரங்கில் கேட்கக்கூடிய ஒலிகளை (பொருள்களின் மீது பட்டு எதிரும் ஒலிகளின் விளைவுகளையும்) வீட்டில் கேட்கும்படியான இருசெவி கேளொலி தரும் ஒலிபெருக்கிகளைக் கண்டுபிடித்தார். ஒலிக்கேளுணர்வியல் (psychoacoustic) துறையில் இவருடைய குவியம் இருந்ததே இவர் நிறுவிய ஒலிபெருக்கி வணிக நிறுவனத்துக்கு அடிப்படையாக இருந்தது.
==பெருமைகளும் பரிசுகளும்==
|