"லூர்து அன்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(clean up using AWB)
 
==மரியாவின் காட்சிகள்==
[[Image:Bernadette2.jpg|thumb|240px|'''பெர்னெதெத்'''துக்கு '''மரியா'''வின் காட்சி. கண்ணாடி கோப்போவியம், பொன்னெவல்.]]
[[பிரான்சு]] நாட்டின் [[லூர்து]] நகரில் பிறந்தவர் [[பெர்னதெத் சுபீரு|பெர்னதெத் சூபிரூஸ்]]. இவருக்கு 14 வயது நடந்தபோது, 1858 பிப்ரவரி 11ந்தேதி இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார்.
 
[[மரியாள் (இயேசுவின் தாய்)|அன்னை மரியா]] ஓர் இளம் பெண்ணாக அந்த குகையில் தோன்றினார். அவர் வெண்ணிற ஆடையும் முக்காடும் அணிந்திருந்தார். அவர் நீல நிறத்தில் இடைக்கச்சையை உடுத்தியிருந்தார். கையில் முத்துகளால் ஆன ஒரு [[கத்தோலிக்க செபமாலை|செபமாலை]] வைத்திருந்தார். அவரது காலடியில் காட்டு ரோஜா செடிகள் காணப்பட்டன. அவர் கைகளைக் கூப்பி வானத்தை நோக்கியவாறு இருந்தார். பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும் "அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம்பெண்" என்று கூறினார். இவரது சகோதரிக்கும் தோழிக்கும் எதுவும் தெரியவில்லை.<ref>L Laurentin, Lourdes, Marienlexikon, Eos Verlag, Regenburg, 1988, 161</ref><ref>Harris, Ruth. ''Lourdes'', Allen Lane, London, 1999, p 4</ref>
பிப்ரவரி 25ந்தேதி காட்சியின்போது, மரியாவின் கட்டளையை ஏற்று பெர்னதெத் மண்ணைத் தோண்டியபோது, அந்த இடத்தில் நீரூற்று ஒன்று தோன்றியது. அது பின்பு ஓடையாக மாறி, திருப்பயணிகளை கவர்ந்திழுக்கும் அற்புத இடமாக இன்றும் திகழ்கிறது.<ref>Harris 7</ref> மார்ச் 25ந்தேதி அன்னை மரியா பெர்னதெத்திடம், “[[அமலோற்பவ அன்னை|நானே அமல உற்பவம்]]” ("que soy era immaculada concepciou") என்று தன்னைப் பற்றிக் கூறினார். இதற்கு பாவம் எதுவுமின்றி பிறந்தவர் என்பது அர்த்தம்.
 
மொத்தம் பதினெட்டு முறை பெர்னதெத்துக்கு காட்சி அளித்த மரியன்னை, அவற்றில் 15 காட்சிகளில் [[கத்தோலிக்க செபமாலை|செபமாலை]]யின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருட்களின் 15 மறையுண்மைகளையும் நாளுக்கு ஒன்று என்ற வகையில் பெர்னதெத்தை ஒவ்வொன்றாக தியானித்து செபிக்கச் செய்தார். பெர்னதெத்தின் பின்னே பக்தியுடன் ஒரு கூட்டமும், கிண்டல் செய்யும் நோக்கத்தில் மற்றொரு கூட்டமும் பின் தொடர்ந்தன.
 
ஏப்ரல் 7ந்தேதி பெர்னதெத் அன்னையின் 16வது காட்சியைக் கண்டபோது, மருத்துவ ஆய்வுக்காக 15 நிமிடங்கள் இவர் கையை சிலர் தீயினால் சுட்டனர். பெர்னதெத் அதை உணரவும் இல்லை, இவர் கையில் தீக்காயமும் ஏற்படவில்லை.<ref name="Lauretin 162">Lauretin 162</ref> ஜூலை 16ந்தேதி அன்னை மரியாவின் கடைசி காட்சியைக் கண்ட பெர்னதெத், "இதற்கு முன்பாக நான் அவரை இத்தகைய பேரழகோடு கண்டதே இல்லை" என்று கூறினார்.<ref name="Lauretin 162"/>
{{கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி)}}
{{கத்தோலிக்க புனிதர்கள்}}
 
{{கன்னி மரியா}}
 
[[பகுப்பு:அன்னை மரியா]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1457004" இருந்து மீள்விக்கப்பட்டது