"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8,157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றைப்படுத்தல்
சி (பிரான்சிசு வெளியிட்ட முதல் சுற்றுமடல் - இற்றையாக்கம்)
சி (இற்றைப்படுத்தல்)
 
இக்கருத்துக்களை திருத்தந்தை பிரான்சிசு தமது முதல் சுற்றுமடலாகிய ''நம்பிக்கை ஒளி'' என்னும் போதனை ஏட்டில் விளக்குகிறார்.
 
==அகதிகளுக்கும் புலம்பெயர்வோருக்கும் ஆதரவு காட்டும் திருத்தந்தை பிரான்சிசு==
 
திருத்தந்தை பிரான்சிசு கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் நாளிலிருந்தே ஏழைகள் மட்டில் தனிக் கரிசனம் காட்டியுள்ளார். உரோமை நகருக்கு வெளியே அவர் முதன்முறை அதிகாரப்பூர்வமாகப் பயணமாகச் சென்றதும் ஏழை மக்களுக்குத் தம் ஆதரவைத் தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்குவதற்கே என்பது குறிப்பிடத்தக்கது<ref>[http://www.reuters.com/article/2013/07/08/us-pope-lampedusa-idUSBRE9660KH20130708 திருத்தந்தை பிரான்சிசு அகதிகளைச் சந்திக்கிறார் - பத்திரிகைச் செய்தி]</ref>.
 
===லாம்பெதூசா தீவு===
 
இத்தாலி நாட்டின் ஒரு பிரதேசமான சிசிலித் தீவில் அக்ரிஜெந்தோ மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சிறு தீவின் பெயர் "லாம்பெதூசா" (Lampedusa). ஆப்பிரிக்க அகதிகள் லிபியா, துனீசியா போன்ற நாடுகளிலிருந்து ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டு லாம்பெதூசா வந்தடைகின்றனர். அவ்வாறு வருகின்றவர்களுள் பலர் படகு விபத்தின் காரணமாகக் கடலில் உயிரிழக்கின்றனர்.
 
இவ்வாறு, பிழைப்புத் தேடி வந்து கடலில் மாண்டுபோனவர்களுக்காக இறைவேண்டல் செய்யவே திருத்தந்தை பிரான்சிசு 2013, சூலை 8ஆம் நாள் லாம்பெதூசா தீவுக்குச் சென்றார். தம் நாட்டை விட்டு வெளியேறி, பிற நாடுகளுக்கு அகதிகளாகச் செல்வோர் உலகெங்கிலும் சுமார் 8 மில்லியன் இருப்பர். 5000 மக்களை மட்டுமே கொண்ட சிறிய தீவாகிய லாம்பெதூசாவில் பல்லாயிரக் கணக்கான அகதிகள் சென்றிறங்குகின்றனர். அவர்களுடைய துன்ப நிலை தம் இதயத்தில் தைத்த முள் போல உறுத்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.
 
அகதிகளை சந்தித்த திருத்தந்தை பிரான்சிசு அம்மக்களுக்கு ஆதரவு தருகின்ற லாம்பெதூசா மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் அகதிகளின் நிலை குறித்து உலக மக்களிடையேயும் நாடுகளிடையேயும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். மேலும், அகதிகளின் அவல நிலையைப் பயன்படுத்தி அநியாயமாகப் பணம் ஈட்டுகின்ற இடைத் தரகர்களின் செயல்பாட்டையும் அவர் கண்டித்தார். கடலைக் கடந்து வந்தபோது விபத்துக்கு உள்ளாகி இறந்த அகதிகளின் நினைவாக ஓர் மலர் வளையத்தை அவர் கடலில் இட்டார்.
 
திருப்பலி நிறைவேற்றியபோது திருத்தந்தை மரத்தால் செய்த ஒரு கிண்ணத்தைப் பயன்படுத்தினார். அந்த மரக்கிண்ணம் அகதிகளை ஏற்றிவந்த ஒரு படகின் மரத்தால் செய்யப்பட்டது ஆகும்.
 
===அகதிகளின் அவலநிலை===
 
2011இல் ஆப்பிரிக்க அகதிகள் சுமார் 62 ஆயிரம் பேர் ஆபத்தான படகுப் பயணம் மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றனர். அவர்களுள் பலர் லாம்பெதூசாவில் கரையிறங்கினர்.
 
2013, சூலை 8ஆம் நாள் திருத்தந்தை லாம்பெதூசா சென்ற தருணத்தில் கூட மாலி நாட்டு அகதிகள் 165 பேர் லாம்பெதூசாவில் இறங்கினர். அதற்கு முந்திய நாள் கடற்கரையிலிருந்து 7 மைல் தூரத்தில் விபத்துக்கு உள்ளான படகிலிருந்து 120 அகதிகள் காப்பாற்றப்பட்டனர். அவர்களுள் 4 பெண்கள் கர்ப்பிணிகள்.
 
ஐ.நா. புள்ளிவிவரப்படி, 2013ஆம் ஆண்டின் முதல் ஆறுமாதங்களில் மட்டும் லாம்பெதூசா தீவிலும் இத்தாலியின் தென் கடலோரத்திலும் வந்திறங்கிய அகதிகள் சுமார் எண்ணாயிரம் பேர். இவர்கள் பெரும்பாலும் லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளை விட்டு வந்தவர்கள்.
 
2013இன் முதல் ஆறுமாதங்களில் கடலில் விபத்துக்கு உள்ளாகி இறந்த அகதிகள் 40 பேர் துனீசியாவை விட்டு வந்தவர்கள். 2012இல் கடலில் இறந்த அல்லது காணாமற்போன அகதிகள் 500 பேர்.
 
வட ஆப்பிரிக்க நாடுகளான லிபியா, துனிசியா போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் அகதிகளாக வருவோர் இசுலாம் சமயத்தவர். அவர்களைச் சென்று சந்தித்து, அவர்களுடைய துன்பத்தில் பங்கேற்ற திருத்தந்தையின் செயலைப் பல இசுலாமிய நாடுகள் பாராட்டியுள்ளன.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1457494" இருந்து மீள்விக்கப்பட்டது