லிசியே நகரின் தெரேசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
No edit summary
வரிசை 23:
}}
 
'''லிசியே நகரின் தெரேசா''' (''Thérèse of Lisieux'')(2 ஜனவரி 1873 – 30 செப்டம்பர் 1897) என்பவர் ஒரு பிரஞ்சு [[கார்மேல் சபைத்சபை]]த் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார்<ref>[http://en.wikipedia.org/wiki/Th%C3%A9r%C3%A8se_of_Lisieux லிசியே நகரின் தெரேசா]</ref>. ''மரி ஃப்ரான்சுவா தெரேஸ் மார்த்தின்'' (''Marie-Françoise-Thérèse Martin'') என்னும் இயற்பெயர் கொண்ட இவர் துறவற சபையில் '''[[குழந்தை இயேசு]] மற்றும் இயேசுவின் திருமுகத்தின் தெரேசா''' என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார். ''குழந்தை இயேசுவின் தெரேசா'' என்னும் பெயரும், ''இயேசுவின் சிறு மலர்'' என்னும் பெயரும் இவருக்குச் சிறப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
 
15 வயதே நிரம்பிய தெரேசா தம் இளம் பருவத்திலேயே இறை அழைத்தலுக்குச் செவிமடுத்து, 1888 இல், பல்வேறு தடைகளையும் தாண்டி, கார்மேல் சபையில் சேர்ந்தார். அவர் புகுந்த அடைப்புநிலை (cloistered) கார்மேல் சபை மடம் பிரான்சு நாட்டில் நோர்மாண்டி மாநிலத்தில் லிசியே (Lisieux) நகரில் அமைந்திருந்தது. அத்துறவற இல்லத்தில் தெரேசா ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு திருப்பணிக் காப்பகப் பொறுப்பாளர்(sacristan), பயிற்சிநிலைத் துறவியரின் துணைப் பயிற்சியாளர் போன்ற பல பணிகளை ஆற்றினார். அவர்தம் வாழ்க்கையின் இறுதி பதினெட்டு மாதங்களில் அவர் "இறைநம்பிக்கையின் இருண்ட கால" வேதனையை அனுபவித்தார். அவர் [[காச நோய்|காச நோயால்]] பீடிக்கப்பட்டு, தம் 24ஆம் அகவையில் இறையடி எய்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/லிசியே_நகரின்_தெரேசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது