"சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''அதிவீரராம பாண்டியர்''' 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிற்காலத் [[தென்காசிப் பாண்டியர்பாண்டியர்கள்|பாண்டிய மன்னர்களுள்]] ஒருவர். இவர் சுமார் 40 ஆண்டுகள் (1564-1604) ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். [[வடமொழி]]யிலும், [[தமிழ்|தமிழிலும்]] தோன்றிய, [[நளன்]] கதை கூறும் நூல்களைத் தழுவி [[நைடதம்]] என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் [[வெற்றி வேற்கை]] என்னும் நூலையும், [[காசி காண்டம்]], [[கூர்ம புராணம்]], ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் [[கொக்கோகம்]] எனப்படும் காமநூலையும் தமிழில் தந்துள்ளார்.
 
மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல [[கோயில்]]களையும் கட்டுவித்துள்ளார். [[தென்காசி]]யில் இருக்கும் [[சிவன்|சிவாலயம்]] ஒன்றும் [[விஷ்ணு]] ஆலயம் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1457937" இருந்து மீள்விக்கப்பட்டது