"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{மேற்கோள்}} → {{subst:மேற்கோள்}} using AWB
சி (clean up, replaced: {{மேற்கோள்}} → {{subst:மேற்கோள்}} using AWB)
[[படிமம்:Leber Schaf.jpg|thumb|right|200px|'''கல்லீரல்''' வயிற்றறையினுள் [[இரைப்பை|இரைப்பையின்]] வலதுபுறத்தில் அமைந்திருக்கும் மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் உள்ளுறுப்பு]]
 
'''கல்லீரல்''' (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது [[உடல்|உடலின்]] ஓர் உள்ளுறுப்பு. இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று. [[முதுகெலும்பி]]களிலும், வேறுபிற [[விலங்கு]]கள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. இது [[மனிதர்|மாந்தர்களில்]] வயிற்றறை/வயிற்றுக் குழியின் (Abdominal cavity) வலது மேல் பக்கத்தில், [[பிரிமென்றகடு|பிரிமென்றகட்டிற்குக்]] கீழாக அமைந்திருக்கும். இதற்குக் கீழாக [[பித்தப்பை]]யும், இடது புறமாக [[இரைப்பை|இரைப்பையும்]] இருக்கின்றது. இதுவே உடல் உள்ளுறுப்புக்கள் யாவற்றிலும் மிகப்பெரிய உறுப்பாகும். மிகப்பெரிய [[நீர்மம்]] சுரக்கும் [[சுரப்பி]] ஆகவும் இருக்கின்றது. மாந்தர்களில் காணப்படும் [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களில்]] மிகப் பெரியது என்று பார்த்தால், அது [[தோல்|தோலாகும்]] .
 
சிறுகாலத்திற்கு ஆற்றலைச் சேமித்து வைக்கும் [[வேதிப்பொருள்|வேதிப்பொருளாகிய]] [[கிளைக்கொஜன்|கிளைக்கொஜனைச்]] சேமித்து வைத்தலும், உணவு [[சமிபாடு|செரிப்பதற்கு]] உதவி செய்யும் [[காரம் (வேதியியல்)|காரத்தன்மை]] கொண்ட, இளம்பச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும் [[கொழுப்பு]] சமிபாட்டில் உதவும் [[பித்தநீர்|பித்தநீரை]] உண்டாக்குவதும், [[செங்குருதியணு|செங்குருதியணுக்களைச்]] சீர்செய்து [[குருதி]]யைத் தூய்மைப்படுத்துவதும், குருதியில் உள்ள [[குருதி நீர்மம்]], மற்றும் [[புரதம்|புரதப்]] பொருட்களை ஆக்குதலும், உடலில் சேரும் பல்வேறு [[நச்சுத்தன்மை]] கொண்ட பொருட்களை நீக்குவதும் கல்லீரலின் முக்கியப் பணிகளில் சிலவாகும்.<ref name="The Liver" /><ref>{{cite web | url=http://www.hepatitis.org.uk/s-crina/liver-f3-main3.htm | title=The Healthy Liver | accessdate=சூன் 19, 2013}}</ref>
== கல்லீரலின் செயல்பாடுகள் ==
மனித உடல் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்குவகிப்பதாக் கூறப்படுகின்றது
<ref name="The Liver">{{cite web|url=http://medicalcenter.osu.edu/patientcare/healthcare_services/liver_biliary_pancreatic_disease/liver_anatomy_function/Pages/index.aspx | title=The Liver: Anatomy and Functions | publisher=The Ohio State University, Wexner Medical Centre | accessdate=சூன் 19, 2013}}</ref>. [[பித்தநீர்]] சுரக்கவும், [[ஈமோகுளோபின்|ஈமோகுளோபினின்]] அமைப்பில் பங்களிக்கும் [[இரும்பு]], ஏனைய சில [[தனிமம்|தனிமங்கள்]], [[உயிர்ச்சத்து]]க்கள், [[கொலஸ்டிரால்]], கிளைகோஜன் வடிவில் [[காபோவைதரேட்டு]], சில [[இயக்குநீர்]]கள் போன்றவற்றைச் சேமித்து வைக்கவும், உட்கொள்ளும் உணவைச் [[சமிபாடு|செரித்து]] ஆற்றலை உருவாக்கவும், [[சுரப்பி]]களைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும், [[குருதி உறைதல்|இரத்தத்தை உறைய]] வைக்கவும் தேவையான [[புரதம்|புரதங்களையும்]], வேறு பல [[நொதியம்|நொதியங்களையும்]] உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.
 
கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த [[செங்குருதியணு]]க்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலில் செலுத்தப்பட்டு [[கொழுப்பு]] உணவைச் செரிக்க வைக்க உதவும். கல்லீரலில் உருவாகும் பித்தநீர் [[பித்தப்பை]]யில் (gallbladder) சேர்த்து வைக்கப்படும். உணவில் கொழுப்புச்சத்தினை உட்கொள்ளூம்போது பித்தநீர் பித்தப்பையில் இருந்து குடலுக்குள் செலுத்தப்பட்டு அக்கொழுப்பினைக் கரைக்க உதவும். கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் [[மஞ்சள் காமாலை]] நோய் உண்டாகும்.
{{main|கல்லீரல் அழற்சி}}
 
கல்லீரல் அழற்சி (Hepatitis) (பன்மை '''hepatitides''' ) என்பது உடலில் உள்ள [[கல்லீரல்]] அழற்சி அல்லது வீக்கம் கொள்வதாகும், அந்த நிலைமையில் அந்த உறுப்பின் திசுக்கள் சார்ந்த உயிரணுக்கள் வீக்கத்துடன் காணப்படுவதே அதன் அறிகுறியாகும். இந்த பெயரானது பண்டைய கிரேக்கமொழி சொல்லான ''ஹெபர்'' (ἧπαρ) என்பதிலிருந்து வந்ததாகும், இதன் மூலச்சொல் ''ஹெபட்'' -(ἡπατ-) ஆகும், அதாவது ''கல்லீரல்'' என்ற பொருள் தருகிறது, மற்றும் பின் ஒட்டுச்சொல்லான ''-இடிஸ் (-itis)'' என்பது "அழற்சி அல்லது வீக்கம்" என்ற பொருள் கொண்டதாகும், இச்சொல் இவை இரண்டும் கலந்ததாகும் (c. 1727)<ref>[3] ^ ஆன்லைன் புது சொல்லாக்கம் அகராதி</ref>. இந்த நிலைமையானது தனது வரம்பிற்குள்ளேயே அடங்கலாம், மேலும் தன்னாலேயே குணமாகலாம், அல்லது மேலும் மோசமடைந்து கல்லீரலில் வடு ஏற்படலாம். ஆறு மாதங்களுக்கும் குறைவாக கல்லீரல் அழற்சி இருந்தால், அந்நிலைமை '''கடுமையான''' பாதிப்பை குறிக்கும் ஆனால் அதற்கு மேலும் நீடித்தால் அப்போது அது கடுமையாக நீடிக்கும் வகையை சாரும். உலகளவில் உடல் நலத்தை மிகையாக பாதிக்கும் இவ்விதமான கல்லீரல் சேதாரத்திற்கு ஒரு குழுவை சார்ந்த கல்லீரல் அழற்சி தீநுண்மங்கள் அல்லது நச்சுயிரிகளே காரணமாகும்.
 
=== கல்லீரல் இழைநார் வளர்ச்சி ===
{{main|கல்லீரல் இழைநார் வளர்ச்சி}}
கல்லீரல் இழைநார் வளர்ச்சி ({{pron-en|sɪˈroʊsɪs}}) என்பது ஓர் தீரா [[கல்லீரல்]] நோயாகும். இந்த நோயாளிகளின் கல்லீரல் [[திசு]]வானது [[இழைமப் பெருக்கம்]] , காய வடு திசு மற்றும் மறு உருவாக்க முடிச்சுகள் (சேதமடைந்த திசு மீ்ண்டும் உருவாகும் நிகழ்முறையில் ஏற்படும் கட்டிகள்),<ref>{{cite web|url=http://www.mayoclinic.com/print/cirrhosis/DS00373/DSECTION=all&METHOD=print|title=Cirrhosis – MayoClinic.com}}</ref><ref>{{cite web|url=http://www.meddean.luc.edu/lumen/MedEd/orfpath/cirhosis.htm|title=Liver Cirrhosis|work=Review of Pathology of the Liver}}</ref><ref>{{cite web|url=http://www.pathology.vcu.edu/education/gi/lab3.h.html|title=Pathology Education: Gastrointestinal}}</ref> போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதால் கல்லீரலின் செயலிழப்பிற்கு வழிகோலுகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சி [[குடிப்பழக்கம்]], [[கல்லீரல் அழற்சி பி]] மற்றும் [[கல்லீரல் அழற்சி சி|சி]] மற்றும் [[கொழுப்புநிறை கல்லீரல் நோய்]] ஆகியவற்றாலேயே ஏற்படுகிறது. இவற்றைத் தவிர வேறுபல வாய்்ப்புள்ள காரணங்களும் உள்ளன. இவற்றில் சில அறியபடாக் காரணங்களுடைய [[மூலமறியா தான்தோன்றி]]யானவை.
==கல்லீரல்நோய் மூளைக்கோளாறு==
{{main|கல்லீரல்நோய் மூளைக்கோளாறு }}
கல்லீரல்நோய் மூளைக்கோளாறு (Hepatic encephalopathy) அல்லது '''ஈரல்சிரையமைப்பு மூளைக்கோளாறு''' (portosystemic encephalopathy) என்பது கல்லீரல் செயலிழப்பால் மனக்குழப்பம், சுய உணர்வுநிலை தடுமாற்றம் ,ஆழ்துயில் என்பன தோன்றுவதைக் குறிக்கிறது. இதன் முற்றிய நிலைகளில் ''ஈரல் ஆழ்துயில்'' அல்லது ''கோமா எப்பாடிகம்'' என அழைக்கப்படுகின்றது. இறுதியில் மரணமும் நேரிடலாம். <ref name=Cash>{{cite journal |author=Cash WJ, McConville P, McDermott E, McCormick PA, Callender ME, McDougall NI |title=Current concepts in the assessment and treatment of hepatic encephalopathy |journal=QJM |volume=103 |issue=1 |pages=9–16 |year=2010 |month=January |pmid=19903725 |doi=10.1093/qjmed/hcp152}} Full text available [http://qjmed.oxfordjournals.org/cgi/content/full/103/1/9 here] (free registration required).</ref>
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
{{மேற்கோள்}}
<references/>
{{reflist|2}}
 
[[பகுப்பு:உடற்கூறு]]
[[பகுப்பு:உடல் உறுப்புக்கள்]]
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1459226" இருந்து மீள்விக்கப்பட்டது