மு. வரதராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

52 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
சி (clean up using AWB)

==வாழ்க்கைச் சுருக்கம்==
மு.வரதராசனார், [[தமிழ்நாடு]], [[வட ஆற்காடு மாவட்டம்]], [[திருப்பத்தூர்|திருப்பத்தூரில்]] முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

மு.வ. வின் இளமை வாழ்வும் தொடக்கக் கல்வியும் வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார்.
எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காக கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார்.

தமிழின் மீதிருந்த பற்றால் [[1931]] இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று [[1935]] இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காக [[திருப்பனந்தாள்]] மடம் ரூ.1000 பரிசளித்தது.

[[1935]] ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.
ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.

[[1948]] இல் [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தின்]] மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.

[[1939]] இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. [[1961]] வரை அங்கு பணியாற்றினார். [[1945]] இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே [[1948]]ஆம் ஆண்டில் மட்டும், தனது முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

பின்னர் [[1971]] இல் [[மதுரை பல்கலைக்கழகம்|மதுரைப் பல்கலைக்கழக]]த் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.

==எழுத்துப் பணி==
நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார்.

{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"

|'''1939'''
1 குழந்தைப் பாடல்கள்
2 இளைஞருக்கான இரு சிறுகதைகள்
3 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள் – 1
4 கழகத் தமிழ் இலக்கணம் 1
5 கழகத் தமிழ் இலக்கணம் 2

'''1940'''
6 படியாதவர் படும்பாடு
7 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள்-2
8 கழகச் சிறுகதைகள் 1
9 கழகச் சிறுகதைகள் 2
10 கழகச் சிறுகதைகள் 3

'''1941'''
11 கழகத் தமிழ் இலக்கணம் 3

'''1945'''
12 கண்ணுடைய வாழ்வு

'''1946'''
13 செந்தாமரை
14 ஓவச் செய்தி

'''1947'''
15 கள்ளோ? காவியமோ?
16 கி.பி. 2000
17 தமிழ் நெஞ்சம்
18 மொழி நூல்

'''1948'''
19 பாவை
20 அந்த நாள்
21 விடுதலையா?
22 அன்னைக்கு
23 அறிஞர் பெர்னாட்ஷா
24 காந்தியண்ணல்
25 மணல் வீடு
26 திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம்
27 அறமும் அரசியலும்
28 அரசியல் அலைகள்

'''1949'''
29 கவிஞர் தாகூர்
30 திருக்குறள் தெளிவுரை
1950
31 மலர்விழி
32 கண்ணகி
33 மாதவி
1951
34 பெற்ற மனம்
35 பச்சையப்பர்

'''1952'''
36 அல்லி
37 குறட்டை ஒலி
38 மனச்சான்று
39 முல்லைத் திணை
40 மொழியின் கதை
41 எழுத்தின் கதை
42 சொல்லின் கதை

'''1953'''
43 கரித்துண்டு
44 தம்பிக்கு
45 தங்கைக்கு
46 இலக்கிய ஆராய்ச்சி
47 நற்றிணை விருந்து

'''1954'''
48 ஓவச் செய்தி
49 காதல் எங்கே?
50 நண்பர்க்கு
51 யான் கண்ட இலங்கை
52 நெடுந்தொகை விருந்து
53 நெடுந்தொகைச் செல்வம்
54 குழந்தை
55 மொழி வரலாறு
56 மொழியியற் கட்டுரைகள்

'''1955'''
57 பழியும் பாவமும்
58 குறுந்தொகைச் செல்வம்

'''1956'''
59 கயமை
60 நெஞ்சில் ஒரு முள்
61 குறுந்தொகை விருந்து
62 நடைவண்டி
63 கொங்குதேர் வாழ்க்கை
64 கல்வி
65 நாட்டுப் பற்று

'''1957'''
66 The Treatment of Nature in Sangam Literature

'''1958'''
67 அகல்விளக்கு
68 நற்றிணைச் செல்வம்
69 குருவிப்போர்

'''1959'''
70 மூன்று நாடகங்கள்
71 இலக்கியத் திறன்
72 மொழிப்பற்று
73 பெண்மை வாழ்க
74 உலகப் பேரேடு

'''1960'''
75 வாடாமலர்
76 இலக்கிய மரபு
77 இளங்கோ அடிகள்

'''1961'''
78 மண்குடிசை
79 மண்ணின் மதிப்பு

'''1962'''
80 திரு.வி.க.
81 இலக்கியக் காட்சிகள்

'''1967'''
82 Ilango Adigal
1968
83 குறள் காட்டும் காதலர்

'''1972'''
84 தமிழ் இலக்கிய வரலாறு

'''1973'''
85 நல்வாழ்வு

'''1975'''
86 டாக்டர் மு.வ.வின் மணிமொழிகள்

'''1977'''
87 டாக்டர் மு.வ.வின் கடிதங்கள்

'''1983'''
88 தாயுமானவர்

'''2012'''
89 மு.வ.வின் முன்னுரைகள்
90 மு.வ.வின் கட்டுரைகள் 1
91 மு.வ.வின்கட்டுரைகள் 2|| '''சிறுவர்க்கான இலக்கியங்கள்'''
1 குழந்தைப் பாடல்கள்
2 இளைஞருக்கான இரு சிறுகதைகள்
3 படியாதவர் படும்பாடு
4 கண்ணுடைய வாழ்வு

'''தழுவல் மொழிபெயர்ப்புகள்'''
5 கழகச் சிறுகதைகள் 1
6 கழகச் சிறுகதைகள் 2
7 கழகச் சிறுகதைகள் 3

'''மொழிபெயர்ப்புகள்'''
8 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள் – 1
9 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள் – 2

'''இலக்கணம்'''
10 கழகத் தமிழ் இலக்கணம் 1
11 கழகத் தமிழ் இலக்கணம் 2
12 கழகத் தமிழ் இலக்கணம் 3

'''நெடுங்கதை'''
13 செந்தாமரை
14 கள்ளோ? காவியமோ?
15 கி.பி. 2000
16 பாவை
17 அந்த நாள்
18 மலர்விழி
19 பெற்ற மனம்
20 அல்லி
21 கரித்துண்டு
22 கயமை
23 நெஞ்சில் ஒரு முள்
24 அகல்விளக்கு
25 மண்குடிசை
26 வாடா மலர்

'''சிறுகதை'''
27 விடுதலையா?
28 குறட்டை ஒலி
29 பழியும் பாவமும்

'''நாடகம்'''
30 பச்சையப்பர்
31 மூன்று நாடகங்கள்
32 காதல் எங்கே?
33 மனச்சான்று

'''கடித இலக்கியம்'''
34 அன்னைக்கு
35 தம்பிக்கு
36 தங்கைக்கு
37 நண்பர்க்கு
38 டாக்டர் மு.வ.வின் கடிதங்கள்

'''பயண இலக்கியம்'''
39 யான் கண்ட இலங்கை

'''வாழ்க்கை வரலாறு'''
40 அறிஞர் பெர்னாட்ஷா
41 காந்தியண்ணல்
42 கவிஞர் தாகூர்
43 திரு.வி.க

'''திறனாய்வு'''
44 இலக்கிய ஆராய்ச்சி
45 இலக்கியத் திறன்
46 இலக்கிய மரபு
47 இலக்கியக் காட்சிகள்

'''இலக்கிய ஆய்வு'''
48 ஓவச் செய்தி
49 தமிழ் நெஞ்சம்
50 மணல்வீடு
51 திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம்
52 கண்ணகி
53 மாதவி
54 முல்லைத்திணை
55 நற்றிணைவிருந்து
56 நற்றிணைச் செல்வம்
57 குறுந்தொகை விருந்து
58 குறுந்தொகைச் செல்வம்
59 நெடுந்தொகை விருந்து
60 நெடுந்தொகைச் செல்வம்
61 நடைவண்டி
62 கொங்குதேர் வாழ்க்கை
63 புலவர் கண்ணீர்
64 இளங்கோ அடிகள்
65 குறள் காட்டும் காதலர்
66 தாயுமானவர்
67 மு.வ.வின் கட்டுரைகள் பகுதி1
68 மு.வ.வின் கட்டுரைகள் பகுதி2

'''உரை'''
69 திருக்குறள் தெளிவுரை

'''இலக்கிய வரலாறு'''
70 தமிழ் இலக்கிய வரலாறு

'''சிந்தனைக் கட்டுரைகள்'''
71 அறமும் அரசியலும்
72 அரசியல் அலைகள்
73 குழந்தை
74கல்வி
75 மொழிப்பற்று
76 நாட்டுப்பற்று
77குருவிப்போர்
78 பெண்மை வாழ்க
79 உலகப்பேரேடு
80 மண்ணின் மதிப்பு
81 நல்வாழ்வு

'''மொழியியல்'''
82 மொழிநூல்
83 மொழியின் கதை
84 எழுத்தின் கதை
85 சொல்லின் கதை
86 மொழி வரலாறு
87 மொழியியற் கட்டுரைகள்

'''முன்னுரைகள்'''
88 மு.வ.வின் முன்னுரைகள்

'''மேற்கோள்கள்'''
89 டாக்டர் மு.வ.வின் மணிமொழிகள்

'''ஆங்கில நூல்கள்'''
90 The Treatment of Nature in Sangam Literature
91 Ilango Adigal

'''உரை'''
69 திருக்குறள் தெளிவுரை

'''இலக்கிய வரலாறு'''
70 தமிழ் இலக்கிய வரலாறு

'''சிந்தனைக் கட்டுரைகள்'''
71 அறமும் அரசியலும்
72 அரசியல் அலைகள்
73 குழந்தை
74கல்வி
75 மொழிப்பற்று
76 நாட்டுப்பற்று
77குருவிப்போர்
78 பெண்மை வாழ்க
79 உலகப்பேரேடு
80 மண்ணின் மதிப்பு
81 நல்வாழ்வு

'''மொழியியல்'''
82 மொழிநூல்
83 மொழியின் கதை
84 எழுத்தின் கதை
85 சொல்லின் கதை
86 மொழி வரலாறு
87 மொழியியற் கட்டுரைகள்

'''முன்னுரைகள்'''
88 மு.வ.வின் முன்னுரைகள்

'''மேற்கோள்கள்'''
89 டாக்டர் மு.வ.வின் மணிமொழிகள்

'''ஆங்கில நூல்கள்'''
90 The Treatment of Nature in Sangam Literature
91 Ilango Adigal

==விருதுகள்==
மு.வ.வின் [[அகல் விளக்கு (நூல்)|அகல்விளக்கு]] எனும் நாவலுக்கு [[சாகித்ய அகாடமி விருது |சாகித்ய அகாதெமி விருது]] கிடைத்தது. [[கள்ளோ காவியமோ (நூல்)|கள்ளோ காவியமோ]], அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் [[தமிழ் வளர்ச்சிக் கழகம்|தமிழ் வளர்ச்சிக் கழகத்தின்]] பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன. பல நூல்கள், ஆங்கிலம், இந்தி, மராத்தி, [[ரஷ்ய மொழி]], சிங்கள மொழி, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

== மு.வ.வைப் பற்றிய நூல்கள் ==

[[பகுப்பு:1912 பிறப்புகள்]]
[[பகுப்பு: 1974 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1459432" இருந்து மீள்விக்கப்பட்டது