நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 94:
மீத்தேன்,ஈத்தேன் ஆகிய ஐதரோகார்பன்கள் சாதாரண சூழ்வெப்ப நிலையில் வாயுக்களாக காணப்படுகின்றன. வெறும் அழுத்தம் என்ற காரணியால் மட்டும் இவற்றை திரவமாக்கிவிட முடியாது. ஆனாலும் புரோபேனை எளிதில் திரவமாக்கி புரோபேன் புட்டிகளில் பெரும்பாலும் வைத்திருக்கிறார்கள். பியூட்டேன் மிக எளிதில் ஆவியாகக்கூடியதும் பாதுகாப்பானதுமான ஒரு எரிபொருளாகும். இது சிறிய கையடக்கத் தீமூட்டிகளில் எரிபொருளாக பயன்படுகிறது. பொதுவாக மெழுகுகள் மற்றும் மசகு உட்பட உயர் மூலக்கூறு எடையுள்ள கரிமச் சேர்மங்களை கரைக்கும் கரைப்பானாக பென்டேன் திரவம் பயன்படுகிறது. சாதாரண அறை வெப்பநிலையில் திரவமாக காணப்படும் பென் டேன் ஒரு சக்தி வாய்ந்த, கிட்டத்தட்ட மணமற்ற கரைப்பானாக வேதியியல் மற்றும் தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ] பொதுவாக ஹெக்சேனும் அதிகளவில் பெட்ரோலுக்கு மாற்றாக குறிப்பிடத்தக்க அளவுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இத்திரவம் மணமற்று காந்த முனைப்பற்று இருப்பதால் பரவலாக பயன்படுகிறது.
 
6 முதல் 10 வரையிலான எண்ணிக்கையில் கார்பனைப் பெற்றுள்ள ஆல்கேன்கள், ஆல்கீன்கள் மற்றும் மாற்றீயப் பண்பைக் கொண்ட சைக்ளோ எக்சேன் முதலிய கரிமச்சேர்மங்கள் பெட்ரோல், ரசக்கற்பூரம், வான்சுழலி எரிபொருள் ஆகியவற்றின் முதன்மையான பகுதிப்பொருள்களாக உள்ளன. படிப்படியாக அதிகரிக்கும் கார்பன் அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நோக்கினால் எளிய வளையம் அல்லாத அமைப்பைக் கொண்ட ஐதரோகார்பன்கள் அதிகமான பாகுநிலை,உயவுத்தன்மை, கொதிநிலை,திண்மமாதல்தன்மை, வெப்பநிலை மற்றும் ஆழ்ந்தநிறம் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளன. கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் வாலையில் ஒரு கார்பன் அணுவைக் கொண்ட மீத்தேனுக்கு எதிர்முனை இறுதியில் கடினத் தார் உள்ளது. கச்சா எண்ணெயை பகுத்து வடிக்கும் வாலையில் கிடைக்கும் வெவ்வேறு இயல்புகளுள்ள கீழ்மட்ட பிரிகையில் கடினதார் தங்கியிருக்கும். ஐதரோகார்பனான இத்தார் சேகரிக்கப்பட்டு பரவலாக கூரை வேயும் கலவையாகவும் நடைபாதை அமைக்கவும், மரங்களைப் பாதுகாக்கும் காப்பு மருந்தாகவும் மற்றும் இதன் உயர்ந்த பாகுநிலை திரவங்களுக்கு எதிர்ப்பாற்றலை வழங்கவும் இக்கரிமச் சேர்மம் உதவுகிறது. .
 
=== எரியும் ஐதரோகார்பன்கள்:- ===
 
உலகத்தின் தற்போதைய மின்னாற்றல் மற்றும் வெப்ப ஆற்றல் தேவைக்கு ஐதரோகார்பன்கள் முக்கிய ஆதாரமாக உள்ளன. ஏனெனில்,பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்ற ஐதரோகார்பன்கள் எரியும்போது உற்பத்தியாகும் வெப்பஆற்றல் நேரடியாக தண்ணீர் சூடேற்றிகளில் பயன்படுத்தப்பட்டு மீண்டும் சுழற்சிக்குப் பயன்படுகிறது. மின்னாற்றல் உற்பத்தி நிலையங்களில் மின்னாற்றல் உற்பத்திக்கும் இதே கொள்கை பயன்படுத்தப்படுகிறது..
 
பொதுவாக ஐதரோகார்பன்கள் ஆக்சிசனுடன் சேர்ந்து எரிகின்றன. அவ்வாறு எரியும்போது அவை நீராவி, கார்பன்டைஆக்சைடு மற்றும் வெப்பத்தை உண்டாக்குகின்றன. எளிய ஐதரோகார்பனான மீத்தேன் கீழ்கண்டவாறு எரிகிறது
CH4 + 2 O2 → 2 H2O + CO2 + ஆற்றல்
 
மிகக்குறைந்த அளவு காற்றில் மீத்தேன் எரியும்போது கார்பன் மோனாக்சைடு வாயுவும் நீராவியும் உருவாகின்றன
 
2 CH4 + 3 O2 → 2CO + 4H2O
 
புரோபேன் என்னும் ஐதரோகார்பன் கீழ்கண்டவாறு எரிகிறது
 
C3H8 + 5 O2 → 4 H2O + 3 CO2 + ஆற்றல்
 
CnH2n+2 + (3n+1)/2 O2 → (n+1) H2O + n CO2 + ஆற்றல்
 
 
ஐதரோகார்பன்கள் காற்றில் எரிகின்ற வினை வெப்ப உமிழ் வினைக்கு எடுத்துக்காட்டாகும்.
ஐதரோகார்பன்களை அடிப்படை புளோரினுடன் சேர்த்தும் எரிக்கவியலும். இவ்வினையில் கார்பன் டெட்ரா புளோரைடு மற்றும் ஐதரசன் புளோரைடு ஆகியன விளைகின்றன.
 
 
 
 
.
 
[[பகுப்பு:கரிம வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது