ஐரோப்பிய ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நிலப்பரப்பு 43,81,376 ச.கி.மீ.
clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB
வரிசை 102:
| footnote1 =
}}
'''ஐரோப்பிய ஒன்றியம்''' அல்லது '''ஐ.ஒ''' ('''European Union''' அல்லது '''EU''') என்பது தற்பொழுது [[ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்|28 உறுப்பு நாடுகளைக்]] கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். [[1992]]ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை ([[மாசுடிரிச் ஒப்பந்தம்]] என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், [[1950]]கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.
 
ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருட்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நகர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான [[பொது வணிகக் கொள்கை|வணிகக் கொள்கை]], [[பொது வேளாண்மைக் கொள்கை|வேளாண்மை]], [[பொது மீன்பிடிக் கொள்கை|மீன்பிடிக்]] கொள்கைகள் என்பவற்றுடன் [[ஐரோப்பிய ஒன்றிய பிரதேச வளர்ச்சிக் கொள்கை|பிரதேச வளர்ச்சிக் கொள்கை]]யையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் [[யூரோ]] எனப்படும் பொதுவான [[நாணயம்|நாணய]] முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒரு வெளிநாட்டலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், [[உலக வணிக அமைப்பு]], [[ஜி8|ஜி8 உச்சி மாநாடு]], [[ஐக்கிய நாடுகள் சபைஅவை]] என்பவற்றிலும் சார்பாண்மை (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "[[நாட்டோ]]" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. [[செஞ்சென் ஒப்பந்தம்|செஞ்சென் ஒப்பந்தத்தின்]] (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான [[கடவுச்சீட்டு]]க் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.
 
ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கப்பாடு, அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் [[ஐரோப்பிய ஆணையம்]], [[ஐரோப்பிய நாடாளுமன்றம்]], [[ஐரோப்பிய ஒன்றிய அவை]], [[ஐரோப்பிய அவை]], [[ஐரோப்பிய நீதிமன்றம்]], [[ஐரோப்பிய மத்திய வங்கி]] ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.
 
1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய [[ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம்]], 1957 ஆம் ஆண்டின் [[ரோம் ஒப்பந்தம்]] ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.
வரிசை 112:
2012ஆம் ஆண்டுக்கான [[அமைதிக்கான நோபல் பரிசு]] ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-104500712.html | title=அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு | publisher=[[தினமலர்]] | work=அக்டோபர் 12, 2012 | accessdate=அக்டோபர் 12, 2012}}</ref>
 
2013 ஜூலை 1-ம் தேதி [[குரோவாசியா]] நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது. <ref>[http://online.wsj.com/article/SB10001424127887324251504578577353042673108.html குரோவாசியா 28-வது உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது]</ref>
 
== வரலாறு ==
வரிசை 119:
1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று [[ஐரோப்பியப் பொருளியல் சமூகம்]] மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான [[ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம்]]. 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி மூன்று சமூகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின. இவை ஒருங்கே ''ஐரோப்பிய சமூகங்கள்'' என அழைக்கப்பட்டன.
 
1973 ஆம் ஆண்டில் இச் சமூகங்கள், [[டென்மார்க்]], [[அயர்லாந்து]], [[ஐக்கிய இராச்சியம்]] ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. இதே சமயத்தில் [[நோர்வே]]யும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அந்நாடு சமூகத்தில் இணையவில்லை. 1979 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது.
 
[[போர்த்துக்கல்]], [[கிரேக்க நாடு|கிரேக்கம்]], [[எசுப்பானியா]] ஆகிய நாடுகள் 1980ல் இதில் இணைந்தன. 1985 ஆம் ஆண்டில், [[செஞ்சென் ஒப்பந்தம்]] ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத்தக்க வகையில் அவற்றின் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. 1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன், தலைவர்கள் [[ஒற்றை ஐரோப்பியச் சட்டமூலம்]] (Single European Act) ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.
 
1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது. ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு-மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் [[கோப்பன்ஹேகன் கட்டளைவிதி]] (Copenhagen criteria) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
1993 நவம்பர் 1 ஆம் தேதி மாசுடிரிச் ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல் [[ஆஸ்திரியா]], [[சுவீடன்]], [[பின்லாந்து]] ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2002 ஆம் ஆண்டில் 12 உறுப்பு நாடுகளில் அவற்றின் நாணயங்களுக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட யூரோ [[நாணயம்]] புழக்கத்துக்கு வந்தது. பின்னர் [[ஐரோ வலயம்]] 15 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம் பெற்றது. அப்போது [[மால்ட்டா]], [[சைப்பிரஸ்]], [[சுலோவீனியா]], [[எஸ்தோனியா]], [[லத்வியா]], [[லித்துவேனியா]], [[போலந்து]], [[செக் குடியரசு]], [[சிலோவாக்கியா]], [[ஹங்கேரி]] ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன.
 
2007 ஜனவரி 1 ஆம் தேதி [[ருமேனியா]]வும், [[பல்கேரியா]]வும் இதன் புதிய உறுப்பு நாடுகளாயின. அதேவேளை சிலோவேனியா யூரோவைத் தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் [[லிஸ்பன் ஒப்பந்தம்|லிஸ்பன் ஒப்பந்தத்தில்]] கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்து செயல்படாமல்போன [[ஐரோப்பிய அரசியலமைப்பு]]க்குப் பதிலாக உருவானது. ஜூன் 2008 இல் இதனையும் அயர்லாந்து வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது