கினபாலு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வரிசை 20:
}}
 
'''கினபாலு மலை''' ({{lang-ms|'''Gunung Kinabalu'''}}) என்பது [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசியாவின்]] [[போர்னியோ]] தீவில் இருக்கும் மிகப் புகழ் பெற்ற மலையாகும். இந்த மலை [[கிழக்கு மலேசியா|கிழக்கு மலேசியாவின்]] [[சபா]] மாநிலத்தில் இருக்கிறது. கினபாலு தேசியப் பூங்காவில் இந்த மலை இருக்கிறது. உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.<ref>[http://www.amazing-borneo.com/mount-kinabalu/introduction.html/ Mount Kinabalu is the most dramatic feature in Sabah and the tallest peak between the Himalayas & the New Guinea.]</ref>
 
வட போர்னியோவில் இருக்கும் குரோக்கர் மலைத் தொடரிலும். மலாயாத் தீவு கூட்டத்திலும் இந்த மலை, மிக உயரமான மலையாகும். உலகின் பிரதான மலைகளில் கினபாலு மலை 20ஆவது இடத்தைப் பெறுகிறது.<ref>[http://peaklist.org/WWlists/WorldTop50.html/ World Top 50 Most Prominent Peaks] </ref>
 
==பொது==
வரிசை 31:
 
==வரலாறு==
உலகின் மிக அரிதான தாவரங்களும், விலங்குகளும் கினபாலு மலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு இமாலய, ஆஸ்திரேலிய, இந்தோ மலாயா பகுதிகளைச் சேர்ந்த உயிர்ப் பொருட்கள் இருக்கின்றன. [[ஐரோப்பா]], [[வட அமெரிக்கா|வட அமெரிக்காவில்]] உள்ள உயிர்ப் பொருட்களில் பாதி இங்கு இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே, உலகின் மிக முக்கியமான உயிர்ப் பொருள்களின் தளமாக கினபாலு மலைப் பூங்கா போற்றப்படுகிறது. <ref>[http://www.suteraharbour.com/v4/index.php?option=com_content&view=article&id=109&Itemid=57/ In December 2000, UNESCO recognised Mount Kinabalu as Malaysia's first World Heritage Site.]</ref>
 
1851இல் போர்னியோவில் காலனித்துவ ஆளுநர்களில் ஒருவராக இருந்த பிரித்தானியர் [[ஹியூ லோ]] என்பவர்தான் முதன் முதலில் கினபாலு மலையின் உச்சியை அடைந்தார் என்று சொல்லப்படுகிறது. அது தவறாகும். ஹியூ லோவின் மலையேற்றத்திற்கான சான்றுகள் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அவரின் பெயர் வரலாற்றில் முதலிடம் பெறுகிறது.
 
===ஜான் வொயிட்ஹெட்===
வரிசை 43:
==ஹியூ லோ==
 
ஹியூ லோ என்பவர் [[மலாயா|மலாயாவில்]] பல வளர்ச்சி மாற்றங்களைச் செய்தவர். மலேசிய இந்தியர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்த நல்ல ஒரு மனிதர். ரோணா, அரோண்டா, [[ரஜூ]]லா, [[ஜலகோபால்]] போன்ற கப்பல்கள் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களை மலாயாவுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே, ஹியூ லோ தமிழர்களை மலாயாவில் கொண்டு வந்து சேர்த்தவர்.
 
மலாயாவில் ரப்பரை அறிமுகம் செய்த மாமனிதர் என்று மலேசியர்கள் இன்றுவரை புகழ்கின்றனர். எந்த ஒரு மலேசிய வரலாற்றுப் பாட நூலிலும் ஹியூ லோவின் பெயர் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். அந்த அளவிற்கு மலேசியாவில் புகழ் பெற்றவர். மலேசியர்களின் மனங்களின் ஆழமான வரலாற்றுச் சுவடுகளைப் பதித்துச் சென்ற பிரித்தானியர்களில் ஹியூ லோ முதலிடம் வகிக்கிறார்.
 
===கியாவ் கிராமம்===
 
முதன் முதலில் கினபாலு மலையின் உச்சி அடைவதில் ஹியூ லோ பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார். 42 பேர் அடங்கிய குழுவினருடன் அந்த மலையில் ஏறினார். ஏறுவதற்கு ஒன்பது நாட்கள் பிடித்தன.<ref>[http://www.mount-kinabalu-borneo.com/mount-kinabalu-history.html/ In 1851, Sir Hugh Low, then the Colonial Secretary for the British crown colony of Labuan, took nine days to reach the summit plateau, traveling in a group of 42 people.]</ref> ஹியூ லோவுடன் ஜான் வொயிட்ஹெட் எனும் தாவரவியலாளரும் உடன் சென்றார். அங்கு அவர்கள் கண்ணைக் கவரும் அழகிய பறவைகளைக் கண்டார்கள்.
 
கினபாலு மலையின் ஆகக் கீழே கியாவ் எனும் ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் இருந்துதான் ஹியூ லோ குழுவினர் தங்களின் பயணத்தைத் தொடங்கினார்கள். இங்கேதான் மலேசியப் புகழ் [[கடமாயான் நீர்வீழ்ச்சி|கடமாயான் நீர்வீழ்ச்சியும்]] இருக்கிறது. அங்குள்ள கிராமவாசிகள் அக்குழுவினர்களுக்கு வழிகாட்டிகளாகவும் சுமை தூக்குபவர்களாகவும் உதவிகள் செய்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/கினபாலு_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது