"மனித உரிமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை (3) using AWB
சி (Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை (3) using AWB)
 
== அடிப்படை மனித உரிமைகள் ==
எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட [[உலக மனித உரிமைகள் சாற்றுரை|உலக மனித உரிமைகள் சாற்றுரைகள்]] அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. [[உரிமைகளின் சட்டம் (ஐக்கிய அமெரிக்கா)|ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம்]], கனடாவின் [[உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம்]] போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன. பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும்.
 
* [[வாழும் உரிமை]]
* [[ஊடகச் சுதந்திரம்]]
* [[தகவல் சுதந்திரம்]]
* [[சமயச் சுதந்திரம்]]
 
* [[அடிமையாகா உரிமை]]
பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன. இவற்றுள், கிமு 539 இல் பாரசீகப் [[பேரரசன் சைரஸ்]] என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான [[பேரரசன் அசோகன்|அசோகன்]] வெளியிட்ட [[அசோகனின் ஆணை]] எனப்படும் ஆணையும்; கிபி 622 இல் [[முகமது நபி]]யால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட "[[சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்]]" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
 
ஆனாலும், நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் [[விவசாயி]]களின் கோரிக்கைகள் தொடர்பாக [[செருமனி]]யில் வெளியிடப்பட்ட "[[கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்]]" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே [[ஐரோப்பாவின்]] முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட [[பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம்]] என அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.
 
[[படிமம்:Declaration of Human Rights.jpg|right|thumb|1789 ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரான்சின் தேசிய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ''மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை''.]]
18 ஆம் நூற்றாண்டில் [[ஐக்கிய அமெரிக்கா]]விலும் (1776), [[பிரான்ஸ்|பிரான்சிலும்]] (1789) இரண்டு முக்கிய புரட்சிகள் இடம்பெற்றன. இவற்றின் விளைவாக இரண்டு அறிக்கைகள் வெளியிடபட்டன. ஒன்று [[ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கை]], மற்றது [[மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை]]. இரண்டுமே சில சட்டம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்டியிருந்தன. மேலும் 1776 ஆம் ஆண்டின் [[உரிமைகளுக்கான வெர்ஜீனியா அறிக்கை]]யும் பல அடிப்படை உரிமைகளைச் சட்டத்தில் இடம்பெறச் செய்தது.
 
{{Cquote|எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களைப் படைத்தவன் உயிர்வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்ற அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகள் சிலவற்றை அவர்களுக்கு அளித்துள்ளான் என்னும் உண்மைகள் தாமாகவே விளக்கம் பெறுகின்றன எனக் கொள்கிறோம்.|30px|30px|ஐக்கிய அமெரிக்க விடுதலைக்கான அறிக்கை, 1776}}
இவற்றைத் தொடர்ந்து 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில், [[தாமசு பைன்]], [[ஜான் இசுட்டுவார்ட் மில்]], [[ஜி டபிள்யூ. எஃப். கேகெல்]] போன்றோரால் மனித உரிமைகள் தொடர்பான [[மெய்யியல்]] வளர்ச்சி பெறலாயிற்று.
 
20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் பல குழுக்களும், இயக்கங்களும் மனித உரிமையின் பெயரால் பலவகையான சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. மேற்கு [[ஐரோப்பா]]விலும், வட அமெரிக்காவிலும் தொழிலாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, மிகக்குறைந்த வேலை நிலைமைகளை நிலைநாட்டுதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்துதல் போன்ற உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. [[பெண்ணுரிமை]] இயக்கங்களால் பல நாடுகளில் பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. நாட்டு விடுதலை இயக்கங்கள் பல [[குடியேற்றவாதம்|குடியேற்றவாத]] அரசுகளை வெளியேற்றி விடுதலை பெற்றுக்கொண்டன. இவற்றுள் [[மகாத்மா காந்தி]]யின் தலைமையிலான [[இந்திய விடுதலைப் போராட்டம்]] முக்கியமானது.
 
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் "லீபர் நெறிகள்" 1864 ஆம் ஆண்டின் முதலாம் [[ஜெனீவா மாநாடு]] என்பன [[அனைத்துலக மனிதாபிமானச் சட்டம்|அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு]] அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.
 
உலகப் போர்களும், அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்களும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் வளர்ச்சிபெறத் தூண்டுதலாக அமைந்தன. முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான [[வெர்சாய் ஒப்பந்தம்|வெர்சாய் ஒப்பந்தத்தைத்]] தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் [[நாடுகள் சங்கம்]] உருவானது. இச் சங்கம், ஆயுதக் களைவு; கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராசதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது.
 
இச் சங்கத்தின் பட்டயத்தில் இச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவேண்டிய பல உரிமைகள் குறித்த ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வுரிமைகள் பின்னர், இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டன.
 
1945 ஆம் ஆண்டின் [[யால்ட்டா மாநாட்டில்]], நாடுகளின் சங்கத்தின் பணிகளை முன்னெடுப்பதற்குப் புதிய அமைப்பொன்றை உருவாக்க கூட்டு வல்லரசுகள் இணங்கின. இதன் அடிப்படையிலேயே [[ஐக்கிய நாடுகள் சபைஅவை]] உருவாக்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் தொடர்பில் இவ்வமைப்பு பெரும் பங்கு ஆற்றியுள்ளது. உலகப் போர்களைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையும்அவையும் அதன் உறுப்பு நாடுகளும் ஈடுபட்ட கலந்துரையாடல்களும், உருவாக்கிய சட்ட அமைப்புக்களுமே இன்றைய அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் என்பவற்றில் உள்ளடங்கியுள்ளன.
 
== மனித உரிமைகளின் மூலங்கள் ==
மனித உரிமைகளின் மூலங்கள், ஆதாரங்கள் அல்லது நியாப்படுத்தல் மனித உரிமைகளின் இருத்தல் பற்றியும், அவற்றைப் பேணுவதன் அவசியம் பற்றி, அல்லது மனித உரிமை கோட்பாட்டின் போதாமைகள் பற்றி சுட்டிக் காட்டுகின்றன.
 
=== இயற்கை உரிமைகள் ===
 
=== உலக மனித உரிமைகள் சாற்றுரை ===
[[படிமம்:EleanorRooseveltHumanRights.png|rightt|thumb|200px|"இது ஒரு ஒப்பந்தம் அல்ல...[எதிர் காலத்தில், இது] உலகத்தின் [[சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்]] ஆக உருவாகக் கூடும்."<ref>[http://www.americanrhetoric.com/speeches/eleanorrooseveltdeclarationhumanrights.htm எலீனோர் ரூஸ்வெல்ட்: ஐக்கிய நாடுகள் சபையின்அவையின் பொதுச் சபையில் பேசியது] [[10 டிசம்பர்]] [[1948]] பாரிஸ், பிரான்ஸ்</ref> 1949 ஆம் ஆண்டில், உலக மனித உரிமைகள் சாற்றுரையின் எசுப்பானிய மொழிப் பிரதியுடன் [[எலினோர் ரூஸ்வெல்ட்]].]]
[[உலக மனித உரிமைகள் சாற்றுரை]] என்பது [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யால் நிறைவேற்றப்பட்ட கட்டுப்படுத்தாத ஒரு சாற்றுரை ஆகும். 1949 ஆம் ஆண்டில் இச் சாற்றுரை உருவாக்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற அட்டூழியங்களும் ஒரு காரணமாகும். இது ஒரு கட்டுப்படுத்தாத சாற்றுரையாக இருப்பினும் தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. நாடுகளால் அல்லது பிற நீதித் துறைகளினால் பொருத்தமான வேளைகளில் இதனைப் பயன்படுத்த முடியும். விடுதலை, நீதி, உலக அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாக அமைபவை என்ற வகையில் சில மனித, குடிசார், பொருளாதார, சமூக உரிமைகளை முன்னெடுக்குமாறு உறுப்பு நாடுகளை இச் சாற்றுரை வேண்டுகிறது. நாடுகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் குடிமக்கள் பால் அவற்றுக்கு இருக்கக்கூடிய கடமைகளைச் செய்யுமாறு தூண்டும் முதலாவது உலகச் சட்டம் சார்ந்த முயற்சி இச் சாற்றுரை ஆகும்.
 
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1462491" இருந்து மீள்விக்கப்பட்டது