சமூகவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
சமவுடமை அல்லது சமூகவுடமை (Socialism, சோசலிசம், சோஷியலிசம் அல்லது சோசியலிசம்) என்பது ஒரு அரசியல்-பொருளியல் கோட்பாடு. பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. உற்பத்தி காரணிகள் (Means of Production) மற்றும் இயற்கை வளங்கள் அரசு அல்லது சமூக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. முக்கிய துறைகள் அரசுடமையாக இருப்பதையும், சமத்துவத்துவை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கை தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி, இலாப நோக்கத்தை கொண்டு இயங்கும் முதலாளித்துவ கொள்கைகள், தனி நபர்களிடம் செல்வம் குவிதலை எதிர்த்து அமைகின்றன. தொழிற்புரட்சி மற்றும் முதலாளித்துவம் உருவாக்கிய ஏற்றதாழ்வுகளுக்கு தீர்வாக சமவுடமை கோட்பாடு முன்வைக்கப்பட்டது.
 
== பல்வேறு வடிவங்கள் ==
வரிசை 30:
 
அனைத்து சமவுடமை நாடுகளிலும் பயன்படுத்தப் படும் முறை. குறிப்பாக இது சோவியத்து உருசியா உருவாக்கிய அமைப்பு. 1930களில் ஏற்பட்ட பெருமந்தமும் சோவியத்து உருசியாவின் எழுச்சியும் திட்டமிடுதலின் இன்றியமையாமையை உலகிற்கு உணர்த்தியது. அதன் பின்னர், 'பொருளாதாரத்தில் தலையிடா' கொள்கையை முன் வைக்கின்ற, முதலாளித்துவ நாடுகளும் கூட சிறிய அளவிலான திட்டமிடுதலைப் பயன்படுத்தத் தொடங்கின. திட்டமிடுதல் என்பது சோவியத்து உருசியா உலகிற்கு அளித்த பரிசாக புகழப்படுகிறது.
 
== சமவுடமை முன்வைக்கும் முதலாளித்துவ எதிர்ப்பு வாதங்கள் ==
 
முதலாளித்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற வணிகக் கோட்பாடுகளால் ஏற்படும் தீங்குகளாக சமவுடமைவாதிகள் கூறுபவை:
* முதலாளித்துவம் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கின்றது.
* இலாபம் மற்றும் செல்வம் சிலரின் கைகளில் மட்டுமே குவிகின்றது.
* உழைப்புச்சுரண்டல்
* தலையிடா கொள்கை பின்பற்றும் அரசுகளால் சமூகத் தேவைகள் புறக்கணிக்கப் படுகின்றன.
* கட்டுப்பாடற்ற வணிகக் கொள்கை பின்பற்றப் படுவதனால் வீழ்ச்சி மற்றும் பெருமந்தங்கள் உருவாகின்றன.
 
== சமவுடமை நாடுகள் ==
 
உலகின் பல்வேறு நாடுகள் பல்வேறு தருணங்களில் தங்களை சமவுடமை நாடுகளாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளன. சோவியத்து உருசியாவின் வெற்றியினால் ஈர்க்கப்பட்டு தங்களை சமவுடமை அரசுகளாக அடையாளப் படுத்திக்கொண்டன.
இந்நாடுகளை இரு வகைகளாக பார்க்கலாம்
# மார்க்சிய-லெனினிய சமவுடமை நாடுகள்.
"https://ta.wikipedia.org/wiki/சமூகவுடைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது