ஆதிசக்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மீனாட்சி: *விரிவாக்கம்*
வரிசை 22:
சிவன் பார்வதி தம்பதியரின் இரண்டாவது குமாரன் [[முருகன்]] ஆவார். சிவபெருமான் தனது [[சிவமுகங்கள்|ஆறு முகங்களிலும்]] உள்ள நெற்றிக் கண்களிலி்ருந்து நெருப்புபொறிகளை தோற்றுவித்தார். அதனை [[வாயு தேவன்]] [[சரவணப்பொய்கை]] நதியில் சேர்ப்பித்தார். அந்நதியில் நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக ஆனது. அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்தனர். அன்னையாகிய பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளை அனைத்த பொழுது ஆறுமுகமும், பன்னிரு கரமும் கொண்ட குமாரனாக அக்குழந்தை ஒன்றினைந்தது. ஆறு முகங்களை உடையதால் ஆறுமுகம் என்றும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால் கார்த்திக்கேயன் என்றும், அழகான குழந்தை என்பதால் முருகன் என்றும் அறியப்படுகிறார். சிவபெருமானும் பார்வதியும் கயிலையில் மனம் மகிழ்ந்திருந்த பொழுது கரடி ரூபம் கொண்டு கயிலை காடுகளில் மகிழந்ததாகவும், அதனால் சிவரூபமான ஜாம்பவான் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
 
====மீனாட்சி====
'''மீனாட்சி''' என்பவர் [[பாண்டியன்|பாண்டிய]] மாமன்னன் [[மலையத்துவஜன்]] மற்றும் [[காஞ்சனமாலை]] தம்பதியரின் மகளும் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] உருவமான [[சுந்தரேசர்|சுந்தரேசரரின்]] மனைவியும் ஆவார். இவர் தடாதகை பிராட்டி எனவும் அறியப்படுகிறார். இவர் மிகுந்த வீரம் கொண்டவராகவும், தந்தையின் இறப்பிற்குப் பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படை திரட்டி கையிலை வரை சென்று வென்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கையிலையில் சிவபெருமானை கண்டு வெட்கம் கொண்டு பெண் நிலையை அடைந்ததால் சிவபெருமானையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆதிசக்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது