சுங்கை சிப்புட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 3:
<!-- Basic info ---------------->
|official_name = சுங்கை சிப்புட்
|other_name = Sungai Siput </br />田螺
|native_name = <!-- for cities whose native name is not in English -->
|nickname =
வரிசை 124:
}}
 
'''சுங்கை சிப்புட்''' (''Sungai Siput'') (田螺) எனும் நகரம் [[மலேசியா]], [[பேராக்]] மாநிலத்தில் உள்ளது. இந்த நகருக்கு ’சங்கு நதி’ எனும் அழகிய தமிழ்ப் பெயரும் உண்டு. சுங்கை சிப்புட் துணை மாவட்டத்தின் பெயரும் சுங்கை சிப்புட் என்றே அழைக்கப் படுகின்றது. இந்தத் துணை மாவட்டம் கோலாகங்சார் மாவட்டத்தில் இருக்கின்றது.
 
சுங்கை சிப்புட் நகரம் மலேசியாவில் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாகும். மலேசிய இந்தியத் தலைவர்களில் சிலரின் அரசியல் வாழ்க்கையை நிர்ணயம் செய்த நகரம் என்றும் இதற்கு ஓர் அடைமொழி உண்டு. மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தத் தொகுதி இந்தியர்களுடையதாக இருந்து வருகிறது.
வரிசை 138:
[[File:Jayakumar Before Arrest2.jpg|thumb|left|225px|டாக்டர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப் படுகிறார்]]
[[File:Sungai Siput Town2.jpg|thumb|left|225px|சுங்கை சிப்புட் நகரத்தின் மற்றொரு தோற்றம்]]
சுங்கை என்றால் மலேசிய மொழியில் ஆறு அல்லது நதி என்று பொருள். சிப்புட் என்றால் நத்தை அல்லது சங்கு. அதனால், சுங்கை சிப்புட் என்பது நத்தை நதி அல்லது சங்கு நதி என்று பொருள் படுகிறது. இந்த ஆறு முன்பு மஸ்ஜீத் இந்தியா எனும் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்தது.[http://sungaisiput.blogspot.com/]
 
நகர வளர்ச்சியின் காரணமாக, அந்த ஆறு முறையாகக் கவனிக்கப் படாததால் இப்போது தூர்ந்து போய் விட்டது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சுங்கை சிப்புட் ஆற்றில் நிறைய நத்தைகள் இருந்தன. அந்த நத்தைகளில் சிலவகை மனிதர்களின் உணவாகவும் அமைந்தன.
 
===மலாயா அவசரகாலம்===
வரிசை 156:
===‘பிரிக்ஸ்’ திட்டம்===
 
அப்போது மலாயாவில் பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கைப் பிரிவின் இயக்குநராக ஹரால்டு பிரிக்ஸ் என்பவர் இருந்தார்.[http://en.wikipedia.org/wiki/Harold_Rawdon_Briggs] அவர் புதுமையான ஒரு திட்டத்தைச் செயல் படுத்தினார். அதன் பெயர் ‘பிரிக்ஸ்’ திட்டம்.
 
மலாயா நாடு காடுகளும் மலைக் குன்றுகளும் நிறைந்த ஒரு நாடு. இவற்றின் எல்லைப் பகுதிகளில் 500,000 கிராமப்புற மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தான் மலாயாக் கம்யூனிஸ்டுகளுக்கு உணவுப் பொருள்களை அச்சுறுத்தல் காரணமாக வழங்கி வருகின்றனர் என்பதை ஹரால்டு பிரிக்ஸ் உணர்ந்தார்.
வரிசை 162:
===கம்யூனிஸ்டுப் பயங்கரவாதிகள்===
 
ஹரால்டு பிரிக்ஸின் திட்டம் இதுதான். இந்த ஒதுக்குப்புற கிராம மக்களைப் புதுக்கிராமங்களில் புதுக் குடியேற்றம் செய்வது. அவ்வாறு குடியேற்றம் செய்யப் பட்டவர்களுக்கு போலீஸ், இராணுவப் பாதுகாப்பு வழங்குவது. இறுதியில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றது.
 
ஆயுதம் இல்லாமல் கம்யூனிஸ்டுகளைத் தோற்கடித்த ஒரே நாடு மலாயா தான் என்று உலக வரலாறு சொல்கிறது. ஏறக்குறைய 20 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் கம்யூனிஸ்டுப் பயங்கரவாதிகள் மலாயாவில் தோற்கடிக்கப் பட்டனர். சுங்கை சிப்புட் வட்டாரத்தைப் பொருத்த வரையில் 1960 ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களின் ‘கறுப்பு’ பட்டியலில் இருந்தது.
வரிசை 170:
மலேசிய அரசியலில் சில முக்கிய தலைவர்களை உருவாக்கிக் கொடுத்த பெருமை இந்த சுங்கை சிப்புட் நகரத்தைச் சாரும். அமரர் துன் சம்பந்தன், டத்தோஸ்ரீ சாமிவேலு, டாக்டர் ஜெயகுமார், துன் லியோங் இயூ கோ, தோக் பாங்கு ஹமீட் போன்றவர்கள் இந்த நகரில் இருந்து தான் தேசிய அளவில் பிரபலம் அடைந்தனர்.[http://www.indianmalaysian.com/sound/modules.php?name=News&file=article&sid=277]
 
துன் [[வீ. தி. சம்பந்தன்]] அவர்கள் சுங்கை சிப்புட்டில் பிறந்தவர். இவர் ம.இ.கா என்று அழைக்கப் படும் [[மலேசிய இந்திய காங்கிரசு|மலேசிய இந்திய காங்கிரசின்]] 5 வது தலைவர். இவர் மலேசிய அரசாங்கத்தில் பல அமைச்சுகளில் அமைச்சர் பதவியை வகித்துள்ளார்.[http://pmr.penerangan.gov.my/index.php/maklumat-kenegaraan/7721-tun-sambanthan.html] மலேசிய வரலாற்றில் மிக முக்கிய நாளாக அமைவது மலேசியாவின் சுதந்திர தினம் ஆகும். மலேசியா 31 ஆகஸ்டு 1957ல் சுதந்திரம் அடைந்தது.
 
===லண்டன் பயணம்===
வரிசை 181:
 
==டத்தோ சாமிவேலு==
டத்தோ ஸ்ரீ [[ச. சாமிவேலு]] [http://en.wikipedia.org/wiki/Samy_Vellu] சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் 1974 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டு வரை சுங்கை சிப்புட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இவர் 29 ஆண்டுகள் மலேசியத் தகவல் தொழில்நுட்பம், மலேசியப் பொதுப் பணித் துறைகளில் அமைச்சராக இருந்து வந்தவர்.
 
இவருடைய தந்தை ஒரு பால் மரம் வெட்டும் தொழிலாளி. ஒரு சாதாரண தொழிலாளியின் மகன் ஒரு நாட்டின் அமைச்சராக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு. இவர் தொடக்க காலத்தில் கோலாலம்பூரில் ஒரு பேருந்து ஓட்டுபவராகப் பணியாற்றினார். பகலில் வேலை செய்து இரவு நேரங்களில் படவரைஞர் துறையில் உயர் கல்வி படித்தார். பின்னர், அவர் ஒரு கட்டிடக் கலைஞரானார்.
வரிசை 194:
 
==டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ்==
மைக்கல் [[ஜெயக்குமார் தேவராஜ்]], 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மக்கள் நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார். 1999, 2004 ஆம் ஆண்டு தேர்தல்களில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி கண்டவர்.
 
இவர் மலேசியாவில் சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.[http://drctoni.blogspot.com/2011/07/drjayakumars-arrest-travesty-of-justice.html] ஜுலை 2011ல் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். 28 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.[http://www.negarakita.com/Post-228534-DAP+calls+for+immediate+release+of+the+30+PSM+members,+including+Sungai+Siput+MP+Michael+Jayakumar+i] மலேசியாவில் தூய்மையான பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களைத் தன் தொகுதி மக்களிடம் வழங்கினார். அப்போது அவர் கைது செய்யப் பட்டார். அவருடன் மேலும் ஐவர் கைது செய்யப் பட்டனர்.
வரிசை 200:
===கமுந்திங் சிறையில்===
 
இவர்கள் கமுந்திங் சிறையில் இருக்கும் போது மலேசியாவில் பல்லாயிரம் இந்தியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இவர்கள் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று வேண்டினர்.[http://dinmerican.wordpress.com/2011/07/30/freeing-us-was-a-smart-political-move-says-dr-michael-jeyakumar/] மலேசிய இந்துக் கோயில்கள், மாதாகோயில்களில் இவர்களுக்காகச் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதைத் தவிர அவரை விடுதலை செய்யச் சொல்லி 100,000 பேர் கையொப்பமிட்டு ஒரு நினைவுக் கடிதத்தை மலேசியப் பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.[http://www.nkkhoo.com/2011/07/20/support-release-dr-jayakumar-online-campaign/][http://masterwordsmith-unplugged.blogspot.com/2011/07/gentle-mp-of-sungei-siput.html]
 
டாக்டர் ஜெயக்குமாரின் விடுதலைக்குப் பின்னர் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், மூன்று மாதங்களில் ரத்துச் செய்யப் படும் என்று மலேசியப் பிரதமர் [[நஜீப் துன் ரசாக்]] அறிவித்துள்ளார்.
வரிசை 211:
2008 - மலேசியப் பொதுத் தேர்தல் புள்ளி விவரங்கள் வருமாறு:
 
</br />
மலாய்க்காரர்கள்: 31.46%
சீனர்கள்: 41.35%
வரிசை 225:
* வாக்காளர் விழுக்காடு: 69.91%
* பெரும்பான்மை: 1,821
 
</br>
 
==தமிழ்ப் பள்ளிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுங்கை_சிப்புட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது