தாட்சாயிணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
'''தாட்சாயிணி''' என்பவர் [[சிவபெருமான்|சிவபெருமானின்]] மனைவியாவார். இவர் சிவபெருமானிலிருந்து பிரிந்த [[ஆதி சக்தி|ஆதி சக்தியின்]] வடிவமாக கருதப்படுகிறார். இவர் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். இவரை பவானியென [[சிவமகாபுராணம்]] கூறுகிறது. <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=10943</ref> [[பிரம்மா|பிரம்மாவினால்]] தோற்றுவிக்கப்பட்ட [[பிரஜாபதி]] [[தட்சன்|தட்சனுக்கும்]], முதல் மனிதர்களான [[சுவாயம்பு மனு]] மற்றும் [[தருரூபை]] தம்பதிகளின் மகளான [[பிரசூதி]] ஆகியோருக்கு மகளாக பிறந்தார். அதனால் பிரம்மாவின் பேத்தியாக கருதப்படுகிறார்.
 
சிவபெருமானிடம் இருந்த வன்மம் காரணமாக பிரஜாபதி தட்சன் சதி சிவபெருமான் திருமணத்திற்குப் பிறகு பெரும் யாகமொன்றினை நடத்துகிறார். அந்த யாகத்திற்கு சிவபெருமானுக்கு தாட்சாயிணிக்கும் அழைப்பு அனுப்பாமல் இருக்கிறார். தந்தையின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக தட்சனின் யாகத்திற்கு வந்த தாட்சாயிணி அவமானங்களை சந்திக்கின்றார். அத்துடன் தன்னுடைய கணவரான சிவபெருமானை தட்சன் அவமதித்தை தொடர்ந்து அந்த யாகத்தில் விழுந்து மறிக்கின்றார். அதனையறிந்த சிவபெருமான் வீரபத்திரனை தோற்றுவத்து தட்சனை கொல்லும் படி உத்தரவிடுகிறார். தாட்சாயிணியின் உடலை எடுத்துக் கொண்டு நிலையின்றி சிவபெருமான் அலைவதைக் கண்ட திருமால் தாட்சாயிணியின் உடலை சக்கராயுதத்தினால் தகர்க்கின்றார். அதனால் தாட்சாயிணியின் உடல்கள் பல பகுதிகளாக சிதருண்டு பூலோகத்தில் பல இடங்களில் விழுகின்றது. இவ்வாறு விழுந்த இடங்களை சிவபெருமான் சக்தி பீடங்களாக மாற்றி மக்களின் வழிபாட்டிற்கும், அந்த இடங்களுக்கு காவலாகவும் பைரவர்களை தோற்றுவிக்கின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/தாட்சாயிணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது