ஆயிரத்தொரு இரவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
[[File:Sultan Pardons Scheherazade.jpg|thumb|200px|அரசர் சாரியாருக்கு கதை சொல்லும் செகர்சதா]]
'''ஆயிரத்தொரு இரவுகள்''' (''One Thousand and One Nights'' [[அரபு மொழி|அரபி]]: كتاب ألف ليلة وليلة‎) என்பது [[மையக்கிழக்கு]] மற்றும் [[தெற்காசியா]]வை சேர்ந்த [[எழுத்தாளர்]]களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் [[கதை]]களைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். இந்நூலிலுள்ள கதைகளின் மூலங்கள் பண்டைய அரேபியா, [[யேமன்]], பண்டைக்கால [[இந்திய இலக்கியம்|இந்திய இலக்கியங்கள்]]<ref>Marzolph (2007), "Arabian Nights", Encyclopaedia of Islam (Leiden: Brill) I.</ref>, [[பாரசீக இலக்கியம்|பாரசீக இலக்கியங்கள்]], பழங்கால எகிப்திய இலக்கியங்கள், [[மெசொப்பொத்தேமியா|மெசொப்பொத்தேமியத்]] [[தொன்மம்|தொன்மங்கள்]], பண்டைச் [[சிரியா]], சின்ன ஆசியா, [[கலீபா]]க்கள் காலத்து மத்தியகால அராபிய நாட்டார் கதைகள் என்பவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை [[இசுலாமிய பொற்காலம்|இசுலாமிய பொற்கால]] நேரத்தில் [[அரபு மொழி]]யில் தொகுக்கப்பட்டன. இந்நூலின் எல்லாப் பதிப்புக்களிலும் உள்ள பொதுவான அம்சம், அரசர் சாரியார் மற்றும் அவர் மனைவி செகர்சதாவினதுமான முதன்மைக் கதையாகும். ஏனைய கதைகள் இம் முதன்மைக் கதையில் இருந்தே நகர்கின்றன. சில கதைகள் தனிக் கதைகளாகவும் வேறு சில கதைகள் பிற கதைகளில் கதைக்குள் கதையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. சில பதிப்புக்கள் 1001 இரவுகளை உள்ளடக்கியிருந்தாலும் வேறு சில பதிப்புக்களில் சில நூறு இரவுகள் மட்டுமே காணப்படுகின்றன.
 
இக்கதைகள் முதன் முதலாக 1704ல் ''இரவுகள்'' என்ற பெயரில் [[பிரெஞ்சு மொழி]]யிலும், பின்னர் 1706ல் ''அரேபிய இரவுகள்'' என [[ஆங்கில மொழி|ஆங்கிலத்திலும்]] மொழிபெயற்கப்பட்டன. தொடர்ந்து பிற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன.
 
இந்நூலிலுள்ள கதைகளுள் பெரிதும் அறியப்பட்டவை அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், சிந்துபாத் ஆகியவையாகும். இக்கதைகள் உண்மையான அரேபிய நாட்டார் கதைகளாக இருந்திருக்கக் கூடியன ஆயினும், இவை ஆயிரத்தொரு இரவுகள் கதைத்தொகுதியின் பகுதிகள் அல்ல. ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டபோது இவை இடைச் செருகல் செய்யப்பட்டன<ref>John Payne, Alaeddin and the Enchanted Lamp and Other Stories, (London 1901) gives details of Galland's encounter with 'Hanna' in 1709 and of the discovery in the Bibliothèque Nationale, Paris of two Arabic manuscripts containing Aladdin and two more of the added tales [http://www.wollamshram.ca/1001/index.htm Text of "Alaeddin and the enchanted lamp"]</ref>.
வரிசை 9:
 
[[File:Arabian nights manuscript.jpg|thumb|200px|left|1300 வாக்கில் அரபு மொழியில் எழுதப்பட்ட ஆயிரத்தொரு இரவுகள் நூலின் கையெழுத்துப் பிரதி]]
முதன்மைக் கதை பாரசீக அரசனையும் அவன் புதிய [[மனைவி]]யையும் பற்றியது. அரசன் சாரியார், தனது முதல் மனைவி தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததை அறிந்து அவளுக்கு [[மரணதண்டனை]] விதிக்கிறான். பின்னர் எல்லாப் பெண்களுமே நன்றிகெட்டவர்கள் என அறிவிக்கிறான். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்துப் பல கன்னிகளை மணம் செய்து அடுத்த நாள் காலையில் கொன்று விடுவதை வழமையாகக் கொண்டான். நாளடைவில் அரசன் மணம் செய்வதற்குப் [[பெண்]]கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அரசனுக்குப் பெண்தேடும் பொறுப்பைக் கொண்டிருந்த அமைச்சனின் மகள் தான் அரசனை மணம் செய்வதாகக் கூறினாள். தயக்கத்துடன் ஒப்புக்கொண்ட அமைச்சன் தனது மகளை அரசனுக்கு மணம் முடித்து வைத்தான். மணநாள் இரவில் செகர்சதா என்னும் அப்பெண் அரசனுக்குக் கதை சொல்லத் தொடங்கினாள். ஆனால் அக்கதையை முடிக்கவில்லை. அக்கதையின் முடிவை அறிவதற்காக அரசன் அவளைக் கொல்லாமல் வைத்திருக்க வேண்டியதாயிற்று. அடுத்த நாள் இரவும் முதல் கதையை முடித்தபின் இன்னொரு கதையைத் தொடங்கி இடையில் நிறுத்திவிட்டாள். இவ்வாறு 1001 இரவுகள் சொல்லப்பட்ட கதைகளே இந் நூலில் காணும் கதைகளாகும்.
 
இதிலுள்ள கதைகள் பல்வேறு விதமானவை. இவை வரலாற்றுக் கதைகள், மிகுபுனைவு கதைகள், காதல் கதைகள், துன்பியல் கதைகள், நகைச்சுவைக் கதைகள், கவிதைகள் எனப் பலவாறானவையாக உள்ளன. ஏராளமான கதைகள் கற்பனை மனிதர்கள், இடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருப்பதோடு, இடையிடையே உண்மையான [[மனிதர்]]கள், இடங்களைப் பற்றியவையாகவும் இருக்கின்றன.
வரிசை 18:
 
[[File:Kelileh va Demneh.jpg|thumb|200px|1429ல் பாரசீகத்துக்கு மொழிபெயர்கப்பட்ட பஞ்ச தந்திரக் கதைகள் நூலில் அமைந்த ஒரு ஓவியம்]]
ஆயிரத்தொரு இரவுகள், பல்வேரு காலக் கட்டத்தை சேர்ந்த பல காலாச்சார பிண்ணனியில் அமைந்த கதைகளின் தொகுப்பு ஆகும். எனவே இதன் மூலத்தை அறிவது இயலாததாக உள்ளது. இருப்பினும் பாரசீக மற்றும் இந்திய நாட்டார் கதைகளே இவற்றின் முக்கிய மூலமாக இருக்கக் கூடும் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. இவை எட்டாம் நூற்றான்டில், ''அலிஃப் லைலா'' (ஆயிரம் இரவுகள்) என்ற பெயரில் அரபு மொழியில் முதன் முதலாக தொகுக்கப்பட்டன. அடிப்படையில் இந்த தொகுப்பில் இருந்த கதைகள் மிகவும் சிறியதாக இருந்தன. ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றான்டுகளில் இவை விரிவுபடுத்தப்பட்டதோடு, பல புதிய கதைகளும் இணைக்கப்பட்டன. [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபாவான]] ஆருன் அல் ரசீத் மற்றும் அவரது அரசவை சார்ந்த கதைகள் இக்காலக்கட்டத்தில் இணைக்கப்பட்டவையே. தொடர்ந்து பலரால் தொகுக்கப்பட்ட இதில், [[எகிப்து]] மற்றும் [[சிரியா]]வை பல சேர்ந்த கதைகள் பதிமூன்றாம் நூற்றான்டுகளில் சேர்க்கப்பட்டன. [[கலவி]], [[மாய வித்தை|மாயம்]], ஏழ்மை போன்றவற்றை இந்த கதைகள் பேசின.
 
====இந்திய தாக்கம்====
வரிசை 59:
 
==வெளி இணைப்புகள்==
 
*[http://www.wollamshram.ca/1001/index.htm ''The Thousand Nights and a Night'' in several classic translations], including the Sir Richard Francis Burton unexpurgated translation, and John Payne translation, with additional material.
*[http://books.google.fr/books?id=wHEBAAAAMAAJ&printsec=frontcover&dq=les+mille+et+une+nuits Galland's French translation (an edition from 1822)]
"https://ta.wikipedia.org/wiki/ஆயிரத்தொரு_இரவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது