ஊடகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
'''ஊடகவியல்''' (Journalism) அல்லது '''இதழியல்''' என்பது, [[செய்தித்தாள்]]கள், [[சஞ்சிகை]]கள், [[வானொலி]], [[தொலைக்காட்சி]] போன்ற ஊடகங்களுக்காகச் [[செய்தி]]களை அல்லது [[செய்திக் கட்டுரை]]களை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கிய துறை ஆகும். முன்னர் இத்துறை அச்சு ஊடகங்களான செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் முதலியவற்றில் செய்திகளைச் சேகரித்து வெளியிடுவதை மட்டுமே குறித்து வந்தது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மின்னணு ஊடகங்களையும் இது உள்ளடக்கியது. [[எழுத்தாளர்]] அல்லது ஊடகவியலாளர் மக்களோடு தொடர்புள்ள [[நிகழ்வு]]களையும், எண்ணங்களையும், பிரச்சினைகளையும் விளக்குவதற்கு உண்மையாக [[தகவல்]]களைப் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகவியலாளர் தகவல்களைத் திரட்டி வெளியிடுவதனால் மக்கள், ஊள்ளூர், மாநில, தேசிய மற்றும் அனைத்துலகச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது. ஊடகவியல்; [[அரசு]], [[பொதுத்துறை]] அலுவலர்கள், நிறுவன நிறைவேற்று அதிகாரிகள், [[தொண்டு நிறுவனம்|தொண்டு நிறுவனங்கள்]], ஊடகவியல் நிறுவனங்கள், சமூக அதிகாரங்களைக் கொண்டிருப்போர் போன்றோரின் நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பதுடன்; நடப்பு நிகழ்வுகள் குறித்த தமது கருத்துக்களையும் வெளியிடுவதுண்டு.
 
தற்காலத்தில் நிருபர்கள் தமது தகவல்களையோ அவை தொடர்பான கட்டுரைகளையோ மின்னணுத் தகவல் தொடர்புகள் மூலம் தொலை தூரங்களில் இருந்தே அனுப்புகிறார்கள். புதிய செய்திகள் உருவாகும்போது நிகழிடத்துக்குச் செல்லும் நிருபர்கள் தகவகல்ளைச் சேகரித்து உடனுக்குடன் ஊடக அலுவலகத்துக்கு அனுப்புவர் இவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் எழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன. வானொலி தொலைக்காட்சி நிருபர்கள் களத்திலிருந்தபடியே நேரடியாகத் தகவல்களைத் தருவதும் உண்டு.
வரிசை 10:
 
* சேம்பரின் இருபதாம் நூற்றாண்டு அகராதி, “பொது இதழ்களுக்கு எழுதுதல், அவற்றை நடத்துதல் ஆகிய தொழிலே இதழியல்” என்று கூறுகிறது.
 
 
==அறிஞர்கள் கருத்து==
வரி 20 ⟶ 19:
*பிராங் மோரஸ், “பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும்தான் வரலாற்றுக்கு மூலப்பொருளாகவும், வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகின்றது” என்கிறார்.
*இலங்கை ஊடக ஆய்வாளர் எஸ்.மோசேஸ், "வெகுஜன ஊடகங்கள் மக்களை காக்க வேண்டிய தார்மீக பொறுப்பு வாய்ந்த சமூக சாதனங்கள்" என்கிறார்.
 
 
[[பகுப்பு:ஊடகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊடகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது