இரும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -{{under construction}}
சி clean up
வரிசை 1:
{{தகவற்சட்டம் இரும்பு}}
'''இரும்பு''' ஒரு [[தனிமம்]] மற்றும் [[உலோகம்]] ஆகும். இரும்பே [[புவி]]யில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகம் ஆகும். மேலும் இதுவே [[அண்டம்|அண்டத்தில்]] பத்தாவது அதிகம் கிடைக்கும் தனிமம் ஆகும். பெரும்பாலான இயந்திரங்களை உருவாக்க இரும்பே பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு எண் 26 ஆகும். இரும்பின் பயன்பாடு வரலாற்றுக் காலத்திற்கு முந்தையது என்பதால் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று அறுதியிட்டுக் கூறவியலாது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமை வரிசையில் இது நான்கவதாக உள்ளது. ஆனால் பூமியின் உள்ளகம் உருகிய இரும்பு, நிக்கல் போன்றவற்றால் ஆனது பெரும்பாலான கோள்களின் உள்ளகங்களில் இரும்பு, நிக்கல் இருப்பதாக இன்றைக்குக் கண்டுபிடித்துள்ளனர். இயற்கையில் இரும்பு தனித்துக் கிடைப்பது மிகவும் அரிது. நம் முன்னோர்கள் கனிமத்திலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்துப் பயன்டுத்தியதில்லை என்றும், எரிகற்கள் மூலம் கிடைத்த இரும்பையே பயன்படுத்தினார்கள் என்று கருதப்படுகிறது. எரிகற்களில் இரும்பு தனித்துக் காணப்படுகின்றது .
 
நீர் மற்றும் காற்று இவற்றின் முன்னிலையில் இரும்பு உடனடியாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது. இதையே துருப்பிடித்தல் என்கிறோம். இரும்பின் முக்கியமான கனிமங்கள் ஹெமடைட் ,மாக்னடைட் , லிமோசைட் ,சிடரைட் போன்றவைகளாகும் .இரும்புக் கனிமத்தை பழுக்கச் சூடாக்கி அதிலுள்ள கார்பன் டை ஆக்சைடு , ஈரம், கரிமப் பொருட்களை வெளியேற்றிவிடுவார்கள் .பின்னர் இதை நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் இவற்றுடன் கலந்து வெடிப்புலையில் 1500 டிகிரி C வரை சூடுபடுத்துவார்கள். உருகிய குழம்பில் மிதக்கும் கழிவுகளை அகற்றி விட்டு இரும்பை வார்த்து வார்ப்பிரும்பாகப் (Cast iron or Pig iron) பெறுவார்கள். வார்ப்பிரும்பில் 4 முதல் 5 விழுக்காடு [[கார்பன்]], 1 முதல் 2 விழுக்காடு [[சிலிகான்]] மற்றும் [[மாங்கனீசு]] போன்ற வேற்றுப்பொருட்கள் இருப்பதால் இரும்பு எளிதில் உடையக் கூடியதாக இருக்கிறது. இதனைப் பட்டறைப் பயனுக்கு உள்ளாக்க முடியாததால் இப்பொருட்களை அகற்றிப் பயன்படுத்துவர். [[ஆக்சிஜன்]]வெளியில் இத்தாதுவினை எரித்து அதிலுள்ள [[கார்பன்|கார்பனை]] அகற்றுவார்கள். ஓரளவு தூய்மைப்படுத்தப்பட்ட இரும்பைத் [[தேனிரும்பு]] (Wrought iron ) மற்றும் [[எஃகு]] (Steel) என்பர். எஃகானது வார்ப்பிரும்பு மற்றும் தேனிரும்பு இவற்றின் பண்புகளை ஒருசேரக் கொண்டுள்ளது. ஏனெனில் வார்ப்பிரும்பைக் காட்டிலும் குறைவாக ஆனால் தேனிரும்பைக் காட்டிலும் கூடுதலாகக் கார்பனை எஃகு பெற்றுள்ளதே காரணமாகும் .வெப்பத்தைக் கொண்டு பண்டுவப்படுத்துவதின் மூலம் கார்பனின் சேர்க்கை விகிதத்தை தேவையான அளவு மாற்றி எஃகிற்கு வேறுபட்ட கடினத் தன்மையை அளிக்கமுடியும் .இதைப் பதப்படுத்துதல் என்பர்.
 
== வரலாற்று நிறுவலில் இரும்பின் பங்கு==
தொல்லியல் துறைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைக் கணிப்பதில் இரும்பின் பங்கும் முக்கியமானது. உலகத்தில் இரும்பு அறிமுகமான காலமாக கருதப்படும் காலத்தை [[இரும்புக் காலம்]] என்கின்றனர். இக்காலம் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் அமையப்படுகின்றன. இக்காலத்தின் தொடக்கம் மற்றும் முடிவு கி.மு. இரண்டாம் ஆயிரவாண்டு தொடங்கி கிருத்து சகாப்தம் தொடங்கும் வரையில் அமைந்தது. தமிழகத்திலுள்ள தொல்லியல் களங்களான [[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்]] மற்றும் [[இரவிமங்கலம் தொல்லியற்களம்]] போன்றவை மிகப்பரந்த பரப்பளவில் இரும்புக்காலத்தின் எச்சங்களை சுமந்து கொண்டிருக்கின்றன. இரும்பு பிரித்தெடுத்து பயன் படுத்தத் தொடங்கிய காலம் நாகரிக வளர்ச்சியில் ஒரு முக்கிய காலகட்டமாக இருந்ததால் அதை இரும்பு யுகம் (Iron age )என்பர். (1100 BC). இது வெண்கல யுகத்திற்குப் (Bronze age -3000 BC) பிற்பட்டது. இரும்பு மக்களால் வெகுவாகப் பயன்படுத்தப்படும் உலோகமாகும். [[குண்டூசி]] முதல் பெரிய [[கப்பல்]] வரை இதனால் செய்யப்படாத பொருட்களே இல்லை எனலாம். இரும்பிற்கு வலிமையூட்டி பெறப்பட்ட எஃகு கலப்பு உலோகங்களினால் ஆன பயன்பாட்டை விரிவடையச் செய்தது
 
== இரும்பின் பண்புகள் ==
வரிசை 84:
== மேற்கோள்கள் ==
<references/>
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:உலோகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது