அருணாசலக் கவிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 3:
அருணாசலக் கவிராயர் கி.பி.1711 இல் தில்லையாடி என்னும் ஊரில் கார்காத்த வேளாளர் குலத்தில் நல்லத் தம்பி - வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வராகப் பிறந்தார்.<ref name="அருணாசலக் கவிராயர்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/couindex.htm | title=அருணாசலக் கவிராயர் அறிமுகம் | publisher=thamivu. org | accessdate=நவம்பர் 25, 2012 | author=பேரா. ஞானாம்பிகை குலேந்திரன்}}</ref> இளமையில் கவிபாடும் புலமையும் பாடல்களை இசையுடன் பாடும் ஆற்றலும் கைவரப் பெற்றவர். மேலும் நூற்பயன்களை இசையுடன் சொற்பொழிவாற்றும் திறமையும் இவருக்கு இருந்தது. அருணாசலக் கவிராயரின் பல்புலமைத் திறன்களைத் தருமபுர ஆதீனத் தலைவர் பெரிதும் மதித்தார். எனவே கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்து, குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார்.<ref name="அருணாசலக் கவிராயர்"/>
 
சீர்காழியில் வாழ்ந்ததால் சீ<ref name="தமிழ் மூவர்">{{cite web | url=http://jeevagv.blogspot.in/2008/08/blog-post_2521.html | title=தமிழ் மூவரில் ஒருவர், அருணாசலக் கவிராயர் | date=Tuesday, August 26, 2008 | accessdate=நவம்பர் 25, 2012}}</ref> காழி அருணாசலக் கவிராயர் என்று அழைக்கப் பெற்றார்.மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்ததுடன் பல நூல்களையும் இயற்றினார். இவர் படைப்புகளில் [[இராம நாடகக் கீர்த்தனை]] என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779 இல் தமது 67வது வயதில் மறைந்தார்.
== படைப்புகள் ==
* அசோமுகி நாடகம்
வரிசை 17:
ஆகியவை கவிராயரது படைப்புகள், இவற்றுள் இசைப் பாடல்களால் இனிய இராகங்களில் ஓர் இசை நாடக நூலாக, "இராம நாடகக் கீர்த்தனை" விளங்குகிறது.
== அரங்கேற்றம் ==
அருணாசலக் கவிராயர் 258 இசைப்பாடல்களில் இராமாயணக் கதையை நாடகவடிவில் வடிவமைத்தார். கீர்த்தனைகளால் தமிழில் முதன்முதலில் இசைநாடகம் படைத்தார்.<ref name="அருணாசலக் கவிராயர்"/> ஒரு கதையைச் சுவையாக மக்களுக்குச் சொல்வதற்குக் கீர்த்தனைகள் ஏற்றன என்பதை நிறுவிக் காண்பித்தார். அருணாசலக் கவிராயரது 'இராமநாடகக் கீர்த்தனை' [[திருவரங்கம்]] அரரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது.<ref name="அருணாசலக்தமிழ் கவிராயர்மூவர்"/><ref name="தமிழ்அருணாசலக் மூவர்கவிராயர்"/>
 
மக்கள் இராம நாடகக் கீர்த்தனைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். அருணாசலக் கவிராயருக்கு "இராமாயணக் கவிஞன்" என்று பட்டம் வழங்கிப் பாராட்டினர். "இராம நாடகக் கீர்த்தனை" என்னும் நூல் பின்னர் "இராம நாடகம்" என்றும், "சங்கீத இராமாயணம்" என்றும் அழைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அருணாசலக்_கவிராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது