இந்தியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 34 interwiki links, now provided by Wikidata on d:q837159 (translate me)
சி clean up
வரிசை 14:
 
== ஆரம்ப கால வரலாறு ==
[[ரஷ்யப் புரட்சி]] அக்டோபர் 1917ல் வெற்றி பெற்ற பிறகு மேற்கத்திய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் [மார்க்சியம்||மார்க்சியக்] கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த படித்த அறிவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத் தொடங்கினார்கள். அதே போன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த படித்த அறிவாளிகளின் சில குழுக்கள் மார்க்சியத்தின் பொதுவான கோட்பாடுகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப பிரயோகிக்கத் தெடங்கினார்கள்.
 
1920களின் முதல் பாதியில் இந்தக் குழுக்கள் [கம்யூனிஸ்ட் அகிலம்|கம்யூனிஸ்ட் அகிலத்தின்] (Comintern - சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டமைப்பு) வழிகாட்டலில் ஒன்று சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கின. மக்களை ஒன்று திரட்ட [[பம்பாய்]], [[வங்காளம்]], [[பஞ்சாப்]] மற்றும் [[ஐக்கிய மாநிலம்||ஐக்கிய மாநிலங்களில்]] விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சிகள் அமைக்கப்பட்டன. இந்தக் கட்சிகள் மூலமாகவும் [[அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (AICTU)]] மூலமாகவும் விவசாயிகள், தொழிலாளர்கள் இயக்கங்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்றனர். பம்பாயில் பலம் வாய்ந்த [[கர்னி-காம்கார் யூனியன்]] மூலம் நடந்த கூலி உயர்வுக்கான போராட்டங்களுகு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை வகித்தனர்.
 
== ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை ==
அப்போது இந்தியாவில் [[குடிமைப்பட்ட கால இந்தியா|ஆங்கிலேய காலனிய ஆட்சி]] நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆரம்பக் காலத்திலிருந்து கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கினர். ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக சதி வழக்குகள் போட்டு கம்யூனிஸ்டுகளின் அரசியல் நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர்.
1929 மார்ச்சில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் [[கான்பூர்]], [[மீரட்]] போன்ற சதி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] ஆரம்பத்தில் போர் எதிர்ப்பின் காரணமாக பல தலைவர்கள் கைதாகினர். [[இட்லர்]] [சோவியத் யூனியன்|சோவியத் யூனியனை] தாக்கிய போது ஆங்கிலேயருக்கு ஆதரவாக வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.
 
== காங்கிரசுடன் உறவு ==
கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தட்டிக் கேட்கவில்லை. தேசிய விடுதலை இயக்கத்துக்கு தலைமை ஏற்கவும் முயற்சிக்கவில்லை. காங்கிரசின் உள்ளிருக்கும் முற்போக்கு பிரிவினரை ஈர்த்து காங்கிரசுக் கட்சியை இடது சாரி திசையில் திருப்பலாம் என்று 1921 [[அகமதாபாத் காங்கிரஸ்]] மாநாட்டில் கம்யூனிஸ்டுகள் முயற்சித்தனர். முழு விடுதலையை அடைவதை காங்கிரஸ் கட்சியின் திட்டமாக நிறைவேற்றும்படி செய்யப் போராடினார்கள்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பொதுவுடைமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது