"ஐக்கிய இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (Bot: Migrating 227 interwiki links, now provided by Wikidata on d:q145 (translate me))
சி (clean up)
 
[[படிமம்:British Empire 1897.jpg|thumb|300px|left|1897-ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகள்]]
தொழிற்துறையிலும், கப்பற்துறையிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்த ஐ.இ, மேற்கத்திய சிந்தனைகளான உடைமை, சுதந்திரம், முதலாளித்துவம் மற்றும் [[பாராளுமன்ற மக்களாட்சி]] அகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. உலக இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளிலும் பெரும் பங்காற்றியது. அதன் உச்ச நிலையில், [[பிரித்தானிய ஏகாதிபத்தியம்]] உலகின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஐக்கிய இராச்சியத்தின் ஆதிக்கம் இரு உலகப் போர்களால் வெகுவாகக் குறைந்ததைக் காணமுடிந்தது. 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலோ, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கலைக்கப் பட்டு, முற்றிலும் மறைந்தது. ஆனால் ஐ.இ தன்னை ஒரு நவீனமயமான, வளமையான நாடாக வளர்த்துக் கொண்டது.
 
தற்போது ஐ.இ [[ஐரோப்பா|ஐரோப்பிய]] கண்டத்துடனான ஒருங்கிணைப்பின் விகிதத்தைக் குறித்து சிந்தித்து வருகிறது. [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] அங்கம் வகித்திருந்தும், உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவும் தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலைக் குறித்த அரசின் கணிப்புகளாலும், ஐ.இ இன்னும் [[ஐரோ|ஐரோவை]] அதன் நாணயமாக ஏற்றுக் கொள்ளவில்லை. [[ஐரோப்பிய ஒருங்கிணைப்பு|ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு]] மக்கள் மத்தியில் தீவிர எதிர்ப்பு நிலவுகிறது. சில ஆங்கிலேயப் பொருளாதார வல்லுனர்களின் கோரிக்கை, ஐ.இ ஐரோவைப் பின்பற்றுவதற்கு முன்னர், [[ஐரோப்பிய மத்திய வங்கி]] [[இங்கிலாந்தின் வங்கி|இங்கிலாந்தின் வங்கியை]] முன்மாதிரியாகக் கொண்டு சீர்திருத்தம் பெறவேண்டும் என்பதே. [[ஜெர்மனி]] ஐரோவை ஏற்றுக் கொண்டபின் சந்தித்த பொருளாதார இக்கட்டுகளைக் கருத்தில் கொண்டால், மேற்கூறிய கோரிக்கை நிறைவேற்றப்படும் சாத்தியங்களிருப்பதாகத் தென்படலாம்.
 
அரசியல் சட்டச் சீர்திருத்தமும் தற்போதைய ஒரு நிகழ்வாகும். [[பிரபுக்களின் அவை|பிரபுக்களின் அவையில்]] சீர்திருத்தங்கள், [[கொட்லாந்து]] தனது [[ஸ்காட்டிஷ் பாராளுமன்றம்|ஸ்காட்டிஷ் பாராளுமன்றத்தை]] [[1999]]ஆம் ஆண்டு தேர்வு செய்தது, அதே வருடம் [[அதிகாரப் பரவலாக்கம்|அதிகாரப் பரவலாக்கங்கள்]] [[வேல்ஸ்|வேல்ஸிலும்]] [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்திலும்]] நடைபெற்றது, ஆகியவை அண்மை கால நிகழ்வுகள். தடைகளற்ற சுதந்திரமான பின்புலத்தைக் கொண்டிருந்தும், அரசின் [[தகவல் ஆணையரின் அலுவலகம்|தகவல் ஆணையரின்]] [[2004]]ஆம் வருடக் கூற்றுப் படி ஒரு [[பரவலான கண்காணிப்பு|பரவலான கண்காணிப்புடைய சமூகமாக]] ஐ.இ உருமாறும் வாய்ப்புள்ளது.
 
ஐ.இ [[காமன்வெல்த் நாடுகள்]] மற்றும் [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|NATO]] ஆகியவற்றில் ஒரு அங்கமாகும். அது [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]]யின் ஒரு நிரந்தர உறுப்பினர் ஆகவும் உள்ளது. அதனால் அதற்கு [[வெட்டு ஓட்டு]] அதிகாரமும் உண்டு. ஐ. இ, உலகிலுள்ள வெகு சில [[அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்|அணு ஆயுத சக்தியுடைய நாடுகளில்]] ஒன்றாகும்.
 
பார்க்கவும்: [[பிரித்தானிய அரச பரம்பரை]]; [[பிரித்தானிய வரலாறு]]; [[இங்கிலாந்து வரலாறு]]; [[அயர்லாந்து வரலாறு]]; [[கொட்லாந்து வரலாறு]]; [[வேல்ஸ் வரலாறு]]; [[ஐ.இ வட்டார வரலாற்றுச் சொற்கள்]]
ஐக்கிய இராச்சியத்தின் ஏகாதிபத்தியப் பின்புலத்தின் விளைவாக, பிரித்தானிய அரசமைப்பு உலகெங்கும் பின்பற்றப் படுகிறது. பிரித்தானியப் பாணிப் பாராளுமன்ற முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகள், [[வெஸ்ட்மின்ஸ்டர் அரசாட்சி முறை]]யைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்றன.
தற்போதைய முடிக்குரியவர் [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசெபெத்|இராணி எலிசெபெத் II]] (Queen Elizebeth II) ஆவார். இவர் [[1952]]ஆம் ஆண்டு அரியணை ஏற்று, [[1953]]ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டார். நவீன கால ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவரின் பங்கு என்பது, பொதுவாகப் பெயரளவில்தான், எனினும் எப்பொழுதும் அவ்வாறல்ல. அவருக்கு அமைச்சரவையின் எல்லா ஆவணங்களுக்கும் அனுமதியுண்டு. வாரமொருமுறை பிரதமர் அவரைச் சந்தித்து அரசின் நிகழ்வுகள் குறித்து தெரியப்படுத்துவார். அரசுச் சட்ட ஆசிரியர் [[வால்டர் பேக்ஹாட்]] (Walter Bagehot), முடிக்குரியவருக்குக் கீழ்கண்ட மூன்று உரிமைகள் இருப்பதாகக் கூறினார்: கலந்தாலோசிக்கப்படும் உரிமை, அறிவுரைக்கும் உரிமை மற்றும் எச்சரிக்கும் உரிமை. இவ்வுரிமைகள் அரிய சந்தர்ப்பங்களிலேயே உபயோகிக்கப் பட்டாலும், தக்க தருணங்களில் இன்றியமையாதவையாக அமைந்துள்ளன—உதாரணம், "[[தொங்கு பாராளுமன்றம்]]" ஏற்பட்ட பொழுதெல்லாம். ஒவ்வொரு வருடமும், பொதுவாக நவம்பர் மாதத்தில், இராணி அவர்கள் [[ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றம்|பாராளுமன்றத்தைத்]] துவக்கி வைத்து, அரசின் அடுத்த வருடத்திற்கான செயல் திட்டங்கள் குறித்த சிறப்புரையை வழங்குவார்.
 
இராணி அவர்கள் பாராளுமன்றத்தின் இன்றியமையாத ஒரு அங்கத்தினராகக் கருதப் படுகிறார். பாராளுமன்றத்திற்கு, கூடும் அதிகாரத்தையும், சட்டங்களியற்றும் அதிகாரத்தையும் மேன்மைமிகு இராணி அவர்களே வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு [[பாராளுமன்ற சட்டவரைவு]] மேன்மைமிகு இராணி அவர்கள் கையொப்பமிடும் வரை சட்டமாக அங்கீகாரம் பெறாது. இத்தகைய இராச அங்கீகாரம் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்ட எந்த மசோதாவுக்கும் மறுக்கப் பட்டதில்லை ( ஒரே ஒரு முறை [[பெரிய பிரித்தானியாவின் ஆன்|இராணி ஆன்]] (Queen Anne) [[1708]]ஆம் ஆண்டில் அவ்வாறு செய்ததைத் தவிர). மேன்மைமிகு இராணி அவர்கள் செய்யும் இன்னொரு பணி, நாட்டிற்குப் பெருந் தொண்டாற்றியவர்களுக்குப் பட்டங்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிப்பதாகும்.
 
முடிக்குரியவரே நாட்டின் தலைவராகவும் அரசு நிர்வாகத்தின் தலைவராகவும் திகழ்கிறார். பிரித்தானிய அரசும் அதிகாரபூர்வமாக ''மேன்மைமிகு இராணியின் ஐக்கிய இராச்சியத்தின் அரசு'' என்றே அழைக்கப் படுகிறது. இராணியால் நியமிக்கப் பட்டதாகக் கருதப்படும் [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரதமரே]], அரசாங்கத்தின் தலைவராவார். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, போர் தொடுப்பது போன்ற எல்லா வெளியுறவுக் கொள்கைகளும், மேன்மைமிகு இராணி அவர்களின் பெயரிலேயே மேற்கொள்ளப் படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவரே நீதியின் பிறப்பிடமாவார். அனைத்துக் குற்றப் பத்திரிக்கைகளும் முடிக்குரியவரின் பெயரிலேயே எழுதப் படுகின்றன.(அரசரானால் "ரெக்ஸ்" என்ற பெயரிலும், அரசியானால் "ரெசினா" என்ற பெயரிலும்). ''மேன்மைமிகு இராணியின் போர்ப்படை '' என்றழைக்கப்படும் [[பிரித்தானியப் போர்ப்படை]]க்கும் அவரே [[தலைமைத் தளபதி]]யாவார்.
[[ஒன்றியச் சட்டம் 1536]] இங்கிலாந்தையும் வேல்ஸையும் ஒருங்கிணைத்தது.
 
நான்கு பிரிவுகளும் பண்டைய நாட்களிலேயே [[பிரிட்டிஷ் தீவுகளின் பழங்கால வட்டாரங்கள்|வட்டாரங்களாகப்]] பிரிக்கப்பட்டிருந்தாலும், இங்கிலாந்தின் மக்கள்தொகை மற்றதுகளை விட வெகு அதிகமாதலால், அண்மை காலத்தில் அது ஒன்பது [[இங்கிலாந்தின் பிராந்தியங்கள்|பிராந்தியங்களாகவும்]] பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை: [[வடகிழக்கு இங்கிலாந்து|வடகிழக்கு]], [[வடமேற்கு இங்கிலாந்து|வடமேற்கு]], [[யார்க்-ஷையர் மற்றும் ஹம்பர்]], [[கிழக்கு மிட்லேண்ட்ஸ்]], [[மேற்கு மிட்லேண்ட்ஸ்]], [[கிழக்கு இங்கிலாந்து]], [[பாரிய இலண்டன்]], [[தென்கிழக்கு இங்கிலாந்து]], [[தென்மேற்கு இங்கிலாந்து]] ஆகியவை. ஒவ்வொரு பிராந்தியமும் [[இங்கிலாந்தின் வட்டாரங்கள்|வட்டாரங்களாகப்]] பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சமயத்தில், ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒரு பிராந்திய அவையை அமைக்கத் திட்டமிடப் பட்டிருந்தாலும், முதலில் முயற்சிக்கப்பட்ட வடகிழக்குப் பிராந்தியத்தில் இதற்கு மக்களின் ஆதரவு கிட்டாததால், இத்திட்டத்தின் வருங்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.
 
கொட்லாந்து 32 வட்டாரங்களையும், வேல்ஸ் 22 வட்டாரங்களையும், வடக்கு அயர்லாந்து 26 மாவட்டங்களையும் கொண்டுள்ளன.
[[படிமம்:Triserv-600.jpg|thumb|150px|right|மேன்மைமிகு இராணியின் முப்படைகளின் முத்திரை. நங்கூரம் கப்பற்படையையும், வாட்கள் நிலப்படையையும், கழுகு விமானப்படையையும் குறிக்கின்றன.]]
 
ஐக்கிய இராச்சியத்தின் போர்ப்படைகளாவன '''பிரிட்டிஷ் போர்ப்படைகள்''' என்றோ '''மேன்மைமிகு இராணியின் போர்ப்படைகள்''' என்றோ அல்லது அதிகாரபூர்வமாக '''மகுடத்தின் போர்ப்படைகள்''' என்று வழங்கப்படுகின்றன. அவற்றின் [[தலைமைத் தளபதி]] [[பிரிட்டிஷ் மகுடாதிபதி|மேன்மைமிகு இராணி]] ஆவார். அவை [[ஐக்கிய இராச்சியப் பாதுகாப்பு அமைச்சகம்|பாதுகாப்பு அமைச்சகத்தால்]] நிர்வகிக்கப் படுகின்றன.
 
பிரிட்டிஷ் போர்ப்படையின் தலையாய கடமை, ஐக்கிய இராச்சியத்தையும் அதன் கடல் கடந்த நிலப்பரப்புகளையும் பாதுகாப்பதே. அத்துடன், பிரிட்டனின் பாதுகாப்புக்கு இன்றியமையாத மற்ற அம்சங்களையும் கவனிக்கும் பொறுப்பும், சர்வதேச அமைதி முயற்சிகளில் பங்கு பெறுவதும் அதன் கடமைகளே. அவை, [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|NATO]] மற்றும் இதர கூட்டு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து நற்பணியாற்றி வருபவையாகும்.
 
இங்கிலாந்தின் பெரும்பாகம் சமவெளிப் பிரதேசமாகும். கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் மலைப்பகுதிகள் வடமேற்கில் [[லேக் மாவட்டம்|லேக் மாவட்டத்திலுள்ள]] [[கம்ப்ரயன் மலைகள|கம்ப்ரயன் மலைகளும்]], வடக்கில் [[பெனைன்ஸ்]] மலைப்பிரதேசம் மற்றும் [[பீக் மாவட்டம்|பீக் மாவட்டத்திலுள்ள]] [[சுண்ணாம்புக்கல்]] மலைகள் ஆகியன. மற்ற மலைப்பகுதிகள் [[பர்பெக் தீவு|பர்பெக் தீவிலுள்ள]] கீழ்
சுண்ணாம்புக்கல் மலைகள், வடக்கு மலைச்சரிவுகளான [[காட்ஸ்வோல்ட்ஸ்]], [[லின்கன்ஷையர்]] மற்றும் [[சாக்]] சரிவுகள், தெற்கு மலைச்சரிவுகள் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் [[சில்டர்ன்ஸ்]] ஆகியவை. இங்கிலாந்தில் 1000 மிட்டர்களுக்கு மேற்ப்பட்ட உயரத்தைக் கொண்ட சிகரமெதுவுமில்லை. முக்கியமான ஆறுகளும் கயவாய்களும் (estuaries) இவையே: [[தேம்ஸ்]], [[செவெர்ன்]], [[ட்ரெண்ட்]], [[ஔஸ்]] மற்றும் [[ஹம்பர்]] ஆகியன. பெருநகரங்களாகியன [[இலண்டன்]], [[பர்மிங்காம்(ஐக்கிய ராச்சியம்)|பர்மிங்காம்]], [[மான்செஸ்டர்]], [[லீட்ஸ்]], [[ஷெஃபீல்ட்]], [[லிவர்பூல்]], [[பிரிஸ்டொல்]], [[நாட்டிங்ஹம்]], [[லீசெஸ்டர்]] மற்றும் [[நியூ கேசில்]]. [[டோவர்|டோவருக்கு]] அருகிலுள்ள [[கால்வாய் சுரங்கம்]] (Channel tunnel) ஐக்கிய இராச்சியத்தை பிரான்ஸுடன் இணைக்கிறது.
 
வேல்ஸ் பெரும்பாலும் மலைப்பாங்கான நிலப்பரப்பையுடையது. அதன் உயரமான சிகரம் 1085 மீட்டர் உயரமுள்ள [[ஸ்நோடௌன்]] ஆகும். வேல்ஸ் மையப்பகுதிக்கு வடக்கில் இருப்பது [[அங்க்லெசி]] தீவு. வேல்ஸின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் தெற்கிலுள்ள [[கார்டிஃப்]] ஆகும். இன்ன பிற மாநகரங்கள் [[ஸ்வேன்சீ]], [[நியூ போர்ட்]] மற்றும் [[ரெக்ஸ்ஹம்]] ஆகியன.
 
ஸ்காட்லாந்தின் பூகோள அமைப்பு பலதரப்பட்டது. தெற்கிலும் கிழக்கிலும் [[ஸ்காட்டிஷ் சமவெளி|சமவெளிகளாகவும்]] வடக்கிலும் மேற்கிலும் [[ஸ்காட்டிஷ் மலைப்பகுதி|மலைப்பகுதிகளாகவும்]] உள்ள நிலப்பரப்பைக்கொண்டது கொட்லாந்து. அதன் 1343 மீட்டர் உயரமுள்ள [[பென் நெவிஸ்]] சிகரமே ஐக்கிய இராச்சியத்தின் மிகுந்த உயரமான சிகரமாகும். பல நீளமான கயவாய்களும் ஏரிகளும் ஸ்காட்லாந்தில் உண்டு. மேற்கிலும் வடக்கிலும் பல தீவுகளையும் உள்ளடக்கியது கொட்லாந்து. [[ஹீப்ரைட்ஸ்]], [[ஆர்க்னீ]],
[[ஷெட்லேண்ட் தீவுகள்]] மற்றும் மனிதக் குடியிருப்பில்லாத [[ராக்கெல்]] ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. முக்கிய நகரங்கள் [[எடின்பரோ]], [[கிளாஸ்கோ]], [[அபர்தீன், கொட்லாந்து|அபர்தீன்]] மற்றும் [[டண்டீ]] ஆகியவை.
 
அயர்லாந்து தீவின் வடகிழக்கிலுள்ள வடக்கு அயர்லாந்து, பெரும்பாலும் மலைப்பகுதியே. [[பெல்ஃபாஸ்ட்]] மற்றும் [[லண்டண்டெர்ரி]] அதன் முக்கிய நகரங்களாகும்.
 
ஐக்கிய இராச்சியம் மொத்தமாக 1098 சிறிய தீவுகளைக் கொண்டது. இவற்றில் பல இயற்கையானவை. மற்றவை [[செயற்கைத் தீவு|செயற்கையாக]], கற்களையும் மரத்தையும் கொண்டு பண்டைய காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் இயற்கையான பாழ்பொருட்களும் அவற்றின் மேல் படிந்ததால் படிப்படியாக விரிவாக்கமடைந்த செயற்கைத் தீவுகளாகும்.
== பொருளாதாரம் ==
 
ஐக்கிய இராச்சியம் முன்னணியில் இருக்கும் ஒரு வணிக சக்தி மற்றும் நிதித்துறை மையமாகும். முதலாளித்துவத்தையே முதன்மையாகக் கொண்ட அதன் பொருளாதாரம், உலகில் நான்காவது இடத்தை வகிப்பதாகும். கடந்த இருபது வருடங்களாக அரசு, [[தனியார்மயமாக்கல்|தனியார்மயமாக்கல்களை]] மேற்கொண்டு அரசுடைமையைப் பெரிதும் குறைத்துக் கொண்டுள்ளது. [[மக்கள்நல அரசமைப்பு|மக்கள்நல அரசமைப்பையும்]] (welfare state) வெகுவாகக் கட்டுப்படுத்தி வந்திருக்கிறது.
 
[[உழவுத் தொழில்]], ஐரோப்பிய அளவில், அதீதமான, மிகவும் இயந்திரமயமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க முறையில் மேற்கொள்ளப்பட்டு, நாட்டின் உணவுத் தேவைகளின் 60% பங்கு, மக்கள்தொகையில் 1% அளவே உள்ள உழவர்களைக் கொண்டு நிறைவு செய்யப்படுகிறது. ஐக்கிய இராச்சியம் பெரிய அளவில் [[நிலக்கரி]], [[எரிவாயு]] மற்றும் [[எண்ணை]] வளங்களைக் கொண்டுள்ளது. அதன் மின்னாற்றல் தயாரிப்பின் பங்கு [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யில் 10% ஆகும். இது UK போன்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மிக அதிகமானவொரு எண்ணிக்கையாகும்.
 
சேவைகளே நிகர உள்நாட்டு உற்பத்தியின் பெரும் பங்கை வகிக்கின்றன. குறிப்பாக, [[வங்கி]]த் துறை, [[காப்புறுதி]]த் துறை மற்றும் வணிகத்துறையைச் சார்ந்த சேவைகள், ஆகியன. தொழில்த்துறையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், ஐ.இ இன்னும் சாலை வாகனங்கள், போராயுதங்கள், பெட்ரோலியப் பொருட்கள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் கைப்பேசிகள் ஆகியவற்றுக்கு ஐரோப்பாவின் முன்னணி உற்பத்தியாளராகத் திகழ்கிறது. [[ஐக்கிய இராச்சிய சுற்றுலாத் துறை|சுற்றுலாத் துறையும்]] இன்றியமையாததே. வருடத்துக்கு 23.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐ.இ, உலக சுற்றுலா மைய நாடுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது.
 
[[டோனி ப்ளேர்]] அரசு, [[ஐ.ஒ]] அமைப்புடன் இணைவது குறித்து பதிலளிக்கும் முகமாக, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை: [[ஐந்துப் பொருளாதாரப் பரிசோதனைகள்|ஐந்துப் பொருளாதாரப் பரிசோதனைகளில்]] வெற்றி, அதன் பிறகு மக்களிடம் [[வாக்கெடுப்பு]], ஆகியன. இவையனைத்தையும் வெற்றிகரமாகக் கடந்த பிறகே ஐ.இ ஐ.ஒ-உடன் இணையும் வாய்ப்புள்ளது.
[[படிமம்:Shakespeare.jpg|frame|[[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]<br />([[1564]]–[[1616]])]]
 
உலகிலேயே மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் இரண்டை ஐக்கிய இராச்சியம் கொண்டுள்ளது. அவை [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]] மற்றும் [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]] ஆகியவை. இவ்விரண்டும் பல விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கியவை. சில உதாரணங்கள்: சர் [[ஐசக் நியூட்டன்]], [[சார்ல்ஸ் டார்வின்]], [[மைக்கேல் பரடே]], [[பால் டிரக்]] மற்றும் [[ஐசம்பார்ட் கிங்டம் ப்ரூனெல்]] ஆகியோர். பல கண்டுபிடிப்புகள் இந்நாட்டில் நடந்துள்ளன. அவற்றில் சில: [[நீராவி இயந்திரம்]] , [[உந்துபொறி]] (locomotive), [[3-பீஸ் சூட்]], [[தடுப்பு ஊசி]], [[ஈயப் படிகம்]] , [[தொலைக்காட்சி]] [[வானொலி]], [[தொலைப்பேசி]], [[நீர்மூழ்கி]], [[ஹோவர்கிராஃப்ட்]], [[உள் எரி பொறி|உட் தகன இயந்திரம்]] (internal combustion engine) மற்றும் [[ஜெட் இயந்திரம்]] ஆகியன.
 
பலதரப்பட்ட விளையாட்டுக்களும் ஐக்கிய இராச்சியத்திலேயே உருவாகின. உதாரணம், [[கால்பந்து]], [[கோல்ஃப்]], [[கிரிக்கெட்]], [[குத்துச் சண்டை]], [[ரக்பி கால்பந்து]], [[பில்லியர்ட்ஸ்]] மற்றும் அமெரிக்காவில் அதிகமாக விளையாடப்படும் [[பேஸ்பால்|பேஸ்பாலின்]] முன்னோடியான [[ரௌண்டர்ஸ்]] எனும் விளையாட்டு. இங்கிலாந்து [[உலக கால்பந்துக் கோப்பை 1966]] மற்றும் [[2003 ரக்பி ஒன்றிய உலகக் கோப்பை]] ஆகியவற்றை வென்றுள்ளது. [[விம்பிள்டன் கோப்பை]] எனும் சர்வதேச டென்னிஸ் போட்டி, தெற்கு [[இலண்டன்|இலண்டனிலுள்ள]] [[விம்பிள்டன், லண்டன்|விம்பிள்டனில்]] ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் நடைபெறும் ஒரு உலகப் புகழ் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.
 
{{G8}}
{{வார்ப்புரு:ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்}}
 
{{சிறப்புக் கட்டுரை}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1465569" இருந்து மீள்விக்கப்பட்டது