கலோரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 55 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 6:
10000 கலோரி – 1 கிலோ எடையாகும். நம் உடல் பருமன், நாம் மேற்கொள்ளும் பணி இவைகளுக்கேற்ப நமக்குக் கனலிகள் தேவைப்படுகின்றன. சான்றாக 45 கிலோ எடையுள்ள ஒருவன் ஓய்வாக இருக்கும்போது அவனுக்கு ஒரு நாளைக்கு 1,680 கிலோ கனலி வெப்பம் தேவைப்படுகிறது. அதே மனிதன் ஒரு சாதாரண வெலையைச் செய்வதென்றால் அவனுக்கு ஒரு நாளைக்கு 3,360 கனலி தேவைப்படும். அதே மனிதன் மிகக் கடினமான வேலையைச் செய்ய நேர்ந்தால் அவனுக்கு 6,720 கனலிகள் தேவைப்படும். இவாறு செய்யும் வேலைக்கேற்ப கனலி தரும் உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம்தான் அவரவர் உடலை நன்முறையில் பெணுதலாக வைத்துக் கொள்ளவும் ஆற்றலோடு உடலை இயக்கச் செய்யவும் முடியும். கோடைக் காலத்தைவிட குளிர் காலத்தில் நாம் அதிக அளவு கனலிகளைப் பயன்படுத்துகிறோம் பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிக கனலி தேவைப்படும். காரணம் , முதியவர்களை விட சிறுவர்களுக்கு வேகமாக உண்ணும் உணவு எரிந்து வெப்ப சக்தியாக மாறுவதேயாகும்.<br />
== உடலில் கனலி சேமிப்பு ==
உடலின் முக்கிய எரிபொருட்களாக [[கார்போஹைட்ரேட்|மாவுச் சத்து]], [[ஸ்டார்ச்சு]], [[சர்க்கரை]] ஆகியன அமையும். ஒரு வேளைக்கு நம் உடலுக்குத் தேவைப்படும் கனலி அளவை விட அதிக அளவு எரிபொருளை நம் உடல் பெற நேர்ந்தால், உடல் தன் தேவைக்கானது போக மீதமுள்ள கனலிகளை சேமித்து வைத்துக் கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் சேமிக்கும் எரிபொருள் மூன்றில் ஒரு பங்கு மட்டுமேயாகும். மீதமுள்லவை கொழுப்பாக மாறிவிடும். எனவே, நாம் உட்கொள்ளும் உணவின் மூலம் பெறக்கூடிய கனலிகளின் அளவை சரியாகக் கணக்கிட்டு கவனித்துக் கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு தேங்காமல் பார்த்துக் கொள்ளமுடியும். இதன் மூலம் கொழுப்புகளால் விளையும் தொல்லைகளோ உடல் உபாதைகளோ இல்லாமல் செம்மையாக உடலை வைத்துக்கொள்ள முடியும்.
 
== உணவுப் பொருள்களில் உள்ள கனலி அளவு ==
வரிசை 71:
 
== உசாத்துணை ==
* [[மணவை முஸ்தபா]] , இளையர் [[அறிவியல்]] களஞ்சியம், மணவை பதிப்பகம். 1995<br />
* மரு. கோ இராமநாதன் 'இன்றைய மருத்துவம்' மருத்துவ விழிப்புணர்வு மாத இதழ் இணைய தள வெளியீடு.
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/கலோரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது