லியோனார்டு ஆய்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 8:
| death_date = {{OldStyleDate|செப்டம்பர் 18|1783|செப்டம்பர் 7}}
| death_place = [[சென் பீட்டர்ஸ்பேர்க்]], [[இரசியா]]
| residence = [[பிரஷ்யா]]</br /> [[இரசியா]]</br /> [[சுவிட்சர்லாந்து]]
| nationality =[[சுவிட்சர்லாந்து]]
| field = [[கணிதவியல்]],[[இயற்பியல்]]
| work_institution = ரஷ்ய அறிவியல் கழகம்</br /> பிரசிய அறிவியல் கழகம்
| alma_mater = பசல் பல்கலைக்கழகம்
| religion = [[லூத்தரன்]]
வரிசை 17:
'''லியோனார்டு ஆய்லர்''' (''Leonhard Euler'', [[ஏப்ரல் 15]], [[1707]] – {{OldStyleDate|செப்டம்பர் 18|1783|செப்டம்பர் 7}}) என்பார் [[சுவிட்சர்லாந்து]] நாட்டின் மிகுபுகழ் பெற்ற ஒரு [[கணிதவியல்]], மற்றும் [[அறிவியல்]] அறிஞர். இவர் யாவரைக்காட்டிலும் மிக அதிகமான அளவில் கணிதவியல் மற்றும் அறிவியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகள் செய்த பேரறிஞர். [[நுண்கணிதம்]] முதல் [[கோலக் கோட்பாடு]] வரையிலான கணிதத்துறையின் பல்வகைப்பட்ட பிரிவுகளில் ஈடுபாடு காட்டினார். இவருடைய கண்டுபிடிப்புகள் 70க்கும் மேலான எண்ணிக்கையில் பெரும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அதனிலும் அவருடைய கடைசி 17 ஆண்டுகள் முழுக்கண்ணும் தெரியாமல் அவர் வாயால் சொல்லி மற்றவர்கள் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கணித வரலாற்றில் கணித இயலாளர்களின் பட்டியலில் ஆய்லருக்கு முதல் ஐந்தாறு இடங்களிலேயே ஓர் இடம் உண்டு. இவர் தற்காலக் கணிதத்துறையில் பயன்படும் பெரும்பாலான [[கலைச்சொல்|கலைச்சொற்களையும்]] குறியீடுகளையும் அறிமுகப்படுத்தினார். இவர் [[விசையியல்]] (mechanics), [[ஒளியியல்]], [[வானியல்]] ஆகிய துறைகளிலும் பங்களிப்புக்களைச் செய்துள்ளார். "ஆய்லரை வாசியுங்கள், ஆய்லரை வாசியுங்கள் அவரே எங்கள் எல்லோருக்கும் குரு" என்று [[பியரே-சைமன் லாப்பிளாஸ்]] கூறியதாகச் சொல்லப்படுகிறது.
 
ஆய்லரின் உருவப் படங்கள் சுவிஸ் 10 பிராங்க் நாணயத்தாளின் ஆறாவது தொடரிலும், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் வெளியிட்ட பல அஞ்சல் தலைகளிலும் இடம் பெற்றுள்ளன. [[2002 ஆய்லர்]] என்னும் [[சிறுகோள்|சிறுகோளின்]] பெயர் இவரது பெயரைத் தழுவியே வைக்கப்பட்டது. லூதரன் திருச்சபையும் இவரை தமது புனிதர்களின் நாட்காட்டியில், மே 24 ஆம் நாளில் இடம்பெறச் செய்து மதிப்பளித்தது. இவர் கிறிஸ்து சமயத்தை உறுதியாகப் பின்பற்றி வந்தார். அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த [[இறைமறுப்பு|இறைமறுப்பாளர்களுக்கு]] எதிராக கடுமையாக வாதம் புரிந்துள்ளார்.
 
== வாழ்க்கை ==
ஆய்லர் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்[[]] உள்ள [[பாசெல்]] என்னுமிடத்தில் பவுல் ஆய்லர் என்பவருக்கும், மார்கரீட் புரூக்கர் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை பவுல் ஆய்லர் [[சீர்திருத்தத் திருச்சபை]]யைச் சேர்ந்த ஒரு [[மதகுரு]]. தாயாரும் ஒரு குருவானவரின் மகளே. லியொனார்டுக்கு இரண்டு [[தங்கை]]கள் இருந்தனர். லியொனார்டு பிறந்ததுமே ஆய்லர் குடும்பத்தினர் பாசெல்லிலிருந்து [[ரீஹென்]] என்னும் நகருக்கு இடம் பெயர்ந்தனர். லியொனார்டு தனது சிறு பராயத்தின் பெரும் பகுதியை இந்நகரிலேயே கழித்தார். பவுல் ஆய்லர், அக்காலத்தில் ஐரோப்பாவில் பெயர் பெற்ற கணிதவியலாளரான ஜொஹான் பர்னோலி என்பவரின் குடும்பத்துக்கு நண்பராக இருந்தார். இது இளம் லியொனார்டின் கணித ஆர்வத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்தது.
 
== கணிதத்துடன் முதல் உரசல் ==
"https://ta.wikipedia.org/wiki/லியோனார்டு_ஆய்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது