ராம்நாத் கோயங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 12:
}}
[[File:Ramnath Goenka 1926.jpg|thumb|ராம்நாத் கோயங்கா 1926-ல்]]
'''ராம்நாத் கோயங்கா'''(Ramnath Goenka; ஏப்ரல் 3, 1904- அக்டோபர் 5, 1991) [[இந்தியன் எக்சுபிரசு]] பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர். நாட்டின் [[இந்திய விடுதலை இயக்கம்|சுதந்திரப் போராட்டத்தில்]] ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டவர். [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியின்]] ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையின்]]போது (26 சூன், 1975 - 21 மார்ச்சு, 1977) நாடு முழுவதும் குடிமை உரிமைகள் நசுக்கப்பட்டன; எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு, விசாரணை இன்றிச் சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக, பத்திரிகைச் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
 
[[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலையைக்]] கடுமையாக எதிர்த்து, துணிச்சலுடன் குரல்கொடுத்தவர்களுள் ஒருவர் கோயங்கா ஆவார். இவ்வாறு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நிகழ்ந்த "உரிமைப் போரில்" பத்திரிகைத் துறைக்கே ஒரு வழிகாட்டியாகவும், மூத்த தளபதியாகவும் கோயங்கா திகழ்ந்தார்.<ref>http://www.dinamani.com/edition/story.aspx?artid=406441&SectionID=133&MainSectionID=133&SectionName=Editorial%20Articles&SEO= வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா தினமணி</ref> [[இந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள்]] வரிசையில் இடம்பெற்றவர்.<ref>{{cite web|url=http://www.india-today.com/itoday/millennium/100people/goenka.html|title=THOUGHT & ACTION: The Baron|last=Naqvi|first=Saeed|year=2000|publisher=Indian Today}}</ref>
வரிசை 20:
தனது மாமா பாபு பிரஹ்லாத ராய் டால்மியா மற்றும் சாகர்மால் டால்மியா ஆகியோருடன் இணைந்து யார்ன் மற்றும் சணல் வியாபாரத்தின் அடிப்படைகளையும் நெளிவு சுளிவுகளையும் தெரிந்துகொள்ள தனது 15-ஆவது வயதில் கோல்கத்தா நகருக்குச் சென்றார். அங்கு சிறிது காலம் பயிற்சி எடுத்த பிறகு மிகப்பெரிய நிறுவனமான சுகதேவ்தாஸ் ராம் பிரசாத் என்பவரின் வர்த்தகப் பிரதிநிதியாகச் சென்னைக்கு வந்தார். 1925 -ல் ஐதராபாத்தைச் சேர்ந்த முரளி பிரசாத் மோகன்பிரசாத் என்பவருடன் தொழில் கூட்டு சேர்ந்தார் அதன் பிறகு இவர்கள் இணைந்து சென்னையின் கிடங்குத் தெருவில் 1926 -ல் ஒரு வியாபார நிறுவனத்தைத் தொடங்கினர். இது 1932-33 வரை தொடர்ந்தது.<ref>http://www.papachuni.com/</ref>
==அரசியல் ஈடுபாடு==
சென்னைக்கு வந்தபின் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபாடு காட்டினார். சென்னை மாநகரின் மேல்தட்டு மக்களிலிருந்து எளியோர் வரை அனைவரிடமும் நன்றாகக் கலந்து பழகினார். அதன் விளைவாக, சமூகத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார். இவரின் செயல்களால் கவரப்பட்ட சென்னை நிர்வாகம் 1926-l ராம்நாத் கோயங்காவைச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமித்தது. அரசாங்கம் நியமித்த பதவியை ஏற்றுக்கொண்டாலும் அதை மக்களுடைய நன்மைக்காகவே முழுக்க முழுக்கப் பயன்படுத்தினார் கோயங்கா. அரசின் தவறுகளையும் குறைகளையும் தயங்காமல் சுட்டிக்காட்டினார். இதனால் அரசு மட்டுமல்லாமல் மேல்தட்டு மக்களும் அவரைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்தனர்.
 
மேலவை உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து தொடங்கிய 'இன்டிபென்டன்ட் பார்ட்டி' என்ற குழுவுக்கு ராம்நாத் கோயங்காவைச் செயலாளராக நியமித்தனர். தன்னுடைய வியாபாரத் தொடர்புகளைப் பயன்படுத்தி நிதி உதவியும் இதர ஆலோசனைகளும் தேவைப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குத் உதவினார்.
வரிசை 29:
 
==விடுதலைப் போரில் பங்கு==
1942-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்தியாவில் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், மற்றும் இதழ் சுதந்திரம் ஆகியவை மறுக்கப்பட்டன. இந்தியப் இதழாசிரியர்கள் கூடி, பிரித்தானியரின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் முகமாக நாட்டிலுள்ள எல்லா இதழ்களையும் கால வரையின்றி மூடிவிடத் தீர்மானித்தனர். காந்தியடிகள். தமது "ஹரிஜன்" முதலிய இதழ்களையும் நிறுத்தினார் மற்ற இதழ்கள் ஒரு நாள் அடையாள நிறுத்தம் செய்தால் போதுமென தீர்மானித்தன. ராம்நாத் கோயங்கா காந்தியடிகளின் விருப்பப்படி நடப்பதே சிறந்ததென தமது பத்திரிகைகள் அனைத்தையும் காலவரையின்றி நிறுத்திவிட்டார். <ref name="tamilnaduthyagigal.blogspot.in">http://tamilnaduthyagigal.blogspot.in/2011/02/blog-post_09.html</ref>
 
ஆனாலும், நாடெங்கும் நடக்கும் அராஜக பிரிட்டிஷ் கெடுபிடிகள் உலகறியச் செய்ய வேண்டும் என்று கோயங்கா துடித்தார். நாட்டில் எங்கு பார்த்தாலும் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தார். அவைகளை எல்லாம் திரட்டிக் கணிசமான ஒரு நூலாக உருவாக்கினார். தனது அச்சகத்தில் ரகசியமாக ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சான அந்த ஆங்கில நூலுக்கு "இந்தியாவில் படுகொலை" (India Ravaged) என்று தலைப்புத் தந்தார். நூலின் பிரதிகளை, ரகசியமாக பிரித்தானிய நாடாளுமன்ற அங்கத்தினர்கள் ஒருவர் விடாமல் எல்லோருக்கும், பிரிட்டிஷ் மந்திரிகளுக்கும் அனுப்பி வைத்தார். அது மட்டுமல்லாமல், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன், கனடா, ஆஸ்திரேலியா முதலிய வேறு பல நாடுகளின் முக்கியத் தலைவர்களுக்கும் பிரிட்டிஷார் அறியா வண்ணம் நூலை அனுப்பிச் சாதனை புரிந்தார். <ref>http:// name="tamilnaduthyagigal.blogspot.in"/2011/02/blog-post_09.html</ref>
 
சுதந்திரத்துக்காகப் போரிடுகிறோம் என்று சொல்லிக் கொண்டே இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களை சிறையில் தள்ளி கெடுபடி ஆட்சி நடத்தி வந்த ஆங்கிலேய அதிகாரிகளின் போலித்தனம் உலகறியத் தெரியலாயிற்று. பிரித்தானிய பாராளுமன்றத்தின் கேள்விகளுக்கு இந்தியாவின் பிரித்தானியப் பிரதிநிதிகள் பதில் சொல்ல முடியாமல் திகைத்தனர். உலக அரங்கில் பிரிட்டனின் புகழுக்குப் பெரிய அடி கிடைத்தது. ராம்நாத் கோயங்காவின் இந்தச்ச் சாதனையால் உண்மையை உலகம் உணர்ந்தது. பிற்காலத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் தரலாம் என பிரிட்டிஷ் தொழிற் கட்சி அரசு முடிவு செய்ய இந்த மாற்றம் உதவியது என்று சொல்லலாம்.<ref>"தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.</ref>
 
==இதழ் சுதந்திரம்==
அரசியல் கட்சிகள், அதிகார மையங்கள், வியாபாரக் குழுமங்கள், நண்பர்கள் வட்டம் என்று எதன் பிடியிலும் சிக்காமல் சுதந்திரமாகப் பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்தியாவின் நலன்தான் தனது பத்திரிகையின் லட்சியம் என்பது அவரது தீர்மானமாகும். அரசியல் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அறச் சிந்தனையாளர்கள், சமூக சேவகர்கள், மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் என்று அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பில் இருந்த போதும் தனது இதழில் இடம்பெறும் செய்திகள் குறித்து அவர் சுதந்திரமாகச் செயல்பட்டார். அதில் தலையிடும் உரிமையையோ, சலுகையையோ யாருக்கும் அளிக்கவில்லை. இதழ்களுக்கு சிறந்த ஆசிரியர்களை நியமித்தார். அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். <ref>http://writersamas.blogspot.in/2011/03/blog-post.html</ref> அரசின் விளம்பரங்களுக்காக மட்டுமே இதழ்கள் என்ற நிலையை மாற்றிக் காட்டினார். அரசு விளம்பரம் தராவிட்டாலும் மக்களின் பிரச்னைகளை எழுதி, ஓர் இதழுக்கு வாசகர்களின் ஆதரவும், விளம்பரதாரர்களின் ஆதரவும் இருந்தால் போதும் என்பதைச் செயலில் நிரூபித்தார்.
==பிறமொழி இதழ் பதிப்புகள்==
வரிசை 45:
 
==இறுதிக்காலம்==
இதழ் உலகின் சுதந்திரத்திற்கும் நடுநிலைத்தன்மைக்கும் சான்றாக வாழ்ந்த ராம்நாத் கோயங்கா 1991, அக். 5-இல் மறைந்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை வி. ஜி. வர்கீஸ் என்பவர் எழுதியுள்ளார். இது பெங்குவின் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. <ref>Warrior of the Fourth Estate, is the official biography of Goenka and is authored by BG Verghese. It has been published by Penguin, India. ISBN 0-67-005842-4</ref> "ராம்நாத் கோயங்கா": கறுப்பு வெள்ளை வாழ்க்கை என்ற நூல் இவரது மருமகள் அனன்யா கோயங்கா என்பவரால் 2005-ல் சொந்தமாக வெளியிடப்பட்டது.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/ராம்நாத்_கோயங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது