மக்கள்தொகை அடர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:World population density map.PNG|300px|thumb|நாடு வாரியாக மக்கள்தொகை அடர்த்தி, [[2006]]]]
'''மக்கள் தொகை அடர்த்தி''' அல்லது '''மக்களடர்த்தி''' எனப்படுவது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் உள்ள [[மக்கள் தொகை]]யாகும். அதாவது இன்ன பரப்பளவில் இன்ன மக்கள் தொகை என்பதாகும். ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எத்தனை மக்கள் உள்ளனர் என்பது பரவலாகப் பயன்படும் ஓர் அடர்த்தி அளவீடு.
மக்கள் தொகை அடர்த்தியின் கணிப்பீட்டின்போது விளைச்சல் நிலங்களின் பரப்பளவு சில நேரங்களில் அகற்றப்பட்ட பின்பே அடர்த்தி கணிக்கப்படும். அடர்த்தியானது [[நாடு]], [[நகரம்]], [[ஊர்]], மற்றும் இன்னோரன்ன நிலப் பகுதிகள் எனப் பல மட்டங்களிலும், [[உலகம்]] முழுவதற்குமேகூடக் கணிக்கப்படுகிறது.
 
எடுத்துக்காட்டாக, உலக முழுவதற்குமான மக்கள்தொகை 6.5 [[பில்லியன்|பில்லியனாகவும்]], அதன் பரப்பளவு 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் எனவும் கொண்டால் மக்கள் தொகை அடர்த்தி 6500 மில்லியன்/510 [[மில்லியன்]]=சதுர கிலோமீட்டருக்கு 13 பேராகும். நீர்ப்பரப்பை விட்டுவிட்டு நிலப் பரப்பை மட்டும் கவனத்தில் எடுத்தும் மக்கள் தொகை அடர்த்தி கணிக்கப்படுவது உண்டு. நிலம் 150 மில்லியன் சதுர கிலோமீட்டராகும் எனவே மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 43 ஆகும். பூமியின் மொத்தப் பரப்பு ஆயினும், நிலப்பரப்பு ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுவதற்கான சாத்தியம் இல்லாததால், மக்கள் தொகை அடர்த்தி மக்கள் தொகை அதிகரிப்புடன் அதிகரிக்கும். பூமியின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால் மக்களடர்த்தி ஒரு குறிப்பிட்ட எல்லை வரையுமே அதிகரித்துச் செல்ல முடியும் எனச் சிலர் நம்புகிறார்கள்.
வரிசை 11:
== மக்களடர்த்தி வேறுபாடுகள் ==
 
குறிப்பிட்ட நிலப்பகுதியொன்றில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டியும், அப்பகுதியின் வள நிலைமையை ஒட்டியும், அந்நிலப்பகுதி தாங்கக்கூடிய மக்களடர்த்தி அமையும். உணவு சேகரித்து உண்போர், கால் நடைகள் மேய்ப்போர், [[நாடோடிகள்]] போன்றோரின் செயற்பாடுகளுக்குப் பரந்த நிலப்பரப்புத் தேவை. இதன் காரணமாக இத்தகையோர் வாழும் நிலப்பகுதிகள் குறைந்த மக்களடர்த்தியையே கொண்டிருக்க முடியும். நிலையாக ஓரிடத்தில் வாழக்கூடிய [[வேளாண்மைச் சமுதாயம்|வேளாண்மைச் சமுதாயங்கள்]] சற்றுக் கூடுதலான மக்களடர்த்தியைக் கொண்டிருக்க முடியும். [[தொழிற்துறை]], [[வணிகம்]] மற்றும் [[சேவைத் தொழில்]]களை முக்கியமாகக் கொண்ட நகரப் பகுதிகள் அதிக மக்களடர்த்தியைக் கொண்டவையாக உள்ளன. நகரங்களுக்கு உள்ளேயும், [[நிலப்பயன்பாடு|நிலப்பயன்பாட்டுத்]] தன்மைகளைப் பொறுத்து மக்களடர்த்தி வேறுபடும்.
 
நகரங்களின் மையப் பகுதிகளும், அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் அதிக மக்களடர்த்தி கொண்டவையாகக் காணப்படுகின்றன. பொருளாதார அடிப்படையில் கீழ் மட்ட மக்கள் வாழும் பகுதிகள் கூடிய மக்களடர்த்தி கொண்டவையாக இருக்க, மேல் மட்டத்தினர் வாழும் பகுதிகள் அடர்த்தி குறைந்தவையாக இருப்பது இயல்பு.
 
== மக்கள் தொகை அடர்த்தியை அளவிடும் வேறு முறைகள் ==
[[படிமம்:Population_densityPopulation density.png|thumb|300px|உலகின் மக்கள் அடர்த்திகளைக் காட்டும் படம், 1994.]]
மக்களடர்த்தியைக் கணிப்பதற்கு மிகப் பொதுவாகப் பயன்படுவது மேற் குறிப்பிட்ட எண்கணித முறையேயாகும். எனினும், சிறப்புத் தேவைகளுக்காக, வேறுபட்ட முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகமாகப் பயன்படுத்தப்படும் முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்தொகை_அடர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது