பிரெஞ்சுப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 13:
}}
 
'''பிரெஞ்சுப் புரட்சி''' (''French Revolution'', [[பிரெஞ்சு]]: ''Révolution française''; [[1789]]–[[1799]]) [[பிரான்சு]] மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாக பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. [[நிலமானிய முறை|நிலமானிய]], நிலபிரப்புத்துவ, கிறித்தவ திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துகளான குடியுரிமை, [[மாற்றவியலாத உரிமைகள்]] (''inalienable rights'') போன்றவை பரவின. பிரான்சின் இடது சாரி அரசியல் அமைப்புகளும், வீதியில் இறங்கிப் போராடிய சாதாரண மக்களும் இம்மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தனர்.
 
1789 இல் பிரெஞ்சு பாராளுமன்றம் கூட்டப்பட்டதுடன் பிரெஞ்சு புரட்சி துவங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் மன்னராட்சியின் வலது சாரி ஆதரவாளர்கள், மிதவாதிகள், இடது சாரி தீவிரவாதிகள், பிற ஐரோப்பிய நாடுகள் ஆகியோருக்கிடையே பிரான்சின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும் பலப்பரீட்சை நடந்தது. பெரும் வன்முறைச் செயல்கள், படுகொலைகள், கும்பலாட்சி, அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் என பிரான்சில் பெரும் குழப்பம் நிலவியது. செப்டம்பர் 1792 இல் பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு அரசர் [[பிரான்சின் பதினாறாம் லூயி|பதினாறாம் லூயியும்]] அவரது மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு [[கில்லட்டின்]] தலைவெட்டு எந்திரம் மூலம் கொல்லப்பட்டனர். குடியரசின் புதிய ஆட்சியாளர்களுக்கிடையே அதிகாரப் போட்டிகள் மிகுந்து பிரான்சு 1793 இல் மேக்சிமிலியன் ரோபெஸ்பியரின் சர்வாதிகாரப் பிடியில் சிக்கியது. 1794இல் ரோபெஸ்பியர் கொல்லப்பட்ட பின் அவரது [[பயங்கர ஆட்சி]] முடிவுக்கு வந்தது. பின் 1799 வரை டைரக்டரேட் என்ற அமைப்பு பிரான்சை ஆண்டது. அதற்குப் பின் [[நெப்போலியன் பொனபார்ட்]] ஆட்சியைக் கைப்பற்றி சில ஆண்டுகளில் தன்னைத் தானே பிரான்சின் பேரரசராக அறிவித்துக் கொண்டார்.
வரிசை 22:
[[File:Ludvig XVI av Frankrike porträtterad av AF Callet.jpg|thumb|மன்னர் [[பிரான்சின் பதினாறாம் லூயி|பதினாறாம் லூயியின்]] அரசுக்கு 1780களின் இறுதியில் நிதி நெருக்கடி ஏற்பட்டது]]
 
புரட்சிக்கு முந்தைய பிரான்சின் “பழைய ஆட்சி”யின் (''Ancien Régime'') கூறுகளே பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டன. பிரெஞ்சு சமூகத்தின் நலிவடைந்த பிரிவுகள் பசி, ஊட்டச்சத்துகுறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தன. பல ஆண்டுகளாக உணவுப் பொருட்களின் அறுவடை தொய்வடைந்திருந்ததால் ரொட்டியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. அறுவடைகளில் தொய்வு, உணவுப் பொருள் விலையேற்றம், ஊர்ப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு உணவுப்பொருட்களைக் கொண்டு செல்ல போதிய போக்குவரத்து கட்டமைப்பின்மை போன்ற பொருளாதார காரணிகள் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகளில் பிரெஞ்சு குடிமைச் சமூகத்தை நிலை குலையச் செய்திருந்தன.
 
முந்தைய ஆண்டுகளில் பிரான்சு ஈடுபட்டிருந்த போர்களின் விளைவாக அந்நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக [[அமெரிக்க விடுதலைப் போர்|அமெரிக்க விடுதலைப் போரில்]] பிரான்சின் ஈடுபாட்டால் பெரும் பொருள் செலவாகியிருந்தது. வட அமெரிக்காவிலிருந்த தனது காலனிகளின் கட்டுப்பாட்டை பிரான்சு இழந்ததும், பெருகி வந்த பிரித்தானிய வர்த்தக ஆதிக்கமும் போர்களினால் விளைந்த சமூகத் தாக்கத்தை அதிகமாக்கின. பிரான்சின் திறனற்ற பொருளாதார முறைமை அரசின் கடன்சுமையை சமாளிக்க இயலாமல் திணறியது. நாட்டின் வரிவசூல் முறையின் போதாமையால் இக்கடன்சுமை கூடிக் கொண்டே சென்றது. அரசு கடன்சுமையால் திவாலாவதைத் தவிர்க்க அரசர் புதிய நிதி திரட்ட முனைந்தார். இதற்கு ஒப்புதல் பெற 1787 இல் குறிப்பிடத்தக்கவர்களின் மன்றத்தைக் (''Assembly of Notables'') கூட்டினார்.
வரிசை 34:
[[File:Troisordres.jpg|thumb|மூன்றாம் பிரிவு (பொது மக்கள்) முதல் பிரிவினையும் (திருச்சபையினர்) இரண்டாம் பிரிவினையும் (பிரபுக்கள்) முதுகில் சுமப்பதாகக் காட்டும் [[கேலிப்படம்]]]]
 
[[பிரான்சின் பதினாறாம் லூயி|பதினாறாம் லூயி]] அரசணை ஏறியபோது பிரான்சில் நிதி நெருக்கடி நிலவியது. அரசின் செலவுகள் அதன் வருமானத்தைவிட மிக அதிகமாக இருந்ததால், அரசு திவாலாகும் நிலையில் இருந்தது.<ref>Frey, p. 3</ref> [[ஏழாண்டுப் போர்]], [[அமெரிக்க விடுதலைப் போர்]] போன்றவற்றில் பிரான்சு பங்கேற்றமையே இந்நிலைக்கு காரணமாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.sparknotes.com/histor y/european/frenchrev/section1.html|title=France's Financial Crisis: 1783–1788|accessdate=26 October 2008}}</ref> மே 1776 இல் பொருளாதாரத்தை சீர்திருத்தத் தவறிய நிதி அமைச்சர் டர்கோ பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு வெளிநாட்டவரான ஜாக் நெக்கர் நிதிக் கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டார். அவர் புரோட்டஸ்தாந்த திருச்சபையைச் சேர்ந்தர்வராதலால் அவருக்கு அதிகாரப்பூர்வமாக அமைச்சர் பதவி தரப்படவில்லை.<ref name="Hib35">Hibbert, p. 35, 36</ref>
 
பிரான்சின் கடுமையான [[பிற்போக்கு வரி முறை]] கீழ் தட்டு மக்களுக்கு பெரும் பாரமாக இருப்பதை நெக்கர் உணர்ந்தார். அதே சமயம் பிரபுக்களுக்கும் திருச்சபை பாதிரியார்களுக்கும் பல்வேறு வரிவிலக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.<ref name="Hib35"/><ref name="Frey2">Frey, p. 2</ref> அதற்கு மேலும் மக்களின் வரிச்சுமையைக் கூட்ட முடியாதென வாதிட்ட நெக்கர், பிரபுக்களுக்கும் பாதிரியார்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த வரிவிலக்குகளை குறைத்து, மேலும் வெளிநாடுகளில் கடன் வாங்கி நாட்டின் நிதிப் பற்றாகுறையைச் சமாளிக்கலாம் என பரிந்துரைத்தார்.<ref name="Hib35"/> இதனை அரசரின் அமைச்சர்கள் விரும்பவில்லை. தனது நிலையைப் பலப்படுத்தத் தன்னை அதிகாரப்பூர்வமாக அமைச்சராக்கும் படி நெக்கர் வேண்டினார். ஆனால் அவ்வாறு செய்ய மறுத்த லூயி, நெக்கரைப் பதவிலிருந்து விலக்கினார். அவருக்குப் பதிலாக சார்லஸ் தே கலோன் நிதிக் கட்டுப்பாட்டாளரானார். ஆரம்பத்தில் தாராளமாகச் செலவு செய்த கலோன், விரைவில் நிதி நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்தார். அதைச் சமாளிக்க ஒரு புதிய வரி முறையைப் பரிந்துரைத்தார்.<ref name="Hib35"/><ref name="D34">Doyle, ''The French Revolution: A very short introduction'', p. 34</ref>
வரிசை 64:
[[Image:Declaration of Human Rights.jpg|thumb| ஆகஸ்ட் 26, 1789 இல் வெளியான "[[மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை]]"]]
 
ஜூலை 14ம் நாள் கலவரக்காரர்களின் கவனம் பாஸ்டில் கோட்டைச் சிறையின் உள்ளே அமைந்திருந்த பெரும் ஆயுதக் கிடங்கு பக்கம் திரும்பியது. பாஸ்டில் முடியாட்சியின் அதிகாரச் சின்னமாகக் கருதப்பட்டது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் கலகக்காரர்கள் பாஸ்டிலைக் கைப்பறினர். பாஸ்டிலின் ஆளுனர் பெர்னார்ட் தே லானே கொல்லப்பட்டார். பின் அங்கிருந்து நகர மன்றத்துக்குச் சென்ற கலவரக்காரர்கள் நகரத் தந்தை ஜாக் தே ஃபிளசெல்சை மக்கள் துரோகியெனக் குற்றம் சாட்டி கொலை செய்தனர்.<ref>Schama 2004, p.344</ref> வன்முறையைக் கண்டு அஞ்சிய அரசர் தனது இறுக்கமான நிலைப்பாடுகளைத் தளர்த்தினார். மார்க்கி தே லா ஃபயாட் பாரிசு நகரக் காவல்படையின் தளபதியாகவும், தேசிய மன்றத் தலைவர் பெய்லி நகரத் தந்தையாகவும் அறிவிக்கப்பட்டார். ஜூலை 17ம் தேதி பாரிசுக்குச் சென்ற லூயிக்கு அங்கு பிரெஞ்சு மூவர்ணக் கொடி நிறம் கொண்ட சின்னம் (cockade) அளிக்கப்பட்டது (சிவப்பு-வெள்ளை-நீலம் மூவர்ணக் கொடி பிரெஞ்சு புரட்சிக்காரர்களின் அடையாளமாகக் கருதப்பட்டது).<ref>Schama 2004, p.357</ref> நெக்கர் மீண்டும் நிதி ஆலோசகர் ஆக்கப்பட்டார். ஆனால் அவர் தனக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று கோரியது அவருக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கை வெகுவாகக் குறைத்து விட்டது.
 
நகரங்களில் அதிகாரிகளின் கட்டுப்பாடு வேகமாக சீர்குலைந்து வன்முறையும் திருட்டும் அதிகரித்தன. இதனால் தங்கள் உயிருக்கு ஆபத்தென அஞ்சிய பிரபுக்கள் பலர் தங்கள் குடும்பங்களோடு அண்டை நாடுகளுக்குத் தப்பி ஓடினர். அங்கிருந்தபடி எதிர் புரட்சியாளர்களுக்கு நிதியுதவி செய்து வந்தனர். மேலும் அண்டை நாட்டு மன்னர்களைப் பிரெஞ்சு நிலவரத்தில் தலையிட்டு எதிர் புரட்சிக்குப் படையுதவி செய்யும்படி கோரினர்.<ref>Lefebvre, pp.187–188.</ref>
வரிசை 130:
{{main|பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்}}
[[File:Bataille de Fleurus 1794.JPG|thumb|left|பிரெஞ்சுப் புரட்சிப்படை ஆஸ்திரிய, இடச்சு மற்றும் பிரித்தானிய கூட்டுப்படைகளை சூன் 1794 இல் புளூரசில் தோற்கடித்தல்.]]
இக்காலகட்டத்தின் ஐரோப்பிய அரசியல் நிலவரம் பிரான்சு-ஆஸ்திரியா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இடையே போர்மூளக் காரணமானது. அரசர் லூயியும் ஃபியூலியாண்டுகளில் பெரும்பாலானோரும், கிரோண்டின்களும் போரை விரும்பினர். அரசரும் அவரது வலதுசாரி ஆதரவாளர்களும் போர் மூண்டால் மக்களிடையே அரசரின் செல்வாக்கு உயரும் எனக் கருதினர். மேலும் புரட்சி அரசு போரில் தோல்வியடைந்தால் தன நிலை உயரும் எனக் கருதினார் லூயி. இடதுசாரிகள் தங்களது புரட்சிகரக் கொள்கைகளை பிற ஐரோப்பிய நாடுகளில் பரப்ப போர் உதவும் எனக் கருதினர். இவ்வாறு இரு தரப்பிலும் போரை விரும்பியோர் இருந்தனர். போரை எதிர்த்தவர்கள் கட்சி பலவீனமாக இருந்தது. பிரான்சு தோல்வியடைந்தால் புரட்சி தீவிரமடையும் என்று கருதிய கிரோண்டின்களும், போரில் தோல்வி புரட்சியைப் பலவீனப்படுத்தும், பிற நாட்டு சாதாரண மக்களுக்கு புரட்சி மீது வெறுப்பேற்படும் என்று கருதிய ரோபஸ்பியர் போன்ற தீவிரவாதிகளும் போரை எதிர்த்தனர். ஏப்ரல் 20, 1792 அன்று பிரான்சு ஆஸ்திரியா மீது [[போர் சாற்றல்|போர் சாற்றியது]]. சில வாரங்களுக்குப் பின்னர் பிரஷ்யா ஆஸ்திரிய அணியில் இணைந்தது. பிரான்சு மீது படையெடுத்த பிரஷியப் படைகள் ஆரம்பத்தில் தடையின்றி முன்னேறின. செப்டம்பர் 20, 1792 அன்று வால்மி சண்டையில் அவற்றுக்கு ஏற்பட்ட தோல்வி பிரஷிய முன்னேற்றத்தைத் தடை செய்தது.
 
இந்த முதல் வெற்றியைத் தொடர்ந்து புதிய பிரெஞ்சுக் குடியரசுக்கு [[பெல்ஜியம்|பெல்ஜியத்திலும்]] ரைன்லாந்துப் பகுதியிலும் 1792 இலையுதிர்க்காலத்தில் பல தொடர் வெற்றிகள் கிட்டின. நவம்பர் 6ம் தேதி ஜெமாப்பே சண்டையில் ஆஸ்திரியர்களை வென்ற பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரிய நெதர்லாந்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தன. இதனால் பிரான்சுக்கு எதிரணியில் பிரிட்டனும், டச்சுக் குடியரசும் இணைந்தன. தெற்கு நெதர்லாந்தில் பிரெஞ்சு ஆதிக்கம் மிகுவதை அவை விரும்பவில்லை. ஜனவரி 1793 இல் லூயியின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபின்னர் இந்நாடுகள், பிரான்சுக்கு எதிராக ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் நடத்தி வந்த போரில் இணைந்தன. இதனையடுத்து பல்வேறு முனைகளில் பிரான்சு தோல்விகளை சந்தித்தது. 1793 வசந்த காலத்தில் தான் கைப்பற்றிய பல பகுதிகளை இழந்துவிட்டது. அதே சமயம் புரட்சிகர அரசு தன் அதிகாரத்துக்கு எதிராக தெற்கு மற்றும் மேற்கத்திய பிரான்சில் ஏற்பட்ட புரட்சிகளை சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனால் பிரான்சுக்கு எதிரான கூட்டணி இந்த உள்நாட்டுக் குழப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. 1793ம் ஆண்டு இலையுதிர்க் காலம் முடிவதற்குள் புரட்சிகர அரசு உள்நாட்டுக் கலகங்களை அடக்கி இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி விட்டது; எதிரிக் கூட்டணியின் முன்னேற்றத்தையும் தடுத்தி நிறுத்தி விட்டது.
வரிசை 156:
===பயங்கர ஆட்சி===
 
[[File:Exécution_de_Marie_Antoinette_le_16_octobre_1793Exécution de Marie Antoinette le 16 octobre 1793.jpg|thumb| மரீ அண்டோய்னெட்டின் மரண தண்டனை (அக்டோபர் 16, 1793)]]
 
ஜூன் 2, 1793 இல் ஜேக்கோபின் கட்சியின் தீவிரவாதிகள், மாநகரக் காவல் படையின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றினர். 31 கிரோண்டிஸ்ட் கட்சித் தலைவர்களைக் கைது செய்தனர். எதிர்க் கட்சிகள் அழிக்கப்பட்டபின், ஜூன் 10ம் தேதி பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவின் “புரட்சிகர சர்வாதிகார” ஆட்சி தொடங்கியது.<ref>Schama 2004, p.641</ref> ஜூலை 13ம் தேதி ஜேக்கோபின்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அதிதீவிர கட்டுரைகளை எழுதி வந்த இதழாளருமான [[ழான்-பால் மராட்]], ஷார்லோட் கோர்டே என்ற கிரோண்டின் கட்சிக்காரியால் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் ஜேக்கோபின்களின் அரசியல் செல்வாக்கு மேலும் அதிகரித்தது. அடுத்து செல்வாக்கு மிகுந்த ஜேக்கோப்பின் தலைவரான ஜார்ஜஸ் டாண்டன் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழுவிலிருந்து நீக்கப்பட்டார். கடும் தீவிரவாதியென அறியப்பட்ட மேக்சிமில்லியன் ரோபெஸ்பியர் குழுவின் அதி முக்கியமான உறுப்பினரானார். ”புரட்சியின் எதிரிகள்” என்று அறியப்பட்டவர்கள் ரோபெஸ்பியர் அரசின் இலக்காகினர்.
 
ரோபெஸ்பியரின் கட்டுப்பாட்டில் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு வந்த பின், ஜேக்கோபின்களின் “பயங்கர ஆட்சி” தொடங்கியது. ஜேக்கோபின்கள் கையில் முழு அரசு அதிகாரம் இருந்த 1793-94 காலகட்டத்தில் அவர்கள் நிகழ்த்திய கொடுங்கோல் செயல்கள் அவர்களது ஆட்சிக்கு இப்பெயரைப் பெற்றுத் தந்தது. அக்கால ஆவணங்களின் படி, பயங்கர ஆட்சி காலத்தில் குறைந்த பட்சம் 16,594 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.<ref name = "Gough-p77">{{cite book|author=Gough, Hugh|title=The Terror in the French Revolution|year=1998|page=77}}</ref> ஏறத்தாழ 40,000 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையின்றி கொல்லப்பட்டிருக்கலாம் என பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.<ref name = "Gough-p77"/><ref>Doyle 1989, p. 258</ref>
 
அரசியல் எதிரிகளை அரசு வன்முறையால் அழித்து வந்த அதே காலகட்டத்தில், பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு அரசியல் சீர்திருத்தங்களை விரைவு படுத்தியது. ஜூன் 24, 1794 இல் பிரான்சின் முதல் குடியரசு அரசியல் சட்டம் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்புதிய அரசியலமைப்பு பல புரட்சிகர மற்றும் முற்போக்கு கூறுகளைக் கொண்டிருந்தது - வயது வந்தோர் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அளித்தது. இப்புதிய அரசியலமைப்பை மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அது நடைமுறைக்கு வரும்முன் பயங்கர ஆட்சியில் மக்களின் சட்ட உரிமைகள் விலக்கப்பட்டன.<ref>Schama 2004, p.637</ref>
வரிசை 187:
==தாக்கம்==
 
உலக அரசியலில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய பிரெஞ்சுப் புரட்சியை வரலாற்றாளர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கொள்கையின் வழியாகவே நோக்குகினறனர். புரட்சியின் காரணிகள், போக்கு, வரலாற்றுத் தாக்கம் ஆகியவற்றை பற்றி வரலாற்றாளர்களின் கருத்துகள் மாறுபடுகின்றன.<ref>Rude p. 12-4</ref> வசதி கூடிய நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் சமூக நிலையின் முக்கியத்தை உணர்ந்ததால் புரட்சி நடைபெற்றதென [[அலெக்சிஸ் தே டோக்வில்]] கருதுகிறார்.<ref>Rude, p. 15</ref> [[எட்மண்ட் பர்க்]] போன்ற [[பழமைவாதம்|பழமைவாத]] அறிஞர்கள், குறிப்பிட்ட சில சதிகாரர்கள் மக்கள் திரளை மூளைச் சலவை செய்து, பழைய ஆட்சிக்கு எதிராகத் தூண்டி விட்டதால் தான் புரட்சி ஏற்பட்டதெனக் கருதினர். புரட்சி ஏற்பட நியாயமான காரணங்கள் ஏதுமில்லை என்பது அவர்கள் வாதம்.<ref>Rude, p. 12</ref> [[மார்க்சியம்|மார்க்சிய]] தாக்கம் உடைய வரலாற்றாளர்கள் பிரெஞ்சுப் புரட்சியை விவசாயிகளும், நகரத் தொழிலாளர்களும் நடத்திய ஒரு மாபெரும் [[வர்க்கப் போராட்டம்|வர்க்கப் போராட்டமாகப்]] பார்க்கின்றனர்.
 
எனினும் பிரெஞ்சுப் புரட்சி மனித வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக அனைத்து தரப்பு வரலாற்றாளர்களாலும் கருதப்படுகிறது.<ref>Frey, Foreword</ref> வரலாற்றின் [[தொடக்க நவீன காலம|தொடக்க நவீன காலத்தின்]] (சுமார் கி.பி 1500 இல் தொடங்கியது) முடிவாகவும் [[நவீன காலம்|நவீன காலத்தின்]] ஆரம்பமாகவும் கருதப்படுகிறது.<ref>Frey, Preface</ref> பிரான்சில் பிரபுக்களின் ஆதிக்கத்தை முடக்கியதுடன், திருச்சபையின் செல்வ வளத்தை அழித்தது. இவ்விரு குழுக்களும் பிரெஞ்சுப் புரட்சியினால் கடும் பாதிப்புக்குள்ளாகினாலும் அறவே அழியாமல் தப்பின. 1815 இல் [[முதல் பிரெஞ்சுப் பேரரசு]] வீழ்ந்த பின், பிரெஞ்சுப் புரட்சி முதல் குடிமக்களுக்குக் கிட்டியிருந்த உரிமைகளும் சலுகைகளும் பறிக்கப்பட்டன. ஆனால் புரட்சியின் அனுபவங்களை குடிமைச் சமூகம் மறக்கவில்லை. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதையும், புரட்சி செய்வதையும், குடியரசுவாதத்தைப் பின்பற்றுவதையும் மக்கள் வழக்கமாகக் கொண்டனர்.<ref>Hanson, p. 189</ref> புரட்சியின் விளைவாக பிரெஞ்சு குடிமக்களின் சுய அடையாளத்தில், அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டன என சில வரலாற்றாளர்கள் வாதிடுகின்றனர். சமூகத்தில் வெவ்வேறு வர்க்கத்தினருக்கு வெவ்வேறு உரிமைகள் என்ற நிலை மாறி [[சமத்துவம்]], [[மனித உரிமைகள்]] போன்ற கோட்பாடுகள் தழைக்கத் தொடங்கின.<ref>Hanson, 191</ref>
 
பிரெஞ்சுப் புரட்சி அதுவரை வரலாற்றில் எதேச்சதிகார ஆட்சி முறைக்கு எதிராக நடைபெற்றருந்த முயற்சிகளில் மிக முக்கியமான அமைந்தது. இறுதியில் தோல்வியடைந்தாலும், ஐரோப்பாவிலும் பின்பு உலகெங்கும் [[மக்களாட்சி]]க் கருத்துகள் பரவ வித்திட்டது.<ref name="RiemerSimon1997">{{cite book|last1=Riemer|first1=Neal|last2=Simon|first2=Douglas|title=The New World of Politics: An Introduction to Political Science|url=http://books.google.com/books?id=gKa3FTpH49oC&pg=PA106|accessdate=18 October 2011|date=28 January 1997|publisher=Rowman & Littlefield|isbn=978-0-939693-41-2|page=106}}</ref> 1917ம் ஆண்டின் [[ரஷ்யப் புரட்சி (1917)|ரஷ்யப் புரட்சி]]யிலும் சீனாவில் நடைபெற்ற [[மா சே துங்]]கின் புரட்சியிலும் பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் உண்டு.<ref>Hanson, 193</ref>
வரிசை 267:
* Woshinsky, Barbara R. ''Imaging Women’s Conventual Spaces in France, 1600–1800: The Cloister Disclosed''. Burlington, Vermont. Ashgate (2010).
{{Refend}}
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரெஞ்சுப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது