பரதநாட்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 7:
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது '[[அடவு]]' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது '[[ஜதி]]' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. [[சிதம்பரம்]] ,மற்றும் [[மேலக்கடம்பூர்]] ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
பரத நாட்டியத்திற்கு பாடல், [[நட்டுவாங்கம்]], மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. [[வீணை]], [[புல்லாங்குழல்]], [[வயலின்]], [[மிருதங்கம்]] ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் [[சலங்கை]]யும் அணிந்திருப்பார்.
 
பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், '[[வழுவூர் ராமையா பிள்ளை]]' '[[திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை]]', '[[தனஞ்சயன்]]', '[[அடையார் லக்ஷ்மணன்]]', '[[கலாநிதி நாராயணன்]]' ஆகியோர் குறிப்படத்தக்கவர் ஆவர்.
 
== வரலாறு ==
வரிசை 17:
 
== மாதவியின் பதினொரு வகை ஆடல்கள் ==
ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்றிலும் சிறந்த மகளிர் மன்னர் சபையில் ஆடினர். சான்றாகச் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "[[சிலப்பதிகாரம்]]"காப்பியம். இந் நூலில் ஆடல் நங்கையாக மாதவி சித்தரிக்கப்படுகிறாள். சோழ மன்னன் திருமாவளவன் முன்னிலையில் மாதவி அரங்கேறினாள். இவள் நாட்டிய நன்னூல் கூறும் விதிகளுக்கு அமைய ஆடலை நன்கு பயின்றவள். ஆடலிலும், அழகிலும் சிறந்தவள். வலது கால் முன் வைத்து ஆடல் அரங்கு ஏறினாள். பாட்டிசை, குழல் இசை, யாழ் இசை, தண்ணுமை என்னும் மத்தள இசை, கைத்தாள இசை ஆகிய ஐந்து வகை இசையும் சேர்ந்த இசைக்கு ஏற்ப மாதவி பதினொரு வகை ஆடல்களை ஆடினாள். அவள் ஆடிய ஆடல் வகைகளாக அல்லியம், குடக்கூத்து, மல்லாடல், கொடுகொட்டி, பாண்டரங்கம், குடக்கூத்து, துடிக்கூத்து, பேடிக்கூத்து கடையக்கூத்து, மரக்கால் கூத்து, பாவைக் கூத்து என்பனவற்றை சிலப்பதிகாரம் கூறுகிறது.
 
== கோயிலும் நாட்டியமும் ==
வரிசை 51:
# ஆங்கிக அபிநயம்
# சாத்விக அபிநயம்
என்பனவாகும்.
 
=== ஆகார்ய அபிநயம் ===
அலங்காரம் மூலம் அபிநயித்தல் 'ஆகார்ய அபிநயம்' எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறும். எடுத்துக்காட்டாகச் சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு,புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகளைச்செய்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச்சிவனாக உணர்த்தும். இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்படும்.
 
=== வாசிக அபிநயம் ===
வரிசை 68:
கண்வழி மனமும் செல்ல"
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர". <ref> [[கம்பராமாயணம்]],மிதிலைக் காட்சிப் படலம்,எண் : 572 </ref></poem>
எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
வரிசை 88:
 
== நாட்டிய உருப்படிகள் ==
பரத நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் (items) உண்டு. ஒவ்வொரு உருப்படிக்கும் பெயர், தனித் தன்மை உண்டு. இவ் உருப்படிகள் ஓர் ஒழுங்கு நிரலில் இருக்கும்.பரத நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் இறை வணக்கம் பாடுவது வழக்கம். பக்க இசையாளர் இதைப் பாடுவர்.முதலில் நிருத்த வகை உருப்படிகள், அதன் பின் நிருத்திய, நாட்டிய வகை உருப்படிகள் தொடரும். உருப்படிகள்
 
* அலாரிப்பு
வரிசை 107:
 
=== வர்ணம் ===
வர்ணம் என்னும் உருப்படியில் இரண்டு வகை உண்டு. ஒன்று தாள வர்ணம், மற்றையது பதவர்ணம், பரத நாட்டிய நிகழ்ச்சியில் பதவர்ணம் இடம்பெறும். பாடல் அபிநயிக்கத்தக்க பொருளைக் கருவாகக் கொண்டிருக்கும். பதவர்ணத்தின் சுரங்களுக்கு நிருத்தமும் பாடலுக்கு அபிநயமும் செய்யப்படும். இதனால் இசை, தாளம், பாவம் ஆகிய மூன்றும் சிறந்திருக்கும் உருப்படியாகப் பதவர்ணம் இருக்கும்.
 
=== பதம் ===
வரிசை 113:
 
=== தில்லானா ===
மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் நாட்டிய உருப்படி தில்லானா, பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைக் கொண்டது. தில்லானா - திர்தில்லானா - தீம் திம் திரி திரி தில்லானா - போன்ற சொற்கட்டுகள் இந்த உருப்படி முழுவதும் இருக்கும். சரணப் பகுதியில் மட்டும் பாடல் இருக்கும். மத்திம காலத்தில் மிக விறுவிறுப்பாக ஆடப்படும். கண்ணையும் கருத்தையும் கவரும் கரண நிலைகள் (dance postures) தில்லானாவிற்கு அழகு சேர்க்கும்.
 
=== விருத்தம் ===
வரிசை 121:
பரத நாட்டிய நிகழ்ச்சியில் இறுதியாக ‘மங்களம்’ இடம்பெறும். இதற்கெனத் தனி ஆடல்முறை எதுவுமில்லை. வாழ்த்துச் சொற்களைக் கொண்டது மங்களப் பாடல். பாடகரும் பக்க இசையாளரும் மங்களப் பாடலை விறுவிறுப்பாக இசைப்பர். அப்பொழுது நாட்டியக் கலைஞர் ஆடல் தெய்வமான நடேசனை வணங்குவார். நாட்டிய ஆசான், பக்க இசையாளரை வணங்குவார். தொடர்ந்து சபையோர் அனைவரையும் வணங்குவார். நிகழ்ச்சி மங்களமாக நிறைவுறும்.
== மேற்கோளும் குறிப்புகளும் ==
* [http://www.tamilvu.org/courses/degree/d051/d0514/html/d05144in.htm| பேராசிரியை. ஞானாம்பிகை குலேந்திரன், பரதநாட்டியம்]
{{reflist}}
== இவற்றையும் காண்க ==
வரிசை 129:
* [http://thatstamil.oneindia.in/specials/art-culture/2000/06/24/baratanatyam.html பாரதம் கண்ட பரதம்]
 
{{வார்ப்புரு:தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}}
 
[[பகுப்பு:பரதநாட்டியம்]]
"https://ta.wikipedia.org/wiki/பரதநாட்டியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது