பிரான்சின் முதலாம் நெப்போலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 144 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 20:
|place of burial=[[பாரிஸ்]]
|}}
'''நெப்போலியன் பொனபார்ட்''' (''Napoléon Bonaparte'', [[15 ஆகஸ்ட்]] [[1769]] – [[5 மே]] [[1821]]) அல்லது '''முதலாம் நெப்போலியன்''' [[பிரான்ஸ்]] நாட்டின் படைத் தலைவனாகவும், [[அரசியல்]] தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் [[பிரெஞ்சுப் புரட்சி]]யில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், [[பிரெஞ்சுப் பேரரசன்]], இத்தாலியின் மன்னன், [[சுவிஸ் கூட்டமைப்பு|சுவிஸ் கூட்டமைப்பின்]] இணைப்பாளன், [[ரைன் கூட்டாட்சி]]யின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.
 
[[கோர்சிக்கா]]வில் பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான [[முதலாம் கூட்டணி]] மற்றும் [[இரண்டாம் கூட்டணி]]களுக்கு எதிரான [[பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்|போர்களை]] வழிநடத்தியதன் மூலம் இவன் முன்னணிக்கு வந்தான். 1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான்.<ref name="Schom 1998">{{cite book|last=Schom|first=Alan|title=Napoleon Bonaparte|year=1998|publisher=HarperPerennial|location=New York|isbn=0-06-092958-8|edition=1. HarperPerennial}}</ref> தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். தனது நெருங்கிய [[நண்பர்]]களையும், [[உறவினர்]]களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தான்.
 
[[1812]] இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இத்தோல்வியிலிருந்து நெப்போலியனால் மீளமுடியவில்லை. அக்டோபர் [[1813]] இல், ஆறாவது கூட்டணிப் படைகள், லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. [[1814]] ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி [[எல்பா]]த் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் [[1815]] [[ஜூன் 18]] இல் [[வாட்டர்லூ போர்|வாட்டர்லூ]] என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த [[சென் ஹெலெனா]]த் தீவில் கழிந்தது.
 
==பிறப்பும் கல்வியும்==
[[File:Carlo_BuonaparteCarlo Buonaparte.jpg|thumb|left|upright|150px|நெப்போலியனுடைய தந்தை கார்லோ பொனப்பார்ட்டே]]
நெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகத்து 15 ஆம் தேதி, [[கோர்சிக்கா]]வில் உள்ள [[அசாக்சியோ]] என்னும் நகரத்தில் காசா பொனப்பார்ட்டே எனப்படும் குடும்பத்தின் பரம்பரை வீட்டில் பிறந்தான். இவனது பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இவன் இரண்டாமவன். இந்த ஆண்டிலேயே கோர்சிக்காத் தீவு [[செனோவாக் குடியரசு|செனோவாக் குடியரசால்]] பிரான்சுக்கு வழங்கப்பட்டது.<ref>McLynn 1998, p.6</ref> இவனுக்கு நெப்போலியன் டி பொனப்பார்ட்டே என்னும் பெயர் இட்டனர். தனது இருபதுகளில் தனது பெயரை பிரெஞ்சு மொழித் தோற்றம் கொடுப்பதற்காக நெப்போலியன் பொனப்பார்ட்டே என மாற்றிக்கொண்டான்.<ref name=dwyerxv>Dwyer 2008, p.xv</ref> கோர்சிக்க பொனப்பார்ட்டே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், [[தசுக்கன்]] மூலத்தையுடைய இத்தாலியக் கீழ்நிலைப் பிரபுக்களின் வழிவந்தோர் ஆவர்.<ref>''The court and camp of Bonaparte'', J & J Harper, 1832, p. 17,[http://books.google.it/books?id=bDsVAAAAYAAJ&pg=PA17&lpg=PA17&dq=bonaparte+family+origin+tuscany&source=bl&ots=Qba7JWjrbP&sig=XhV4oDkeIHXkQjbB0u7nlRwVOQ4&hl=it&sa=X&ei=hexaUOGGEo_AtAaOwICABA&ved=0CDYQ6AEwAjgK#v=onepage&q&f=false Google Book]]</ref><ref>Ida M. Tarbell, ''A Short Life of Napoleon Bonaparte'', Kessinger Publishing, 2005, p. 1,[http://books.google.it/books?id=J1E9AdNENHkC&pg=PA1&lpg=PA1&dq=bonaparte+family+origin+tuscany&source=bl&ots=BtBWqx34FN&sig=8mSOiKQ02n7RBYnuDi0zY5pMBD4&hl=it&sa=X&ei=hexaUOGGEo_AtAaOwICABA&ved=0CFwQ6AEwCTgK#v=onepage&q=bonaparte%20family%20origin%20tuscany&f=false Google Book]</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=zNNBAAAAIAAJ&q=napoleon+%22lombard+stock%22&dq=napoleon+%22lombard+stock%22&hl=no&ei=x20xTtiYHMiF-wbFoZ2RDQ&sa=X&oi=book_result&ct=result&resnum=4&sqi=2&ved=0CDYQ6AEwAw |title=The other conquest |publisher=Google Books |accessdate=3 August 2011}}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=aeVAPShsbTMC&pg=PA17&dq=napoleon+%22lombard+origin%22&hl=no&ei=9XMxTq2qLIzt-gbJrKXqDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=lombard&f=false |title=French Fortifications, 1715–1815|publisher=Google Books |date=30 November 2009 |accessdate=3 August 2011}}</ref> இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் [[லிகூரியா]]வில் இருந்து கோர்சிக்காவுக்கு வந்தனர்.<ref>McLynn 1998, p.2</ref> 2012 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட டி.என்.ஏ சோதனைகளின்படி இக் குடும்பத்தின் முன்னோர் சிலர் காக்கேசியப் பகுதிகளில் இருந்து வந்ததாகத் தெரிகிறது..<ref>{{cite web|author=lefigaro.fr |url=http://www.lefigaro.fr/mon-figaro/2012/01/15/10001-20120115ARTFIG00193-selon-son-adnles-ancetres-de-napoleon-seraient-du-caucase.php |title=Le Figaro&nbsp;– Mon Figaro : Selon son ADN,les ancêtres de Napoléon seraient du Caucase! |work=Le Figaro |date=15 January 2012 |accessdate=20 February 2012}}</ref> இந்த ஆய்வுகளின்படி, [[ஆப்லோகுரூப் வகை E1b1c1]] கிமு 1200 ஆம் ஆண்டளவில் [[வட ஆப்பிரிக்கா]]வில் தோன்றியது. இம்மக்கள் அங்கிருந்து காக்கேசியப் பகுதிகளுக்கும் பின்னர் ஐரோப்பாவுக்கும் சென்றனர்.<ref>{{cite web|url=http://www.ccsenet.org/journal/index.php/jmbr/article/view/10609/ |title=Haplogroup of the Y Chromosome of Napoléon the First; Gerard Lucotte, Thierry Thomasset, Peter Hrechdakian; ''Journal of Molecular Biology Research'' |date=December 2011 |accessdate=18 February 2012}}</ref>
இவனது தந்தை [[கார்லோ பொனப்பார்ட்டே]] ஒரு சட்ட வல்லுனர். 1777 ஆம் ஆண்டில் [[பிரான்சின் பதினாறாம் லூயி|16 ஆம் லூயியின்]] அரசவையில் கோர்சிக்காவின் பேராளனாக இவர் பொறுப்பு வகித்தார். நெப்போலியனுடைய இளமைப் பருவத்தில் முதன்மைச் செல்வாக்குச் செலுத்தியவர் இவனது தாய் [[லெட்டிசினா ராமோலினோ]] ஆவார். இவரது கடுமையான ஒழுக்கத்தினால் குழப்படிச் சிறுவனான நெப்போலியனைக் கட்டுப்பாட்டுக்குள் வைந்திருந்தார்.<ref>Cronin 1994, pp. 20–21</ref> நெப்போலியனுக்கு யோசேப்பு என்னும் ஒரு அண்ணனும், லூசியன், எலிசா, போலின், கரோலின், யெரோம் ஆகிய இளையோரும் இருந்தனர். ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக யோசேப்புக்கு முன் பிறந்த இரண்டு பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.<ref>Harvey, R. ''The War of Wars'', Robinson, 2006. p. 58-61.</ref> நெப்போலியன் தனது இரண்டாவது பிறந்தநாளுக்குச் சற்று முன்னராக, 1771 சூலை 21 ஆம் தேதி, [[அசாக்சியோ பேராலயம்|அசாக்சியோ பேராலயத்தில்]] திருமுழுக்குப் பெற்றான்.<ref>{{cite web|url=http://www.napoleon.org/en/magazine/museums/files/Cathedral-Ajaccio.asp|title=Cathedral—Ajaccio|publisher=La Fondation Napoléon|accessdate=31 May 2008}}</ref>
வரிசை 36:
==தொடக்ககாலத் தொழில் வாழ்க்கை==
[[File:Napoleon - 2.jpg|thumb|upright|150px|நெப்போலியன் பொனப்பார்ட்டே 23 வயதில் கோர்சிக்கக் குடியரசுத் தன்னார்வப் படைப்பிரிவின் லெப்டினன்ட் கர்னலாகப் பணிபுரிந்தபோது.]]
1785 செப்டெம்பரில் பட்டம்பெற்று வெளியேறிய நெப்போலியன், லா பெரே கனரக ஆயுதப் படைப் பிரிவில் இரண்டாம் லெப்டினன்ட் ஆகப் பணியில் அமர்ந்தான்.<ref name="rxvi"/>{{#tag:ref|He was mainly referred to as Bonaparte until he became First Consul for life.<ref name=m290>McLynn 1998, p.290</ref>|group=note}} 1789 மே புரட்சி தொடங்கியதற்குப் பின் வரை, நெப்போலியன், வலன்சு, டிரோம், ஆக்சோன் ஆகிய இடங்களில் பணிபுரிந்தான். இக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் விடுமுறை எடுத்துக்கொண்டு கோர்சிக்கா, பாரிசு ஆகிய இடங்களில் இருந்தான். தீவிரமான கோர்சிக்கத் தேசியவாதியான நெப்போலியன் 1789ல் கோர்சிக்கத் தலைவரான [[பாசுக்குவாலே பாவோலி]] என்பவருக்குக் கடிதம் எழுதினான்.
 
<blockquote>"தேசம் அழிந்துகொண்டிருக்கொம்போது நான் பிறந்தேன். நமது கடற்கரைகளில் இறக்கப்பட்ட முப்பதினாயிரம் பிரான்சியர்கள் நமது சுதந்திரத்தை குருதி அலைகளுக்குள் அமிழ்த்தினர். இந்த வெறுக்கத்தக்க காட்சியே எனக்கு முதலில் புலப்பட்டது."<ref>McLynn 1998, p.37</ref></blockquote>
வரிசை 47:
1793 ஆம் ஆண்டு சூலையில், "பூக்கெயரில் இரவுச் சாப்பாடு" () என்னும் தலைப்பிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றை நெப்போலியன் வெளியிட்டான். இது புரட்சித் தலைவரான [[மக்சிமிலியன் ராபெசுபியரே]] என்பவரின் தம்பியான [[அகசுத்தீன் ராபெசுபியரே]]யின் பாராட்டையும், ஆதரவையும் பெற்றது. கோர்சிக்கரான அந்தோனி கிறிசுத்தோபே சலிசெட்டி என்பவரின் உதவியினால், [[தூலோன் முற்றுகை]]யின்போது குடியரசுப் படையில் கனரக ஆயுதக் கட்டளை அதிகாரி பதவி கிடைத்தது. நகர மக்கள் குடியரசு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். பிரித்தானியப் படைகள் நகரை ஆக்கிரமித்து இருந்தன.
 
குடியரசுப் படையினரின் சுடுகலன்கள் நகரின் துறைமுகம் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வசதிகள் கொண்டதும் அதன் மூலம் பிரித்தானியக் கப்பல்களைத் துறைமுகத்தில் இருந்து விரட்ட வழி சமைக்கக் கூடியதுமான குன்று ஒன்றை கைப்பற்றுவதற்கு நெப்போலியன் திட்டம் தீட்டினான். இத் தாக்குதல் மூலம் நகரம் கைப்பற்றப்பட்டது, எனினும் நெப்போலியனின் தொடையில் காயம் ஏற்பட்டது. 24 ஆவது வயதில் நெப்போலியன் பிரிகேடியர் கெனரல் பதவிக்கு உயர்ந்தான். இவனது திறமையைக் கண்ட "பொதுமக்கள் பாதுகாப்புக் குழு" இவனை பிரான்சின் இத்தாலியப் படைகளின் கனரக ஆயுதப் படைகளுக்குப் பொறுப்பாளனாக நியமித்தது.
 
இப் பதவி உறுதி செய்யப்படும்வரை, [[மார்சேய்]]க்கு அண்மையில் உள்ள நடுநிலக்கடல் கரைப்பகுதிகளின் அரண்களைக் கண்காணிக்கும் வேலை நெப்போலியனுக்குக் கிடைத்தது. [[முதலாம் கூட்டணி]]க்கு எதிரான பிரான்சின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக [[சார்டினிய இராச்சியm|சார்டினிய இராச்சியத்தைத்]] தாக்குவதற்கான திட்டம் ஒன்றை நெப்போலியன் வகுத்தான்.
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_முதலாம்_நெப்போலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது