நிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{வார்ப்புரு:கோள்
| பெயர் = நிலா
| பின்னணி = #dddddd
வரிசை 51:
}}
[[படிமம்:Phases of the Moon tamil.jpg|right|thumb|800px|நிலாவின் கலைகள்/பிறைகள் தோன்றுவதைக் காட்டும் படம்]]
'''நிலா''' ('''நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன்''' என்று பலவாறு கூறப்படும்) ({{lang-la|luna}}) எனப்படுவது [[பூமி]]க்கான ஒரேயொரு [[இயற்கைத் துணைக்கோள்|இயற்கைத் துணைக்கோளும்]] சூரியக் குடும்பத்திலுள்ள ஐந்தாவது பெரிய துணைக்கோளும் ஆகும். இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். இது பூமியின் ஒரே இயற்கையான [[துணைக்கோள்]]. இது பூமியைச் சுற்றி வர சராசரி 29.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384, 403 கி.மீ.
 
கலைகள் என்பது நிலாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும் தனித்தனி நிலைகளைக் குறிப்பன. இதனைப் [[பிறை]] என்று சொல்வது பெருவழக்கு. முதல் நாள் நிலாவே தென்படாது. இரவு மிக இருட்டாக இருக்கும்.
இதனை [[அமாவாசை]] என்றும் [[உவா]] நாள் என்றும் அழைப்பர். பிறகு ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக நிலா (வெளிச்சம் தெரியும் பகுதி) பெரிதாகிகொண்டே வரும், இவைகளை இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்றும் இரண்டாங்கலை, மூன்றாங்கலை என்றும் நாட்களைச் சொல்வார்கள். பின்னர் சுமார் 14 நாட்கள் கழித்து ஒரு நாள் முழு நிலா பெரிதாய் வட்ட வடிமாய்த் தெரியும். இதனை [[முழு நிலா]] நாள் என்றும் [[பௌர்ணமி]] நாள் என்றும் சொல்வர். பிறகு அடுத்த சில நாட்கள் நிலா சிறுகச் சிறுகத் தேய்ந்து கொண்டே போய், மீண்டும் உவா நாளுக்கான நிலைக்கே திரும்பி விடும். முதலில் முழுநிலா நாள் வரை வளர்ந்து வருவதை [[வளர்பிறை]] என்றும், அடுத்த சுமார் 14 நாட்களைத் [[தேய்பிறை]] என்றும் அழைப்பர். நிலா நம் பூமியைச் சுற்றி வருகையிலே எப்படி கதிரொளி நிலாக் கோளத்தின் மீது பட்டு பூமியில் தெரிகிறது என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.
 
புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.
 
ஆனால், நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே தான் நிலவில் காற்று இல்லை. நிலவோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்பு விசை சிறிது அதிகம். பூமியின் ஈர்ப்பு விசையில் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே சிறிதளவு காற்று உள்ளது. '''[[வியாழன்]]''' கோளின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அதன் மீது மோதுவது உண்டு.
 
 
==நிலவில் நீர்==
வரி 67 ⟶ 66:
இங்கிலாந்தின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவிவேதியியலாளர் ஆல்பர்டோ சால் என்பவர் சில ஆண்டுகளாக "நிலவு வறண்டதாக பிறந்தது" என்ற பொதுவான கூற்றை உடைக்க முயன்றபொழுது நிலவில் ஆழமான பகுதியில் உருவாகிய நீரானது புவியில் உண்டான நீரின் ஆதாரம் போன்றதாக இருக்கிறது என்பதை கண்டறிந்தார். 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒளிர்மைமாறு (எதிர்பாராப் பொலிவு) விண்மீன் மோதலினால் (cataclysmic collision) கோள் உருவான பொழுது நிலவு பூமியிடம் இருந்து ஒரு திடமான நீர் வழங்கலை கைப்பற்றியதாக அவரது ஆய்வு கூறுகிறது.<ref>[http://www.sciencenews.org/view/generic/id/350303/description/Moons_water_may_have_earthly_origins Moon's water may have earthly origins], சயன்ஸ் நியூஸ், மே 9, 2013</ref>
 
1970களில் அப்பலோ விண்பயணிகளால் கொண்டுவரப்பட்ட நிலவின் இரண்டு பாறையின் நீரினைக் கொண்டு சாலும், அவரது குழு உறுப்பினர்களும் ஆய்வு நடத்தினர் என கடந்த மே 9 சயன்ஸ் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாறைகள் பெரும்பாலும் நிலவின் வாழ்நாளின் முன்பகுதியில் ஏற்பட்ட எரிமலை உமிழ்வின் போது புதைந்த கற்குழம்பு வேறு பரப்புக்கு தள்ளப்படுவதால் உண்டானதாக இருக்கும் எனவும், நீரினை வான்வெளியில் அகலாமல் தடுக்கும் படிகங்களுடன் பிணைந்த அடர் எரிமலைக்குழம்பின் சிறு குமிழிகளைக் அது கொண்டுள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். <ref>A. Saal et al. Hydrogen isotopes in lunar volcanic glasses and melt inclusions reveal a carbonaceous chondrite heritage. Science. Published online May 9, 2013. doi: 10.1126/science.1235142.</ref>
 
அந்தக் குழு பாறைகளின் நீரை அதிலுள்ள ஐதரசன் மற்றும் ஒரு அதிக கருவணுவை (நியூட்டிரான்) கொண்ட டியூட்டிரியம் ஆகியவற்றின் செறிவினை அளப்பதன் மூலம் பகுப்பாய்வு நடத்தியது. அதன் ஓரகத்தனிமங்களின் விகிதம் அந்நீரின் ஆதாரத்தை சூரியக் குடும்பத்திற்குள் உட்பட்டதுவாய் தெரிகிறது. சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள வாயுப் பெருங்கோள்கள் மற்றும் வால்வெள்ளிகள் மிக அதிக ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைக் கொண்டதாகும். பூமியின் நீரும் மிக குறைந்த விகிதத்தைக் கொண்டதாகும்.
 
பூமி மற்றும் பிற நுண்விண்கற்களின் குறைந்த ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைப் போன்றே நிலவுப் பாறைகளின் நீரும் குறைந்த விகிதத்தைக் கொண்டிருப்பது சால் மற்றும் அவரின் குழுவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. இதனால், பூமியின் நீரும் நிலவின் நீரும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரே மாதிரியான நுண்விண்கற்களின் தாக்கத்தினால் ஏற்பட்டது என கூறலாம் என சாலின் அறிக்கை கூறுகிறது. <ref>[http://www.latimes.com/news/science/la-sci-moon-water-20130510,0,3895364.story Moon's water may have come from Earth-bound meteorites], லாஸ் ஏஞ்சலிசு டைம்சு, மே 9, 2013</ref>
 
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/நிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது