உயிர்ச்சத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 88 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 2:
'''உயிர்ச்சத்து''' (''vitamin'') என்பது பெரும்பாலான [[உயிரினம்|உயிரினங்களின்]] இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும், ஆனால் மிக இன்றியமையாத [[கரிமம்|கரிம]] நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களே உயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை, உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான [[கனிமம்|கனிமங்கள்]], கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை<ref>Robert K. Murray, MD, PhD, Daryl K. Granner, MD, Peter A. Mayes, PhD, DSc, Victor W. Rodwell, PhD. Harper’s Illustrated Biochemistry. s.l. : McGraw-Hill Companies, 2003. ISBN 0-07-138901-6.</ref><ref name="Anthony S. Fauci 2008">Anthony S. Fauci, MD, Dan L. Longo, MD. Harrison's PRINCIPLES OF INTERNAL MEDICINE. 17th Edition. s.l. : The McGraw-Hill Companies, 2008. ISBN 978-0-07-159990-0.</ref>.
 
ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம்; எடுத்துக்காட்டாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து C) வேறு உயிரினங்களால் தேவையான அளவும் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை.
 
சில உயிர்ச்சத்துகளை சிறிய அளவில் உயிரினம் உற்பத்தி செய்ய இயலும்: உயிர்ச்சத்து ஏ (A)-யை பீட்டா கரோட்டினில் இருந்தும், நியாசினை இரிப்டோஃபான் என்னும் அமினோக் காடியில் இருந்தும், உயிர்ச்சத்து டி யை (D-யை) தோல் மீது விழும் புற ஊதா ஒளிக்கதிர் மூலமும் உருவாக்கிக் கொள்ள் இயலும்; இருப்பினும், உடலுக்குத் தேவையான அளவு இவற்றைப் பெற நல்ல சத்துள்ள உணவு உட்கொள்ளுதல் கட்டாயம் ஆகும். பதின்மூன்று உயிர்ச்சத்துக்கள் இதுவரை உலகளாவிய நோக்கில் அறியப்பட்டுள்ளது.
 
''விட்டமின்'' (Vitamin) என்னும் ஆங்கிலச்சொல்லானது [[இலத்தீன்]] சொல்லான vita (உயிர்) + amine (அமைன்) போன்றவற்றின் சேர்க்கையால் உருவானது. [[நைதரசன்]] கொண்ட மூலக்கூறுகளே ''அமைன்'' என அழைக்கப்படுகிறது. ''அமைன்'' எனப்படும் பதம் பின்பு தவறானது எனத் தெரியவந்ததால் ஆங்கில “vitamine” என்னும் சொல் பின்னர் “vitamin” எனக் குறுக்கப்பட்டது.
வரிசை 17:
''முதன்மைக் கட்டுரை: [[உயிர்ச்சத்துக்களின் வரலாறு]]''
 
உடல்நலத்தைப் பேண குறிப்பிட்ட சில உணவுகள் தேவை என்பதன் முக்கியத்துவம் உயிர்ச்சத்து அறிமுகமாவதற்கு முன்னரே அறியப்பட்டிருந்தது. பழங்கால [[எகிப்தியர்]], [[மாலைக்கண்]] நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் [[கல்லீரல்|கல்லீரலுக்கு]] உண்டு என்பதனை அறிந்திருந்தார்கள், அந்த நோயே இன்று உயிர்ச்சத்து ஏ (உயிர்ச்சத்து A) குறைபாடாக அறியப்பட்டுள்ளது.<ref>Challem, Jack. The Past, Present and Future of Vitamins. The nutrition reporter. [Online] May 25, 1998. [Cited: July 30, 2010.] http://www.thenutritionreporter.com/history_of_vitamins.html.</ref> ஊட்டச்சத்து பற்றிய வரலாற்றில் மிக முக்கியமான காலமாக 1747 ஆம் ஆண்டு அமைகிறது, அன்று சித்திரசு (Citrus) குடும்ப பழவகைகளில் காணப்படும் ஏதோ ஒரு ஊட்டச்சத்து [[இசுகேவி]] (scurvy) என்னும் நோய் உருவாகுவதைத் தடுக்கிறது என்று [[இசுக்காட்லாந்து]] நாட்டு அறுவை மருத்துவர் ஜேம்சு லிண்ட் கண்டறிந்தார். 1753 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இசுகேவி பற்றிய ஆய்வு (Treatise on the Scurvy)” எனப்படும் கட்டுரையில் இசுகேவியைத் தடுப்பதற்கு [[எலுமிச்சம்பழம்]] அல்லது [[தேசிக்காய்]] பயன்படுத்தவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.<ref>விக்கிபீடியா, தமிழ். வைட்டமின் சி. [Online] http://ta.wikipedia.org/wiki/வைட்டமின்_சி.</ref> 1929இல் கோப்கின்சுக்கும் இக்மானிற்கும் பலவகை உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தமைக்கு மருத்துவத்திற்கான [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref>Carpenter, Kenneth J. The Nobel Prize and the Discovery of Vitamins. The Nobel Foundation. [Online] June 22, 2004. http://nobelprize.org/nobel_prizes/medicine/articles/carpenter/index.html.</ref> 1912இல் [[போலந்து]] நாட்டைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் கசிமிர்சு ஃபங்க் அதே பதார்த்தத்தை பிரித்தெடுத்து “வைட்டமைன்(Vitamine)” என்று பெயரிட முன்மொழிந்தார்.<ref>Funk, C. and H. E. Dubin. The Vitamines. Baltimore : Williams and Wilkins Company,, 1922.</ref> 1920இல் “vitamine” என்னும் சொல்லில் இருந்து “e”யை அகற்றி “vitamin” வைட்டமின் என்று அழைக்க சாக் செசில் துருமொண்ட் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டது.<ref>Rosenfeld, Louis. Abstract :Vitamine--vitamin. The early years of discovery. U.S. National Library of Medicine. [Online] 1997. PMID: 9105273 [PubMed - indexed for MEDLINE].</ref>
 
== மனிதர்களில் உயிர்ச்சத்து ==
வரிசை 171:
 
ஒரு பலகல உயிரினத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக உயிர்ச்சத்து விளங்குகின்றது. உயிரினத்தின் ஆரம்பகால [[வளர்ச்சி|வளர்ச்சியில்]] இருந்து இறுதிக்காலம் வரை தேவையானதாக விளங்கும் உயிர்ச்சத்து, முதன் முதலில் கருவாக இருக்கையில் தாயிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது, இந்த நிகழ்வில் மாற்றம் ஏற்படும் போது, அதாவது போதிய அளவு உயிர்ச்சத்துகளோ அல்லது கனிமங்களோ கிடைக்காதநிலையில் பிறக்கும் குழந்தை குறைபாட்டுடன் உலகில் தோன்றுகிறது.
பெரும்பங்கு உயிர்ச்சத்துக்கள் உணவின் மூலம் பெறப்பட்டாலும், மனித குடலில் வசிக்கும் சாதாரண [[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] உயிர்ச்சத்து ‘கே’ மற்றும் பையோட்டின் போன்றவற்றை வழங்குவதன் மூலம் உதவி புரிகின்றன, இதே வேளையில் உயிர்ச்சத்து ‘டி’யானது சூரியனின் புற ஊதாக்கதிர்கள் மூலமாக மனித தோலில் தொகுக்கப்படுகிறது. மனித உயிரினம் சில உயிர்ச்சத்துக்களை அதன் மூலத்தில் இருந்து தொகுக்கக்கூடியவாறு உள்ளது, உதாரணமாக, உயிர்ச்சத்து ‘ஏ’யானது பீட்டா கரோட்டினில் ([[மாம்பழம்]], [[பப்பாளி]], [[காரட்]] போன்ற மஞ்சள் நிற உணவுவகைகள்) இருந்தும், நியாசின் இரிப்டோஃபானிலிருந்தும் ([[முட்டை]] வெள்ளைக்கரு, அவரை, வாழைப்பழம்) தொகுக்க முடியும்.
 
=== குறைபாட்டு நோய்கள் ===
வரிசை 178:
 
=== குறைபாட்டை உண்டாக்கும் பிற காரணிகள் ===
குடலில் [[அகத்துறிஞ்சாமை]] ஏற்படும் நிலையில் உயிர்ச்சத்துக்களும் உடலில் உள்ளெடுக்கப்படுவதில்லை. நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள் கூட உயிர்ச்சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது. இதனைவிட சில மருந்து வகைகளின் பயன்பாடு, புகைப்பிடித்தல், குடிவயமை அல்லது குடிவெறி போன்றனவும் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன.
 
=== அளவு மிகைப்பு விளைவும் பக்க விளைவும் ===
வரிசை 190:
உயிர்ச்சத்துக்கள், இலத்தீன் அகர எழுத்துக்களைக் கொண்டு A, B, C, D, E, K எனப் பெயரிடப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக உள்ள அகர எழுத்துக்கள், பின்னர் விடுபட்டு E இலிருந்து K இற்கு தாவி நிற்பதனை இங்கு அவதானிக்கலாம், காரணம் என்னவென்றால், இவற்றுள் F இலிருந்து J வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள் தற்பொழுது உயிர்ச்சத்துக்கள் இல்லையென்பதாலும் உயிர்ச்சத்து Bயின் உபபிரிவுகளிலும் அடங்குகின்றமையாலும் ஆகும்.
 
செருமானிய அறிவியலர்களால் உயிர்ச்சத்து 'கே'யானது பிரித்தெடுக்கப்பட்டு விபரிக்கப்பட்டபோது உயிர்ச்சத்து 'கே'யின் இரத்தவுறைதல் இயல்பு காரணமாக 'Koagulation' என்னும் சொல்லில் இருந்து எழுத்து 'கே'யானது எடுக்கப்பட்டு உயிர்ச்சத்து 'கே' (உயிர்ச்சத்து K) என அழைக்கப்பட்டது, இதே வேளையில் ஏற்கனவே உயிர்ச்சத்துக்கள் 'J' வரையில் பெயரிடப்பட்டதால், இச்சம்பவம் தொடர்ச்சியான பெயரீட்டு முறைக்கு வாய்ப்பாக அமைந்தது.<ref name=Bennett>[http://www.lifeinyouryears.net/everyvitamin.pdf Every Vitamin Page] All Vitamins and Pseudo-Vitamins. Compiled by David Bennett.</ref><ref name =quiz>[http://www.pubquizhelp.34sp.com/sci/vitamin.html Vitamins and minerals – names and facts]</ref>
 
{| class="wikitable" border="1"
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது