கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 38 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:cad_crankcad crank.jpg|thumb|300px|right|இயந்திரப் பாகமொன்றின் இருபரிமாண வரைபடமும், முப்பரிமாணத் தோற்றமும்]]
'''கணினி உதவு வடிவமைப்பு மற்றும் வரைதல்''' (Computer Aided Design and Drawing)என்பது கணினி தொடர்பான கருவிகளைப் பயன்படுத்திக், [[கட்டிடக்கலை]], [[பொறியியல்]], இயந்திர உற்பத்தி மற்றும் இன்னபிற துறைகளில் [[வடிவமைப்பு]] மற்றும் வரைபடம் வரைதலைக் குறிக்கின்றது. இதில் இதற்காக உருவாக்கப்படும் பலவகையான [[மென்பொருள்|மென்பொருள்களும்]], சில சமயம், விசேடமாக உருவாக்கப்படும் வன்பொருள்களும் தொடர்பு படுகின்றன. தற்காலத்தில் இருபரிமாண, காவி அடிப்படையில் அமைந்த வரைபு முறைமைகள் (2D vector based drafting systems) தொடக்கம், முப்பரிமாண, மேற்பரப்பு மற்றும் திண்ம வடிவமைப்பு மாதிரியுருவாக்கிகள் (3D surface and solid design modellers) வரை பலவிதமான மென்பொருள்கள் புழக்கத்திலுள்ளன.
 
== அறிமுகம் ==
 
கணினித் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தின்]] வேகமான வளர்ச்சி மனித வாழ்வின் சகல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது போன்று, வடிவமைப்பு மற்றும் அதனோடிணைந்த படவரைதற் துறையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம் வரை, [[வரைபலகை|வரைபலகைகளைப்]] பயன்படுத்திக் கைகளால் படங்களை வரைந்த நிலைக்கு மாற்றாக [[கணினி]]களைப் பயன்படுத்திப் படம் வரையும் முறை அறிமுகமானது. இத் துறையில் கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாகப் பல துறைகளில் இது ஒரு இன்றியமையாத அம்சமாக ஆகியுள்ளது.
 
[[படிமம்:Cadproc1-ta.png|right|400px]]
"https://ta.wikipedia.org/wiki/கணினி_உதவு_வடிவமைப்பும்_வரைதலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது