சூல் முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 61 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 6:
===மனித இனத்தில்===
[[File:Gray5.svg|thumb|260px|சூல் முட்டையின் முதிர்ச்சிச் செயல்பாட்டில் [[நிறப்புரி]]களின் எண்ணிக்கை குறைவதைக் காட்டும் படம்]]
[[மனிதர்|மனிதரில்]] பெண்ணின் [[சூலகம்|சூலகத்தில்]] இந்த சூல் முட்டைகள் உருவாகும். குழந்தைப் பிறப்பின்போதே ஒரு பெண்ணிற்கு வாழ்நாள் முழுமைக்குமான முட்டை மூலங்கள் (primordial follicles) உண்டாகின்றன; பெண் [[பூப்பு|பூப்படைந்த]] காலத்திலிருந்து அனைத்து முட்டை மூலங்களும் தீரும் வரை மாதத்திற்கு ஒரு முட்டையாக முதிரவைத்து வெளியிடுகிறாள். இது [[முட்டைப் பிறப்பு]] எனப்படுகிறது.
 
பின்னர் இவை ஆணின் [[விந்து|விந்தோடு]] சேர்ந்து கருவணுவை உருவாக்கி, அந்த கருவணு பெண்ணின் [[கருப்பை]]யில் பதிந்து வளரும். கருவணுவானது [[முளைய விருத்தி]] மூலம் [[முளையம்|முளையமாக]] விருத்தியடைகிறது. முளையத்திற்கு தாயிடமிருந்து [[சூல்வித்தகம்]] மூலம் ஊட்டம் கிடைக்கிறது. பின்னர் [[முதிர்கரு|முதிர்கருவாகி]], குறிப்பிட்ட [[கருத்தரிப்பு]] காலம் நிறைவடைந்ததும், [[குழந்தை]]யாக [[குழந்தை பிறப்பு|பிறக்கும்]].
 
மனித உடலில் உள்ள [[உயிரணு]]க்களிலேயே மிகவும் பெரியது சூல் முட்டை ஆகும். இதனை [[நுண்ணோக்கி]]யின் உதவியின்றி காண இயலும். இது 100 முதல் 200 &nbsp;µm நீளமுள்ளது. இருப்பினும் இவை வெளியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் [[ஊர்வன]], [[பறவை|பறப்பனவினதை]] விட பல மடங்கு சிறியதாகும். எனவேதான் இவற்றிற்கு கருப்பையில் நீண்ட நாள் வளர்ச்சித் தேவையாக உள்ளது.<ref>[http://education.yahoo.com/reference/gray/subjects/subject/3 The Ovum, Gray's Anatomy of the Human Body, Yahoo! Education]</ref><ref>[http://cancerweb.ncl.ac.uk/cgi-bin/omd?ovum Ovum, Online Medical Dictionary, CancerWEB, Newcastle University]</ref><ref>[http://www.rci.rutgers.edu/~uzwiak/HumanSexuality/HSSpringLect4.html Oogenesis, Dr. Uzwiak, New Jersey State University]</ref><ref>[http://www.biology-online.org/dictionary/Ovum Definition of Ovum, Biology-Online.org]</ref>
 
=== பிற பாலூட்டிகள் ===
வரிசை 16:
 
=== தாவரங்கள் ===
பல தாவரங்களில் [[ஆர்க்கிகோனியம்|தாவர பெண் உறுப்புக்களில்]] [[ஒடுக்கற்பிரிவு]] மூலம் சூல் முட்டைகள் உருவாகின்றன. இந்த உறுப்புகள் முட்டை உயிரணுக்களை நீண்ட 'கழுத்து'ப் பகுதியில் கொண்டுள்ளன. முட்டை முதிர்வடையும்போது இந்தக் கழுத்து திறந்து கொள்ள விந்தணு நீந்தி கருக்கட்டலை நிகழ்த்துகிறது.
 
மலரும் தாவரங்களில் பெண் [[பாலணு]]க்கள் எட்டு உயிரணுக்களைக் கொண்டு [[சூல்வித்து|சூல் வித்தில்]] உருவாகின்றன. இவை [[முளையப் பை]] எனப்படுகின்றன. முளையப்பையின் திறப்பிற்கு அண்மையிலுள்ள உயிரணு முட்டை அணுவாகிறது. [[மகரந்தச் சேர்க்கை]]யின்போது [[விந்தணு]] முளையப் பைக்குள் நீந்தி முட்டையை கருக்கட்டுகிறது. உருவாகும் கருவணு பின்னர் முளையமாக சூல் வித்தில் வளர்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சூல்_முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது