தேநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 131 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Tea_leaves_steeping_in_a_zhong_%C4%8Daj_05Tea leaves steeping in a zhong čaj 05.jpg|right|thumb|220px|தேநீர்]]
[[படிமம்:Teestrauch_DetailTeestrauch Detail.jpg|right|thumb|220px|தேயிலைத் தோட்டம்]]
[[படிமம்:HCAM13.jpg|right|thumb|220px|ஒரு தேயிலைச் செடி.]]
 
'''தேநீர்''' உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். தேயிலைச் செடியிலுள்ள இலைகள், தளிர்கள் மற்றும் மொட்டுக்களில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. தேயிலைகளை பெரும்பாலான மக்கள் சூடான நீரில் வடித்துப் பின் அவரவர் விருப்பத்திற்கிணங்க [[பால்]] மற்றும் [[சர்க்கரை]]யைக் (இலங்கைத் தமிழ்: சீனி) கலந்தோ எதையும் கலக்காமலோ அருந்துகின்றனர். சிலர் தேநீரைக் குளிர்வித்தும் அருந்துகின்றனர்.
 
தேநீர், ''[[கமெலியா சினென்சிஸ்]]'' ''(Camellia sinensis)'' எனப்படும் செடியின் குருத்து இலைகளைப் பல முறைகளால் பதப்படுத்தி உருவாக்கப்படும் தேயிலை எனப்படும், பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நீருக்கு அடுத்தபடியாக அதிகம் அருந்தப்படுவது தேநீரே என்று கூறப்படுகின்றது. பொதுவாக, கருந்தேநீர், ஊலாங்கு தேநீர், பசுந்தேநீர், வெண்தேநீர், புவார் தேநீர் என ஐந்து வகையான தேநீர்கள் கிடைக்கின்றன. இவை தவிர தேயிலைச் செடியல்லாத பிற மூலிகைச் செடிகளின் பகுதிகளிலிருந்து பெறப்படும் சிலவும் [[மூலிகைத் தேநீர்]] என அழைக்கப்படுகின்றன.
 
== தோற்றமும் வரலாறும் ==
தேயிலை, தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக நிலநேர்க்கோடு 29°வ, நிலநீள்கோடு 98°கி யும் சந்திக்கும்; வடகிழக்கு [[இந்தியா]], வடக்கு [[பர்மா]], தென்மேற்கு [[சீனா]], [[திபேத்து]] ஆகியவற்றை அடக்கிய பகுதியிலேயே தோன்றியதாகக் கூறப்படுகிறது (மொண்டல், 2007. பக்.519). இந்தப் பகுதியிலிருந்து இத் தேயிலைச் செடி 52 நாடுகளுக்கு அறிமுகமானது.
 
அஸ்ஸாமிய, சீன வகைகளுக்கு உடையிலான உருவ அடிப்படையிலான வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தேயிலை இரண்டு [[தாவரவியல்]] மூலங்களைக் கொண்டிருக்கலாமெனப் பல காலமாக நம்பப்பட்டது. எனினும், [[திரள் பகுப்பாய்வு]] (Cluster analysis), [[நிறமூர்த்த எண்]]அல்லது [[நிறப்புரி எண்]] (chromosome number), இலகுவான [[கலப்புப்பிறப்பாக்கம்]] போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது, ''கமெலியா சினென்சிஸ்'' ''(Camellia sinensis)'' ஓரிடத்தில் தோன்றியதென்றே கொள்ள முடிகிறது. சீனாவின் யுனான் மாகாணமே தேநீரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அதாவது, இங்கேயே முதல் முதலில் தேயிலையை உண்பது அல்லது நீரில் ஊறவைத்துக் குடிப்பது சுவையானது என்பதை மனிதன் அறிந்து கொண்டான்.
வரிசை 21:
 
[[படிமம்:Tea plantation picking.JPG|left|thumb|220px|தான்சானியாவில் தொழிலாளர்கள் கொழுந்து எடுக்கின்றனர்.]]
முதிர்ந்த தேயிலைச் செடியின் மேற்பகுதியில் 1-2 அங்குலப் பகுதியே எடுக்கப்படுகிறது. குருத்துக்களையும், இலைகளையும் கொண்டுள்ள இப்பகுதி "கொழுந்து" எனப்படுகின்றது. வளரும் பருவகாலத்தில் 7 தொடக்கம் 10 நாட்களுக்கு ஒருமுறை கொழுந்து எடுக்க முடியும். தேயிலைச் செடி இயல்பாக வளர விடும்போது ஒரு மரமாக வளரக்கூடியது. ஆனால், பயிரிடப்படும்போது, இது இடுப்பளவு உயரத்துக்கு கத்தரித்து விடப்படுகிறது. இதனால் அதிகம் குருத்துக்கள் வளர்வதுடன், கொழுந்து எடுப்பதற்கு வசதியாகவும் இருக்கும்.
 
பொதுவாக இரண்டு தேயிலைச் செடி வகைகள் பயிரிடப்படுகின்றன. ஒன்று சிறிய இலைகளைக் கொண்ட சீன வகை (''க. சினென்சிஸ் சினென்சிஸ்''). அடுத்தது பெரிய இலைகளைக் கொண்ட அசாமிய வகை (''க. சினென்சிஸ் அசாமிக்கா''). தேயிலைச் செடிகளை வகைப்படுத்துவதற்கான முக்கியமான அடிப்படை இலையின் அளவு ஆகும். இதன்படி மூன்று வகைகளை அடையாளம் காணலாம். 1. அசாம் வகை: பெரிய இலைகளைக் கொண்டது. 2. சீன வகை: சிறிய இலைகளுடையது. 3. கம்போட் வகை: நடுத்தர அளவுள்ள இலைகளைக் கொண்டது.
வரிசை 39:
==== ஊலாங்கு தேநீர் ====
ஊலாங்கு தேயிலை பசுந்தேயிலைக்கும் கருந்தேயிலைக்கும் உள்ள இடைப்பட்ட வகையாகும். ஊலாங்கு தேநீர் சீனத்தில் உள்ள ஃபுசியன் மாகாணத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் மிங்கு மன்னர்குல ஆட்சியின் கீழ் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. ஊலாங்கு தயாரிப்பதற்கு தேயிலைகள், மூவிலைகளும் ஒரு மொட்டும் கொண்ட தொகுதிகளாக பறிக்கப்படுகிறது. பறித்த இலைகளை ஒன்றில் இருந்து மூன்று நாட்கள் (தேயிலைகள் 30% சிவப்பாகும் வரை) புளிக்க வைத்துப் பின் கரிப்புகை கொண்டு உலர வைக்கப்படுகிறது. இவ்வகைத் தேயிலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரானது தெளிந்த சிவப்பு நிறம் உடையதாகவும், மணம் மிகுந்ததாகவும், கசப்பின்றி சிறு இனிப்புச் சுவையுடனும் விளங்குகிறது. சீனாவில் தயாரிக்கப்படும் ஊலாங்கு தேயிலைகள் சப்பானுக்குத் தான் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
 
==== கருந்தேநீர்/செந்தேநீர் ====
வரி 55 ⟶ 54:
== செய்முறை ==
==== சூடான தேநீர் ====
[[படிமம்:Milk_clouds_in_teaMilk clouds in tea.jpeg|right|thumb|120px|பாலுடன் கலந்த கருந்தேநீர்]]
* தெளிந்த நீரை ஒரு சுத்தமான் கொதிகலத்தில் 75 முதல் 90 டிகிரி [[செல்சியஸ்|செல்சியசுக்கு]] சூடாக்கவும். நீரை அதிக அளவு கொதிக்க விடாமல் இருப்பது நன்று.
* தேயிலைகளை ஒரு கலத்திலிட்டு பின் கொதித்த நீரை அதன் மேல் கொட்டவும்.
வரி 71 ⟶ 70:
 
==== குளிர் தேநீர் ====
[[படிமம்:NCI_iced_teaNCI iced tea.jpg|right|thumb|120px|குளிர் தேநீர்]]
* தெளிந்த நீரை ஒரு சுத்தமான் கொதிகலத்தில் கொதிக்க விடவும்.
* தேயிலைகளை ஒரு கலத்திலிட்டு பின் கொதித்த [[நீர்|நீரை]] அதன் மேல் கொட்டவும்.
வரி 91 ⟶ 90:
 
ஜப்பான், கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் மிகவும் பண்புபடுத்தப்பட்ட ஒரு மரபு சடங்காகவும் கலையாகவும் தேநீர் சடங்கு (Tea Ceremony) வழங்குகின்றது. தேநீர் சடங்கு நடத்துனர் மரபுகளுக்குமைய தேநீரை தாயாரித்து விருந்துனருடன் பகிர்வதே இச்சடங்கின் சாரம்சம்.
 
 
== தேனீர் பழக்கம் இருதயத்துக்கு பலம் ==
"https://ta.wikipedia.org/wiki/தேநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது