தலாய் லாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி clean up
வரிசை 1:
{{dablink|இந்த கட்டுரை தலாய் லாமா [[பரம்பரை]] பற்றியது. தற்போதைய 14-ம் தலாய் லாமாவைப் பற்றி அறிய [[டென்சின் கியாட்சோ]]வைப் பார்க்க}}
 
{{Infobox monarch
வரிசை 22:
}}
 
'''தலாய் லாமா''' (''Dalai Lama'') என்பது கெலுக் (கெலுக்பா) அல்லது மஞ்சள் தொப்பி என்ற [[திபெத்]]திய [[பௌத்தம்|புத்த]] மதப்பிரிவின் தலைமை [[லாமா]]வின் பதவியைக் குறிக்கும் பெயராகும். இது தலாய் (கடல்) என்ற மங்கோலிய சொல்லும், லாமா ([[திபெத்திய மொழி|திபெத்தியம்]]: བླ་མ, ''bla-ma'', ஆசான், குரு) என்ற திபெத்திய சொல்லும் இணைந்த கூட்டாகும்<ref>[http://www.etymonline.com/index.php?term=lama Online Etymology Dictionary]. Etymonline.com. Retrieved on 2011-04-10.</ref>. திபெத்திய மொழியில் "லாமா" என்னும் சொல் "குரு" என்னும் வடமொழிச் சொல்லுக்கு இணையானது என்று [[14வது தலாய் லாமா|இன்றைய தலாய் லாமா]] விளக்கம் தருகிறார்.
 
மத நம்பிக்கையின் படி தலாய் லாமா என்பவர் [[அவலோகிதர்|அவலோகிதரின்]] அவதார வரிசையில் வருபவர் எனக் கருதப்படுகிறார். கெலுக் அல்லது மஞ்சள் தொப்பி பிரிவின் தலைவர் பதவியின் பெயர் [[கேண்டன் டிரிபா]] ஆகும். பலரும் தலாய் லாமா இப்பிரிவின் தலைவர் என கருதுவதுண்டு. தலைவர் பதவியில் ஒருவர் 7 ஆண்டுகள் மட்டுமே இருக்கமுடியும் இத்தலைவரை நியமிப்பதில் தலாய் லாமாவிற்கு பெரும்பங்கு உண்டு. தலாய் லாமாக்கள் ஆன்மீகத் தலைவர்கள் ஆவர். ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
வரிசை 32:
மத்திய ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம் [[திபெத்]] ஆகும். திபெத்தின் பல பகுதிகளை ஏழாம் நூற்றாண்டில் 'சாங்ட்சன் கேம்போ' (Songtsän Gampo) எனும் அரசர் ஒருங்கிணைத்தார், இவரே புத்த மதத்தை திபெத்திற்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் என கருதப்படுகிறது. 1600 இன் தொடக்க காலத்தில் இருந்து 'தலாய் லாமா' என்று பொதுவாக அழைக்கப்படும் ஆன்மீக தலைவர்கள், திபெத்திய மைய நிருவாகத்தின் தலைமையை பெயரளவில் ஏற்றிருந்தார்கள். இவர்கள், அவலோகிதர் என்ற போதிசத்துவரின் வெளிப்பாடுகளாக நம்பப்படுகிறார்கள்.
 
17 ம் நூற்றாண்டில் திபெத் பிளவுபட்டிருந்தது, மேலும் மஞ்சூரியாவிருந்து பின்வாங்கிய சக்கர் பகுதியை ஆண்ட லிக்டென் கான் (Ligten khan) என்ற மங்கோலிய தலைவர் கெலுக் புத்த மதபிரிவை அழித்துவிடுவதாக கூறி திபெத் மேல் படையெடுத்து வந்தார். அதை முறியடிக்கவும் திபெத்தை ஒன்றிணைக்கவும் 5-ம் தலாய் லாமா மங்கோலிய இனத் தலைவர் குஷ்ரி கானை கேட்டுக்கொண்டார். அதையேற்று குஷ்ரி கான், லிக்டென் கான் மற்றும் கெலாங் பிரிவின் எதிரிகளை அழித்து திபெத்தை ஒன்றிணைத்தார். இவர் கெலுக் பிரிவின் பாதுகாவலர் என்ற பட்டத்தை பெற்று 5-ம் தலாய் லாமா ஆன்மீகத்திலும் அரசியலிலும் செல்வாக்கு செலுத்த உதவிபுரிந்தார்.
 
17 ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை, தலாய் லாமாவும் அவரது பிரதிநிதிகளும் வழிவழியாக தலைநகரான [[லாசா]]வை இருப்பிடமாக கொண்டு திபெத்தின் பெரும்பகுதியின் அரசியல் அதிகாரம் பெற்றவராக, மதம் மற்றும் நிருவாகப் பணி செய்துவந்தார்கள்.
வரிசை 43:
 
== தலாய் லாமா பெயர் தோற்றம் ==
1578ல் மங்கோலி அரசர் அல்டான் கான் தலாய் லாமா என்ற பட்டத்தை சோனம் கியட்சோவுக்கு (3வது தலாய் லாமா) வழங்கினார். இந்தப்பட்டம் இவருக்கு முன் இருந்த இருவருக்கும் 1578ல் இருந்து குறிக்கப்பட்டது. 14 வது தலாய் லாமா இந்த பட்டத்தை அல்டான் கான் வழங்கவேண்டும் என்று நினைக்கவில்லை இது சோனம் கியட்சோ என்பதன் மங்கோலிய மொழிபெயர்ப்பாகும் என்கிறார்.
 
2வது தலாய் லாமாவிலிருந்து அனைத்து தலாய் லாமாக்களும் கியட்சோ என்ற பெயரை தாங்கி வருகிறார்கள் இதன் பொருள் பெருங்கடல் என்பதாகும். முதல் பெயர் மட்டுமே மாறி வரும். தலாய் என்பதற்கு [[திபெத்திய மொழி|திபெத்திய மொழியில்]] எந்த பொருளும் இல்லை, இது பட்டத்திற்கான பெயராக நிலைத்து விட்டது என்று [[டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா|14வது தலாய் லாமா]] கூறுகிறார்.<ref>Laird (2006), p. 143.</ref>
 
சோனம் கியட்சோவுக்கு தலாய் லாமா என்ற பட்டம் முதலில் கிடைத்தாலும் இவர் தலாய் லாமா பரம்பரையில் 3வது ஆவார். இவருக்கு முன் இருந்த இருவருக்கும் மரணத்திற்கு பின் அப்பட்டம் அளிக்கப்பட்டது.
 
== முதல் தலாய் லாமா ==
[[படிமம்:Gushi Khan Fresco.jpg|thumb|right|150px|குஷி/குஷ்ரி கான் (1582–1655)]]
பத்மா டோர்ஜே என்ற இயற்பெயருடைய முதல் தலாய் லாமா 7 வயது வரை மேய்ப்பானாக வளர்ந்தார். 1405ல் நார்தங் புத்த மடத்தில் சேர்ந்து அம்மடத்தின் தலைமை புத்த ஆசானிடம் முன்னிலையில் தன் முதல் உறுதிமொழியை செய்தார். 20 வயதாகும் போது புத்த மத கோட்பாடுகளை நன்கு கற்றுணர்ந்ததால் அவருக்கு "கெடுங் ட்ருப்" (கெண்டுன் ட்ரப்) என்ற பெயர் சூட்டப்பட்டு முழு புத்த துறவி ஆனார்<ref name="thubten75">Thubten Samphel and Tendar (2004), p. 75.</ref>. அவ்வயதில் சிறந்த ஆசானான இட்ஜோங்க்பாவிடம் மாணவனாக சேர்ந்தார் ,<ref>Farrer-Halls, Gill. ''World of the Dalai Lama''. Quest Books: 1998. p. 77</ref>. இவர் இட்ஜோங்க்பாவின் அண்ணன் மகன் என்றும் சிலர் சொல்லுகிறார்கள் <ref name="Tibet p. 35">Thubten Samphel and Tendar (2004), p.35.</ref>. இவருக்கு அரசியல் அதிகாரம் எதுவும் கிடையாது. அதை சிவப்பு தொப்பி புத்த மத பிரிவு, மங்கோலிய கான்களிடம் இருந்தது.
 
இவர் தாசிகும்போ (Tashilhunpo) என்ற மடத்தை நிறுவினார். இறக்கும் வரை இதுவே இவரின் வசிப்பிடமாகவும் இருந்தது. இது தற்போது பஞ்சென் லாமாக்களின் இருப்பிடமாக உள்ளது.
 
== பஞ்சென் லாமா ==
வரிசை 62:
 
== திபெத் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பு ==
ஐந்தாம் தலாய் லாமா காலத்திலிருந்து திபெத்தில் தலாய் லாமா அரசியல் அதிகாரம் பெற்றவராக விளங்கினார். 1717ல் ஜுங்கர் (Dzungar) என்பவர்கள் திபெத்தை ஆக்ரமித்தார்கள். அப்போது மக்கள் ஆதரவு இல்லாமல் தலாய் லாமாவாக இருந்த நகுவாங் யெசுகே கயட்சோவை பதவியில் இருந்து நீக்கி சீன அரசின் ஆதரவோடு திபெத்தை ஆண்ட லாசங் கானை கொன்றார்கள். இவர்கள் [[லாசா]]வின் புனித இடங்களில் உள்ள பொருட்களை சூரையாடி கொள்ளையடித்ததால் மக்களின் ஆதரவை இழந்தனர். இதையடுத்து [[சிங் வம்சம்|சிங் வம்ச]] மன்னன் ஆங்சி படைகளை அனுப்பினார் அது தோற்கடிக்கப்பட்டதால் பெரிய படையை அனுப்பி 1720ல் ஜுங்கர்களை தோற்கடித்தார். இவர்கள் ஏழாம் தலாய் லாமா பதவியேற்க உதவினார்கள். திபெத்தை தனது ஆட்சிக்குட்பட்ட காப்புரிமை பெற்ற நாடாக ஆங்சி அறிவித்தார். திபெத்தில் தனது தூதர்கள் இருவரை அவர் நியமித்தார். சிங் வம்சம் 1911 ல் முடியும் வரை இது தொடர்ந்தது.
 
== திபெத் குடியரசு அறிவிப்பு ==
வரிசை 80:
 
== திபெத்-சீனப் போர் ==
புதிய சீன அரசாங்கம் சீனாவின் எல்லைகளை விரிவுபடுத்தத் தொடங்கியபோது திபெத்திற்கு பேரிடி காத்திருந்தது. சீனா கண்காணிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் பொறுப்பு ஒப்படைத்திருந்த பகுதிகளை சீனாவிற்கு உட்பட்ட பகுதி என சீனா பகிரங்கமாக அறிவித்தது. 1950 அக்டோபர் மாதம் சீனப்படைகள் திபெத்திற்குள் புகுந்தன. திபெத்தின் தலைநகர் லாஸாவிற்க்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் சீனா தனது படைகளை நிறுத்தியது. அப்போழுது 16 வயது நிரம்பிய தலாய் லாமா சீனப்படையை எதிர்க்குமாறு தனது படைகளுக்கு ஆணையிட, திபெத்தியர்களும் ஆவேசத்துடன் போரிட்டனர்.ஆனால் 80 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட சீனப் படையுடன் 10,000திற்கும் குறைவான நவீன ஆயுதங்கள் இல்லாத காரணத்தால் திபெத்தியர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை.
 
இதன் காரணமாக திபெத் அரசு சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டது. எனவே சீன அரசின் மேலாதிக்கம் திபேத்தின் மீது இருக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் சீனாவின் பயமுறுத்துதல் பேரில் கையொப்பமானது. அந்த சரத்தின் படி, சீனா திபெத்தின் மத விவகாரங்களிலோ உள்நாட்டு ஆட்சியிலோ தலையிடாது. ஆனால் திபெத்தின் உள் நாட்டு விவகாரங்களிலும் முழுமையான குறுக்கீடுகளுடனும் சீனப் படைகள் திபெத்தில் முழுமையாக இறங்கியது. இதை அடுத்து திபெத்தில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. ஆங்காகே சீனத் துருப்புகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். கலவரத்தை நிறுத்த ஆணையிடுமாறு [[சீனா]] தலாய் லாமாவிற்கு உத்தவிட்டது. ஆனால் தலாய் லாமா 'இது சுதந்திர போராட்டம்' என கூறி சீனா "திபெத்தை விட்டு வெளியேறுங்கள், இல்லையென்றால் வெளியேற்றப் படுவீர்கள்" என அறகூவல் விடுத்தார். இதனால் சீனாவின் அடக்கு முறைக்கெதிரான போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
வரிசை 95:
 
== பஞ்சென் லாமாவுக்கு உயர் பதவி ==
திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவின் செல்வாக்கை குறைப்பதற்காக தற்போதைய பஞ்சன் லாமாவுக்கு உயர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 20 வயதான பெய்ன்கென் ஏர்டினி ஊய்கிவுஜபு என்ற இயற் பெயரை கொண்ட பஞ்சென் லாமா சீனா வின் மக்கள் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த குழுவில் வர்த்தக பிரமுகர்கள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் என 2,200 பேர் இடம் பெற்றுள்ளனர். சமீப காலமாக பஞ்சன் லாமாவுக்கு சீன அரசியலில் அதிக பங்கு அளிக்கப்பட்டு வருகிறது.<ref>[http://www.thinakaran.lk/2010/03/03/_art.asp?fn=w1003037| தினகரன் இணைய நாளிதழ் செய்தி.]</ref> இதன் மூலம் திபெத்தியர்களிடையே பிளவை ஏற்படுத்தி அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அது நினைக்கிறது. தலாய் லாமாவுக்கு வயதாகிக் கொண்டு வருவதால் அவருக்குப் பின்னர் புதிய தலாய் லாமாவாக, நோர்புவை அறிவிக்கவும், தேர்ந்தெடுக்கவும் சீன அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கிழக்கு சீனாவில் நடந்த புத்தமத மாநாட்டின்போது இந்த பஞ்சன் லாமா முதல் முறையாக வெளியுலகுக்கு வந்து பேசினார்.<ref>[http://www.nitharsanam.net/?p=40416&sess=0dfd00ab950c051b16bd0bd1e8ace253 நிதர்சனம் வலை வாசல்]</ref>
== காட்சியகம் ==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/தலாய்_லாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது