"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
(→‎ஏர் ஆசியா விமானச் சேவை: - கட்டுரைக்கு நேரடித்தொடர்பில்லாத படங்கள்)
சி (clean up)
{{தகவற்சட்டம் நபர்
|name = டோனி பெர்னாண்டஸ் </br />Tony Fernandes</br />托尼 在配置
|image = Tony_Fernandes.jpg
|imagesize = 300px
|nationality = [[மலேசியர்]]
|other_names =
|known_for = ஏர் ஆசியா மலிவு விலை</br /> விமானச் சேவை நிறுவனர்;</br /> டியுன் குழுமத் தலைவர்;</br /> பார்முலா 1 கேத்தர்ஹாம் </br /> கார் பந்தய குழுமத் தலைவர்
|education = {{flag|இங்கிலாந்து}} </br />அலிஸ் ஸ்மித் பள்ளி
|employer = ஏர் ஏசியா விமான நிறுவனம்
| occupation = விமானச் சேவை தொழில் முனைவர்
}}
 
[[டான்ஸ்ரீ]] '''அந்தோனி பிரான்சிஸ் பெர்னாண்டஸ்''' CBE அல்லது '''டோனி பெர்னாண்டஸ்''' ([[மலாய்]]: ''Tony Fernandes''; பிறப்பு: 30 ஏப்ரல்1964) என்பவர் மலேசியத் தொழில்முனைவர். [[ஏர் ஏசியா]] எனும் மலிவு விலை விமானச் சேவையை உருவாக்கியவர். ''இப்போது எல்லோரும் பறக்கலாம்'' (''Now everyone can fly'') எனும் வாசகத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்.<ref>[http://en.wikipedia.org/wiki/AirAsia/ AirAsia Berhad is a Malaysian-based low-cost airline. It is Asia's largest low-fare, no-frills airline and a pioneer of low-cost travel in Asia. AirAsia group operates scheduled domestic and international flights to over 400 destinations spanning 25 countries.]</ref>
 
பெர்னாண்டஸ் பங்கு பாத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய வீட்டை அடைமானம் வைத்து வணிகத்துறையில் ஈடுபட்டார். நொடித்துப் போன ஒரு நிறுவனத்தை தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சிகளினால் நிலைநிறுத்தினார்.
 
ஆசிய நாடுகளில் பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாகத் திகழ்கின்றவர். இப்போது 88 ஏர்பஸ் விமானங்களுக்கு உரிமையாளர்.<ref>[http://en.wikipedia.org/wiki/AirAsia#Fleet/ The total AirAsia fleet (excluding Thai AirAsia, AirAsia X and Indonesia AirAsia) consists of 88 aircrafts.]</ref> மலேசியாவில் ஏறக்குறைய 9000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார்.<ref>[http://www.forbes.com/global/2010/1220/features-airasia-tony-fernandes-flying-on-budget.html/ Today AirAsia is the region's largest low-cost carrier, with nearly 8,000 employees, 100 planes and 140 routes--including 40 that no airline had served before.]</ref> டோனி பெர்னாண்டஸ் இப்போது [[மலேசியா|மலேசியப்]] பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
 
===பிறப்பும் கல்வியும்===
டோனி பெர்னாண்டஸ், [[கோலாலம்பூர்]] பொது மருத்துவமனையில் 1964 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் மையத்திற்குப் பின்னால் இருக்கும் திரேச்சர் சாலை பகுதியில் வளர்ந்தார். தற்சமயம் திரேச்சர் சாலை, ஜாலான் சுல்தான் இஸ்மாயில் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் ஐந்தாவது வயதில் இங்கிலாந்தில் உள்ள அலிஸ் ஸ்மித் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
 
டோனி பெர்னாண்டஸின் தந்தையார் ஓர் இந்தியக் குடிமகன். [[கோவா|கோவாவைச்]] சேர்ந்தவர். அவர் ஒரு மருத்துவர். வெகு நாட்களாக [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] பணிபுரிந்தார். பின்னர், சில காலத்திற்கு தொழில் மலேசியா புரிய வந்தார். வந்த இடத்தில் டோனி பெர்னாண்டஸின் தாயாரைச் சந்தித்தார். திருமணம் செய்து கொண்டார்.
 
===தாயார் எனா பெர்னானண்டஸ்===
===பிரதமருடன் சந்திப்பு===
 
2001 ஆம் ஆண்டில் ஏர் ஆசியா விமானச் சேவை மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருந்தது. அந்த விமான நிறுவனம் திவாலாகி விழுந்து சரிந்து கொண்டிருந்தது. அந்தக் கட்டத்தில் மறுபடியும் டோனி பெர்னாண்டஸ் மலிவு விலை விமானச் சேவைக்கு உரிமம் கேட்டு மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்து இருந்தார். அவருடைய விண்ணப்பம் மறுபடியும் நிராகரிக்கப்பட்டது.
 
மனம் தளராத டோனி பெர்னாண்டஸ், அப்போதைய பிரதமர் [[மஹாதிர் பின் முகமது|துன் மகாதீரைச்]] சந்திக்க அனுமதி கேட்டார். அந்த கோரிக்கையும் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது மலேசிய உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் துறை அமைச்சின் பொதுச் செயலாளராக இருந்த டத்தோ பாமின் ரெஜாப் என்பவரின் நட்பு டோனி பெர்னாண்டஸுக்கு கிடைத்தது.
 
அவர் மூலமாக பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க ஓர் அரிய வாய்ப்பும் கிடைத்தது. ''’புதிதாக ஒரு விமானச் சேவை வேண்டாம். முடிந்தால் நட்டத்தில் போய்க் கொண்டிருக்கும் ஏர் ஆசியா விமானச் சேவையை எடுத்து நடத்திப் பார். உன் அதிர்ஷ்டம்’'' என்று ஐந்தே நிமிடங்களில் பேசி டோனி பெர்னாண்டஸை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் பிரதமர் துன் மகாதீர்.
 
அப்போது டோனி பெர்னாண்டஸுக்கு வயது 37. உலகச் சாதனை ஒன்றைச் செய்யப் போகிறோம் என்று அறிந்திராத வயது. பிரதமர் துன் மகாதீரின் கருத்துகளை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு விமானச் சேவை உலகில் காலடி எடுத்து வைத்தார் டோனி பெர்னாண்டஸ்.
[[File:SkyTrax Award.jpg|thumb|right|180px|மலிவுவிலை விமானச்சேவை ஸ்கைடிராக் விருது.]]
 
2001ஆம் ஆண்டு ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு 40 மில்லியன் [[மலேசிய ரிங்கிட்|ரிங்கிட்]] கடன் இருந்தது. அந்த நிறுவனத்தை மலேசிய அரசாங்கத்தின் டி. ஆர். பி.ஹைகாம் நிறுவனம் நடத்தி வந்தது. இரண்டே இரண்டு பழைய போயிங் 737-300 ரக விமானங்கள் மட்டுமே சேவையில் இருந்தன. ஆனால், ஏர் ஆசியா விமானச் சேவையை தூக்கி நிறுத்த முடியும் என்று டோனி பெர்னாண்டஸ் நம்பினார். அந்த நிறுவனத்தை ஒரே ஒரு [[ரிங்கிட்]] மூலதனத்தில் வாங்கிக் கொண்டார்.
 
2003ஆம் ஆண்டு [[தாய்லாந்து]], [[இந்தோனேசியா]], [[சிங்கப்பூர்]] போன்ற நாடுகளுக்கு தன்னுடைய விமானச் சேவையை விரிவுபடுத்தினார். ஏர் ஆசியா விமான நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது. இப்போது 25 நாடுகளில் உள்ள 400 நகரங்களுக்கு தன் அனைத்துலகச் சேவையை வழங்கி வருகிறது. அதன் துணை நிறுவனங்களாக தாய் ஏர் ஆசியா ''(Thai AirAsia),''<ref>[http://www.budgetairlineguide.com/thai-airasia/ Thai AirAsia is a joint venture of Malaysian low-fare airline AirAsia and Thailand's Asia Aviation.]</ref> இந்தோனேசியா ஏர் ஆசியா ''(Indonesia AirAsia)''<ref>[http://en.wikipedia.org/wiki/Indonesia_AirAsia/ Indonesia AirAsia is an Indonesian associate carrier of Malaysian low-fare airline AirAsia.]</ref> எனும் இரு நிறுவனங்கள் உள்ளன.
==சாதனைகள்==
 
டோனி பெர்னாண்டஸின் மிகப்பெரிய சாதனை ஏர் ஆசியா உள்நாட்டு விமானச் சேவையை அனைத்துலக விமானச் சேவையாக மாற்றியமைத்ததே. ஏர் ஆசியா விமானச் சேவை தோற்றுவிப்பதற்கு முன்னர் ஆசிய வட்டாரத்தில் திறந்த வான்வெளி ஒப்பந்தங்கள் (''open-skies'') இல்லாமல் இருந்தது.
 
2003 ஆம் ஆண்டில் திறந்த வான்வெளி ஒப்பந்தங்கள் உருவாக்கம் பெறுவதற்கு டோனி பெர்னாண்டஸ் முழுமூச்சாக ஈடுபட்டார். அதற்கு பிரதமர் துன் மகாதீரும் உறுதுணையாக இருந்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மலிவுவிலை விமானச் சேவைகள் தோற்றம் காண்பதற்கு முன்னோடியாக இருந்தவர் டோனி பெர்னாண்டஸ். அதன் பயனாக பல மலிவுவிலை விமானச் சேவைகள் தோன்றியுள்ளன.
* பிலிப்பைன்ஸ் செபு பசிபிக் - ''Philippines's Cebu Pacific''<ref>[http://en.wikipedia.org/wiki/Cebu_Pacific/ Cebu Pacific Air is based on the grounds of Ninoy Aquino International Airport (Manila Terminal 3), Pasay City, Metro Manila, the Philippines.]</ref>
 
===பிரிட்டிஷ் அரசியாரின் விருது===
 
[[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|பிரிட்டனின் இரண்டாவது எலிசபெத் அரசியார்]], டோனி பெர்னாண்டஸுக்கு சி.பி.இ. ''(Commander of the Order of the British Empire)'' எனும் பிரித்தானிய உயர் விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.<ref>[http://anythingbeautiful.blogspot.com/2011/04/airasia-chief-conferred-cbe-commander.html/ AirAsia CEO Datuk Seri Tony Fernandes has received the Commander of the Order of the British Empire (CBE) award from Queen Elizabeth II at Buckingham Palace.]</ref> பிரிட்டனுக்கும் மலேசியாவுக்கும் இடையில் வர்த்தக, கல்வித் தொடர்புகளை மேம்படுத்துவதற்கு அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் வகையில் அந்த விருது வழங்கப்பட்டது.
 
’ஏர் ஏசியா, ட்யூன் குழுமம், லோட்டஸ் டீம் ஆகியவற்றில் உள்ள என் அனைத்துப் பங்காளிகளும் நண்பர்களும் ஊழியர்களும் வழங்கிய கடின உழைப்பு, உறுதி, விடா முயற்சி ஆகியவற்றுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் அது’ என்று டோனி பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
 
===பிரெஞ்சு அரசாங்கத்தின் விருது===
* போர்ப்ஸ் சிறந்த வணிகர் விருது 2010 (''Forbes Asia businessman of the year'')<ref>[http://www.forbes.com/global/2010/1220/features-airasia-tony-fernandes-flying-on-budget.html/ Flying On A Budget]</ref>
* 2011 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த படைப்புத் திறனாளி (''Top 100 Most Creative People in Business.'')<ref>[http://www.fastcompany.com/most-creative-people/2011/tony-fernandes-tune-group/ Malaysian entrepreneur's budget airline AirAsia has flown more than 100 million passengers.]</ref>
* பிரான்ஸ் நாட்டின் ''Legion d'Honneur Order'' விருது. <ref>[http://www.f1ezine.com/feature/tony-fernandes-legion-dhonneur/ Officier of the Legion d’ Honneur is the highest rank of honor that the government of France can award to a non-French citizen. The Legion d’ Honneur was established by Napoleon Bonaparte in 1802 to recognize outstanding service to France.]</ref>
* பிரித்தானிய அரசாங்கத்தின் ''Commander of the Order (CBE)'' விருது
* எர்னஸ்ட் யாங் தொழில் முனைவர் விருது (''Ernst & Young Entrepreneur of the Year Awards 2004.'')
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Tony Fernandes|டோனி பெர்னாண்டஸ்}}
 
* [http://www.tonyfernandesblog.com Tony Fernandes CEO Blog - டோனி பெர்னாண்டஸ் வலைதளம்]
* [http://www.businessweek.com/magazine/content/04_28/b3891409.htm BusinessWeek Online]
* [http://www.theedgedaily.com/cms/content.jsp?id=com.tms.cms.article.Article_b9ee670d-cb73c03a-174a6e20-3cacf6cf The Edge Daily]
* [http://members.forbes.com/global/2006/0605/035_2.html Forbes]
 
 
[[பகுப்பு:மலேசிய இந்தியர்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1467097" இருந்து மீள்விக்கப்பட்டது