சீரியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 93 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 58:
{{Elementbox_footer | color1=#ffbfff | color2=black }}
 
'''சீரியம்''' ([[ஆங்கிலம்]]: Cerium ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/ˈsiːriəm, ˈsɪəriəm/}}) [[அணுவெண்]] 58 கொண்ட ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இவ்வணுவின் [[அணுக்கரு]]வில் 82 [[நொதுமி]]கள் உள்ளன. [[தனிம அட்டவணை]]யில் சீரியத்தின் அணுக்குறியீடு '''Ce''' ஆகும்.
 
== குறிப்பிடத்தக்க பண்புகள் ==
சீரியம் பார்ப்பதற்கு வெள்ளிபோல் வெண்மையானது. இது [[லாந்த்தனைடு]] குழுவைச் சேர்ந்த ஒரு [[மாழை]]. இம்மாழை மென்மையானது, எளிதாக வளைந்து நெளியக்கூடியது, தட்டி கொட்டினால் தகடாகவும் வல்லது. சீரியம் 795 °C இல் நீர்மமாகி முதல் 3443 °C வரை [[நீர்மம்|நீர்மமாக]] நீடிக்கின்றது இதுவே கதிரியக்கமில்லா தனிமங்களில் மிகவும் அதிக வெப்பநிலை இடைவெளியில், அதாவது 2648 °C வெப்பநிலை இடைவெளியில், நீர்மமாக உள்ள தனிமம். இது சில [[காரக்கனிம மாழைகள்|காரக்கனிம மாழை]]க்கலவைகளில் பயன்படுகின்றது.
 
சீரியம் அரிதில் கிடைக்கும் [[காரக்கனிம மாழைகள்]] குழுவில் இருந்தாலும். இது [[ஈயம்|ஈயத்தை]] விட அதிகமாகவே பரவலாக கிடைக்கும் ஒரு தனிமம். நில உருண்டையின் மேல் ஓட்டில் மில்லியன் பங்கில் 68 பங்கு (68 ppm) என்னும் அளவில் உள்ளது
 
காரக்கனிம மாழைகளில் [[ஐரோப்பியம்]] என்னும் தனிமத்திற்கு அடுத்தாற்போல அதிக வேதியியல் வினையுறுந் தன்மை உடைய தனிமம். காற்று பட்டால் மங்கி விடுகின்றது. மென் காரக் கரைசல்களாலும், மென் மற்றும் கடும் காடிகளாலும் தாக்குறுகின்றது. குளிர்ந்த [[நீர்|நீரில்]] இருந்தால் சீரியம் மெதுவாக ஆக்ஸைடாகும். தூய சீரியத்தை காற்றுபடும் இடத்தில் வைத்து கீறினால் தீப்பிடிக்கக்கூடும்.
[[படிமம்:Cer%28IV%29(IV)-sulfat.JPG|thumb|left|250px|சீரியம் (IV) சல்பேட்டு ]]
 
சீரியம் (IV) (சீரிக் ceric) உப்புகள் மஞ்சள் கலந்த சிவப்பாகவோ மஞ்சளாகவோ காணப்படும், ஆனால் சீரியம் (III) (சீரஸ் cerous) உப்புகள் வெண்மையாகவோ நிறமில்லாமலோ இருக்கும். இரண்டு ஆக்ஸைடாகும் நிலைகளில் உள்ளவையும் [[புற ஊதாக்கதிர்]]களை நன்றாக உள்ளேற்கின்றன. கண்ணாடிகளில் சீரியம் (III) சேர்த்தால் கண்ணாடியின் ஒளியூடுருவும் பண்பை மாற்றாமல் புற ஊதாக்கதிர்களை உள்ளேற்று கடத்தாமல் தடுக்க உதவுகின்றது. எனவே புற ஊஉதாக்கதிர்களின் வடிகட்டியாக பயன்படுகின்றது. அரிதாக கிடைக்கும் காரக்கனிம கலவைகளில் சீரியம் இருந்தால் அதனை எளிதாக ஒரு சோதனை மூலம் கண்டுபிடிக்கலாம். [[அமோனியா]]வும் [[ஹைட்ரஜன் பெராக்ஸைடு|ஹைட்ரஜன் பெராக்ஸைடும்]] லாந்த்தனைடு கரைசலில் சேர்த்து அக்கலவையுடன் கூட்டினால், சீரியம் அதில் இருந்தால் கரும் பழுப்பு நிறம் தோன்றும்.
வரிசை 73:
 
காரக்கனிம தனிமங்களிலேயே மிக அதிகமாகக் கிடைக்கும் தனிமம் சீரியம்தான். இது நில உருண்டையின் புற ஓட்டின் எடையில் 0.0046% ஆகும். சீரியம் கிடைக்கும் கனிமங்கள்: [[அல்லனைட்]] (allanite) அல்லது (ஆர்த்தைட்) என்றழைக்கப்படும் கனிமம் —(Ca, Ce, La, Y)<sub>2</sub>(Al, Fe)<sub>3</sub>(SiO<sub>4</sub>)<sub>3</sub>(OH), [[மோ னாசைட்]] (monazite) (Ce, La, Th, Nd, Y)PO<sub>4</sub>, [[பாஸ்ட்னாசைட்]] (bastnasite) (Ce, La, Y)CO<sub>3</sub>F, [[ஹைட்ராக்ஸைல்]][[பாஸ்ட்னாசைட்]](hydroxyl)(bastnasite) (Ce, La, Nd)CO<sub>3</sub>(OH, F), [[ராப்டொஃவேன்]](rhabdophane) (Ce, La, Nd)PO<sub>4</sub>-H<sub>2</sub>O, [[சிர்க்கோன்]](zircon) (ZrSiO<sub>4</sub>), சின்ச்சிசைட் (synchysite) Ca(Ce, La, Nd, Y)(CO<sub>3</sub>)<sub>2</sub>F ஆகும்.மோனாசைட்டும் பாஸ்ட்னாசைட்டும் சீரியம் பெறுவதற்கு தற்பொழுது இரண்டு முதன்மையான கனிமங்களாகும்
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
 
[[பகுப்பு:தனிமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீரியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது