மின்னூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
[[படிமம்:min pulam selva.jpg|thumb|300px|நேர்மின்மத்திற்கும் எதிர்மின்மத்திற்கும் இடையே உள்ள மின்புலம் காட்டப்பட்டுள்ளது. மின்புலமானது தன் விசையை நேர்மின்மத்தில் தொடங்கி எதிர்மின்மத்தில் முற்றுப்பெறுவதாகக் கொள்ளுவது மரபு. [[மின்புலம்]] அதிகமாக உள்ள பகுதியை மஞ்சள் நிறத்தில் காணலாம். ஒரு மின்மத்தைச் சூழ்ந்து எல்லாப் புறமும் மின்புலம் உண்டு .]]
[[படிமம்:forces on charges Selva.jpg|thumb|300px|மின்மங்களுக்கு இடையே நிலவும் விசை வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. படம் ('''அ'''): இரு நேர்மின்மங்களுக்கு இடையே நிலவும்''' விலகு விசை'''யைக் காட்டுகின்றது. படம் ('''ஆ'''): இரு ''எதிர்மின்மங்களுக்கு'' இடையே நிலவும் விலகுவிசையைக் காட்டுகின்றது. படம் ('''இ'''): மாறுவகையான மின்மங்களுக்கு இடையே நிலவும் '''ஈர்ப்புவிசை'''யைக் காட்டுகின்றது]] மேலும் ஐதரசனைத் தவிர மற்ற எல்லா வகை அணுவின் கருவினுள்ளேயும் மின்மம் ஏதும் இல்லா ஒருவகைத் துகளும் உண்டு அதற்கு நொதுமின்னி அல்லது [[நொதுமி]] என்று பெயர். நொது என்னும் சொல் ''எப்பக்கமும் சேராப் பொது'' என்று பொருள் படும். மின்மம் ஏதுமில்லாததால் நொதுமிகள் மின்மத்தால் எவ்விசைக்கும் உட்படாது. மின்மம் உடைய ஒரு பொருளானது மின்மம் உள்ள மற்றொரு பொருளைத்தான் தன் மின்புலத்தால் விசைக்குள்ளாக்கும்.
'''மின்மம்''' அல்லது '''மின்னூட்டம்''' (''electric charge'') என்பது ஒரு பொருளைச் சுற்றி ஒருவகையான விசைப்புலம் தோற்றுவிக்கும் அடிப்படையான ஒன்றாகும். இவ்விசைப் புலத்தை [[மின்புலம்]] என்பர். இம் மின்மமானது அடிப்படையில் [[அணு]]வின் உட்கூறுகளில் ''இயல்பாகவே'' இருப்பதாகும். எல்லாப்பொருளும் அணுக்களால் ஆனவை. [[ஐதரசன்]] அணுவைத் தவிர்த்த மற்ற எல்லா அணுக்களும் மூன்று வகையான '''துகள்'''களால் ஆக்கப்பட்டவை என்று கருதலாம். இங்கு துகள் எனப்படுவது அணுவின் உட்கூறு ஆகும். ஐதரசனில் மட்டும் இரண்டே இரண்டு வகையான துகள்கள் தாம் உள்ளன. ஓர் அணுவில் உள்ள இந்த மூன்று வகைத் துகள்களில் இரண்டு வகைத் துகள்களானவை, இரு வேறு வகை மின்மம் கொண்டவை. ஒருவகை, அணுவின் கருவில் உள்ளது. இதனை [[நேர்மின்னி]] என்பர். இந்த நேர்மின்னி தன்னகத்தே இயல்பாகக் கொண்டிருக்கும் இவ் வகையான மின்மத்தை ''நேர்மின்மம்'' என்பர். இதனைக் கூட்டல் குறி (<big>''' +'''</big> ) இட்டுக் காட்டுவர்.
 
மற்றொரு வகைத் துகள் அணுக்கருவைச் சுற்றிப் பல்வேறு சுற்றுப் பாதைகளில் உலா வரும் ஒன்று. இவற்றை [[எதிர்மின்னி|எதிர்மின்னிகள்]] என்பர். இவ் எதிர்மின்னிகள் தன்னியல்பாய்க் கொண்டிருக்கும் மின்மத்தை ''எதிர்மின்மம்'' என்பர். இதனைக் கழித்தல் குறி (<big> '''-''' </big>) இட்டுக் காட்டுவர். எனவே அணுக்கருவில் உள்ள நேர்மின்னியின் நேர்மின்மப் பரும அளவும், அணுக்கருவைச் சுற்றி உலா வரும் எதிர்மின்னியின் எதிர்மின்மப் பரும அளவும் ஒன்றே ஆகும், ஆனால் அவை எதிர்-எதிர் இயல்பு (வகை) கொண்டவை. எதிரெதிர் இயல்பு கொண்ட மின்மங்கள் ஒன்றை ஒன்று ''ஈர்க்கும்'' பண்பு கொண்டவை. இதனிடையே'' ஈர்ப்பு விசை'' இருக்கும். ஒரே வகை மின்மம் கொண்ட பொருள்கள் ஒன்றை ஒன்று உந்தி விலக்கும் பண்பு கொண்டவை. இவையிடையே ''விலகுவிசை'' இருக்கும். மின்மத்தால் வினைப்படும் விசைக்குக் ''கூலாம் விசை'' என்பர். கூலாம் என்பது மின்மத்தைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடியான [[பிரான்சு|பிரான்சிய]] அறிவியலாளர் ஒருவரின் பெயர். (பார்க்க: [[கூலாம்|சார்லசு அகசிட்டின் டெ கூலாம்]]) இவைகளைப் படத்தில் காணலாம்.
 
[[படிமம்:forces on charges Selva.jpg|thumb|300px|மின்மங்களுக்கு இடையே நிலவும் விசை வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன. படம் ('''அ'''): இரு நேர்மின்மங்களுக்கு இடையே நிலவும்''' விலகு விசை'''யைக் காட்டுகின்றது. படம் ('''ஆ'''): இரு ''எதிர்மின்மங்களுக்கு'' இடையே நிலவும் விலகுவிசையைக் காட்டுகின்றது. படம் ('''இ'''): மாறுவகையான மின்மங்களுக்கு இடையே நிலவும் '''ஈர்ப்புவிசை'''யைக் காட்டுகின்றது]] மேலும் ஐதரசனைத் தவிர மற்ற எல்லா வகை அணுவின் கருவினுள்ளேயும் மின்மம் ஏதும் இல்லா ஒருவகைத் துகளும் உண்டு அதற்கு நொதுமின்னி அல்லது [[நொதுமி]] என்று பெயர். நொது என்னும் சொல் ''எப்பக்கமும் சேராப் பொது'' என்று பொருள் படும். மின்மம் ஏதுமில்லாததால் நொதுமிகள் மின்மத்தால் எவ்விசைக்கும் உட்படாது. மின்மம் உடைய ஒரு பொருளானது மின்மம் உள்ள மற்றொரு பொருளைத்தான் தன் மின்புலத்தால் விசைக்குள்ளாக்கும்.
மேலும் ஐதரசனைத் தவிர மற்ற எல்லா வகை அணுவின் கருவினுள்ளேயும் மின்மம் ஏதும் இல்லா ஒருவகைத் துகளும் உண்டு அதற்கு நொதுமின்னி அல்லது [[நொதுமி]] என்று பெயர். நொது என்னும் சொல் ''எப்பக்கமும் சேராப் பொது'' என்று பொருள் படும். மின்மம் ஏதுமில்லாததால் நொதுமிகள் மின்மத்தால் எவ்விசைக்கும் உட்படாது. மின்மம் உடைய ஒரு பொருளானது மின்மம் உள்ள மற்றொரு பொருளைத்தான் தன் மின்புலத்தால் விசைக்குள்ளாக்கும்.
 
== வரலாறு ==
மிகப் பழங்காலத்திலேயே (அணுவின் துகள்களைப் பற்றி அறியத் தொடங்கிய 19 ஆம் நூறாண்டுக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னமே), சுமார் கி.மு.600 காலப்பகுதியில் [[தாலஸ்|தாலசு]] என்னும் [[கிரேக்கம்|கிரேக்க]] அறிஞர் மின்மம் பற்றிய சில அரிய கண்டுபிடிப்புகளை எழுதியுள்ளார். திண்மமாய் மாறிய, மஞ்சள் நிறத்தில் காணப்படும், மரப்பிசினாகிய [[அம்பர்]] என்னும் பொருளை ஒரு துணியில் தேய்த்தால், அது சிறு சிறு செத்தைகள், முடி போன்றவற்றை ஈர்ப்பதை அறிந்திருந்தார். கி.மு.300 காலப்பகுதியில் வாழ்ந்த [[பிளாட்டோ]] என்பாரும், அம்பரின் இந்தப் பண்பைப் பற்றி எழுதியுள்ளார். பிற்காலத்தில், கி.பி. 1600களில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசி [[எலிசபெத்-1]] அவர்களின் மருத்துவராகிய [[வில்லியம் கில்பர்ட்]] என்பாரும் அம்பர் மட்டுமல்லாமல், வைரம், கண்ணாடி, மெழுகு, கந்தகக் கட்டி முதலியனவும் அதே பண்பு கொண்டிருப்பதை அறிந்தார் அறிந்து எழுதினார். [[கிரேக்க மொழி]]யில் அம்பருக்கு ''எலெக்ட்ரம்'' என்று பெயர், இதன் அடிப்படையிலேயே மின்மப் பண்பு காட்டும் பொருட்களுக்கு மேற்குலக மொழிகளில் ''எலெக்ட்ரிக்ஃசு'' (electrics) என்றும், அதன் அடிப்படையில் சர் தாமசு பிரௌன் (Sir Thomas Browne), ''மின்சாரம்'' என்பதற்கு ''எலெக்ட்ரிசிட்டி'' (electricity) என்னும் சொற்களும் ஆக்கினர். பின்னர் 1729 ஆம் ஆண்டு காலப்பகுதியில், பிரான்சின் டு ஃவே (Du Fay) என்பார் மின்மங்கள் ஓட்டத்தில் ''இருவகை'' இருப்பதாகக் கண்டார். 1785 ஆம் ஆண்டு [[பிரான்சு]] நாட்டில் இராணுவப் பொறியியல் அலுவலராகப் பணிபுரிந்த [[கூலாம்|சார்லசு டெ கூலாம்]] என்பார் தான் கண்டுபிடித்திருந்த நுண்மையான முறுக்குத் தராசு மூலம் சோதனைகளைக் கையாண்டு இறுதியில், மின்மங்களுக்கு இடையே நிலவும் விசைகள் பற்றிய, துல்லியமான தொடர்பாடுகளை நிறுவினார். மின்மங்களுக்கு இடையே உள்ள மின்விசையை அளந்து ஓர் அடைப்படையான சமன்பாட்டை நிறுவி அதனைப் பல உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அனுப்பினார். இதற்கு [[கூலாம் விதி]] என்று பெயர். மேலும் இதில் வியக்கத்தக்க ஒன்று என்னவெனில் நியூட்டனின் புவி ஈர்ப்பு விதிக்கும் கூலாம் விதிக்கும் இடையே காணப்பட்ட மிகத்துல்லியமான ஒற்றுமையே ஆகும்.
 
== ஓரின, மின்மங்கள் ஒன்றையொன்று விரட்டும். வேரினவேறின மின்மங்கள் ஒன்றையொன்று கவரும் - சோதனையியல் சரிபார்ப்பு : ==
 
பட்டு இழையால் தொங்கவிடப்பட்ட மின்னூட்டப்பட்ட கண்ணாடித் தகடு ஒன்று கிடைத்தளத்தில் அலைவுறுகிறது. தற்போது அதன் முனைக்கருகில் மற்றொரு மின்மம் பெற்ற கண்ணாடித்தண்டு கொண்டு வரப்பட்டால் , இரு முனைகளும் ஒன்றையொன்று விரட்டுவதைக் காணலாம். இருந்த போதிலும் மின்னூட்டப்பட்ட எபொனைட் தண்டானது, தொங்கவிடப்பட்ட கண்ணாடித் தண்டின் முனைக்கருகில் கொண்டு வரப்பட்டால் , இரு தண்டுகளும் ஒன்றையொன்று கவர்கின்றன. இச்சோதனை மூலம் ஓரின மின்மங்கள் ஒன்றையொன்று விரட்டும் , வேரின மின்மங்கள் ஒன்றையொன்று கவரும் எனத் தெரிய வருகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/மின்னூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது