அறுதியின்மைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sundar பயனரால் ஐயப்பாட்டுக் கொள்கை, அறுதியின்மைக் கொள்கை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ள...
சிNo edit summary
வரிசை 1:
'''அறுதியுறாமைக் கொள்கை''' அல்லது '''அறுதியின்மைக் கொள்கை''' (''Uncertainty principle'') என்பது குவாண்டம் இயக்கவியலில், குறிப்பிட்ட இயற்பியப் பண்பு இணைகளைத் துல்லியமாக அறிதலில் உள்ள அடிப்படை வரையறையைக் குறிக்கும் ஒரு சமனிலி ஆகும். குவாண்டம் இயற்பியலில், [[வேர்னர் ஹெய்சன்பர்க்|ஹெய்சன்பர்க்]] ஐயப்பாட்டுக் கொள்கை பின்வருமாறு கூறுகிறது: "ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு [[துகள்|துகளின்]] அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் [[உந்தம்|உந்தத்தை]] ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது".
 
குவாண்டம் பொறிமுறையில், துகள்களின் உந்தத்துக்கும், அமைவிடத்துக்கும் துல்லியமான பெறுமானங்கள் கிடையா, ஆனால் [[நிகழ்தகவுப் பரம்பல்]] மட்டுமே உண்டு. ஒரு துகளின் நிச்சயமான இடமும், நிச்சயமான உந்தமும் கொண்ட நிலைகள் எதுவும் கிடையா. அமைவிடம் தொடர்பாகக் குறுகிய நிகழ்தகவுப் பரம்பல் இருக்கும்போது, உந்தம் தொடர்பான நிகழ்தவுப் பரம்பல் அகன்றதாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/அறுதியின்மைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது