[[வெப்ப இயக்கவியல்|வெப்ப இயக்கவியலில்]], '''அக ஆற்றல்''' (''internal energy'') என்பது ஒரு வெப்பவியக்கவியல் அமைப்பு ஒன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள மொத்த [[ஆற்றல்]] ஆகும்.<ref name=atkins>{{cite book|title=Physical Chemistry|author=Peter Atkins, Julio de Paula|page=9|edition=8|publisher=Oxford[[ஒக்ஸ்போர்ட் Universityபல்கலைக்கழகப் Pressபதிப்பகம்]]|year=2006}}</ref> அக ஆற்றலை இரு பாகங்களாக பிரிக்கலாம், துகள்களின் [[இயக்க ஆற்றல்]] மற்றும் [[நிலை ஆற்றல்]]. துகள்களின் இயக்க ஆற்றல், ஒர் அமைப்பின் துகள்களின் இடப்பெயர்ச்சி, [[சுழற்சி]], [[அலைவு|அதிர்வு]] ஆகிய இயக்கம் காரணமாக அமையும் ஆற்றல். துகள்களின் நிலை ஆற்றல், [[மூலக்கூறு]]களின் உள்ளே உள்ள அணுக்களின் மின் ஆற்றல் மற்றும் [[வேதியியற் பிணைப்பு|வேதிப் பிணைப்பு]]களின் ஆற்றல் ஆகும். ஒரு அமைப்பின் அக ஆற்றலை அவ்வமைப்பை வெப்பமூட்டியோ அல்லது அவ்வமைப்பின் மீது [[வேலை (இயற்பியல்)|வேலை]] செய்தோ மாற்றலாம்; அமைப்பு அதன் சுற்றுப்புறங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது என்றால், அதன் அக ஆற்றலை மாற்ற முடியாது.