கோலுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்பு
சிNo edit summary
வரிசை 41:
'''கோலுயிரி''' அல்லது '''கோலுரு பாக்டீரியா''' அல்லது '''கோலுரு நுண்ணுயிர்''' (Bacillus) என்பது குச்சி அல்லது கோல் போன்ற உருவத்தையுடைய பசிலசு (Bacillus) எனும் [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தைச்]] சேர்ந்த [[பாக்டீரியா]]க்கள் ஆகும். இந்த பேரினத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் [[கிராம்-நேர் பாக்டீரியா]]க்கள் ஆகும். இவை கட்டாயமான [[காற்றுவாழ் உயிரினம்|காற்றுவாழ்]] (Aerobic organism), அல்லது அமையத்துக்கேற்ற [[காற்றின்றிவாழ் உயிரினம்|காற்றின்றிவாழ்]] (Anaerobic organism) [[உயிரினம்|உயிரினமாக]] இருக்கும்.
 
பாக்டீரியாக்கள் [[உருவவியல்]] அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்படும்போது, அவற்றில் ஒரு வகையாக இந்தக் கோலுயிரி ([[:en:Bacillus (shape)|Bacillus]]) என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய இரு வகைகளும் [[கோளவுயிரி]] ([[:en:Coccus|Coccus]]), [[சுருளியுயிரி]] ([[:en:Spirillum|Spirillum]]) என்பனவாகும். பொதுக் கருத்தைக் கொள்கையில், உருவவியல் அடிப்படையில், அனைத்து கோல் வடிவ உயிரினமும் கோலுயிரிகளே. எனவே கோல் வடிவம் கொண்ட அனைத்து உயிரினங்களும், பொதுவில் கோலுயிரி என்று அழைக்கப்பட முடியுமென்பதனால், இந்தச் சொல் சிலசமயம் கருத்து மயக்கத்தைத் தரக் கூடும். எடுத்துக் காட்டாக [[எசரிக்கியா கோலை]] என்ற [[கிராம்-எதிர் பாக்டீரியா]] கோல் வடிவில் இருப்பதனால், பொதுக் கருத்தில் கோலுயிரி என அழைக்கப்பட முடியுமாயினும், இந்த பாக்டீரியா பசிலசு பேரினத்தைச் சார்ந்ததல்ல.
[[பகுப்பு:பாக்டீரியாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோலுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது